SBS Tamil - SBS தமிழ்

SBS Tamil - SBS தமிழ்

Independent news and stories from SBS Audio, connecting you to life in Australia and Tamil-speaking Australians. - தமிழ் பேசும் ஆஸ்திரேலியர்களுடனும், ஆஸ்திரேலிய வாழ்க்கையுடனும் இணைய உங்களுக்கு உதவும் பக்கசார்பற்ற செய்திகள் மற்றும் கதைகள்.

Episodes

Did you know that people offering taxi services from home need to register for Goods and Services Tax (GST)—regardless of how much they earn? Or that a fitness instructor needs local council approval to see clients at home? In this episode, we unpack the basic rules you need to know when setting up a home-based business in Australia. - உங்கள் வீட்டிலிருந்தபடியே வணிகமொன்றைத் தொடங்கும்போது கருத்தில் கொள்ள வேண்டிய அடிப்படை விதிமுறைகள்...
Mark as Played
ஆஸ்திரேலியாவின் குயின்ஸ்லாந்தில் உலகின் மிகவும் பழமையான, யுனெஸ்கோ உலக பாரம்பரிய தளமாக அறிவித்துள்ள, Daintree Rainforest அமைந்துள்ளது. இது குறித்த தகவல்களைத் தருகிறார் உயிர்மெய்யார்.
Mark as Played
உங்களால் ஒரே நேரத்தில் உங்களைச் சுற்றி நிகழக்கூடிய பல்வேறு விஷ‌யங்களைக் கவனத்தில் வைத்துக்கொள்ள முடியுமா?சாதராணமாகத் தன்னைச் சுற்றி நிகழும் பதினாறு விஷ‌யங்களைக் கவனத்தில் வைத்திருக்க ஒரு கவனகரால் முடியும். இவ்வாறு செய்வது ஒரு கலை. நம் பண்டைய தமிழரிடம் இருந்த கலை. நினைவாற்றலின் உயர்ந்த வடிவமான இந்தக் கலைத்திறனை, இராம.கனக சுப்புரத்தினம் நன்கு அறிந்து வைத்திருக்கிறார். இது குறித்து மற்றவர்களுக்கும் கற்றுக் கொடுக்கிறார்.இராம.கனக சுப்பு...
Mark as Played
தற்போது தொடங்கியுள்ள பாடசாலை விடுமுறை காலத்தில், விமானப் பயணங்களை திட்டமிடும் ஆஸ்திரேலியர்கள், தங்களுடன் எடுத்துச் செல்லும் லித்தியம் பேட்டரிகள் கொண்ட power bank உள்ளிட்ட சாதனங்களை எடுத்துச் செல்வதில் உள்ள விதிமுறைகள் மற்றும் அபாயங்களை நினைவில் கொள்ள வேண்டும் என அறிவுறுத்தப்படுகிறது. சமீபத்தில் சில விமான நிறுவனங்கள் இதற்கான விதிமுறைகளை கடுமையாக்கியுள்ளன. இது குறித்த செய்தியின் பின்னணியை தயாரித்து வழங்குகிறார் செல்வி.
Mark as Played
SBS தமிழ் ஒலிபரப்பின் இன்றைய (வெள்ளிக்கிழமை 11/07/2025) செய்திகள். வாசித்தவர் குலசேகரம் சஞ்சயன்.
Mark as Played
இலங்கையின் புதிய அரசாங்கத்திலும் தமிழர் பகுதியில் தொடரும் சிங்கள குடியேற்றம் என்று நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அவர்களின் குற்றச்சாட்டு; செம்மணியில் தொடரும் அகழ்வில் 60 க்கும் மேற்பட்ட மனித உடல்கள் கண்டெடுப்பு; செம்மணி மற்றும் ஈஸ்டர் குண்டுத் தாக்குதல் போன்றவற்றுக்கு சர்வதேச விசாரணை வேண்டும் என்று நாடாளுமன்றத்தில் வலியுறுத்தப்பட்டிருப்பது உள்ளிட்ட செய்திகளோடு “செய்தியின் பின்னணி” நிகழ்ச்சிக்காக விவரணமொன்றை முன்வைக்கிறார் நமது இலங்...
Mark as Played
காசா பேச்சுவார்த்தை; செங்கடலில் சரக்கு கப்பல் மீது தாக்குதல் நடத்திய ஹவுதி கிளர்ச்சியாளர்கள்; அமெரிக்காவில் பெரு வெள்ளம்; ஐரோப்பியாவில் வெப்ப அலை; பிரிக்ஸ் நாடுகளுக்கு கூடுதல் வரி- டிரம்ப் எச்சரிக்கை; கென்யாவில் தீவிரமடையும் போராட்டம்; துருக்கிக்கு எதிரான ஆயுதப் போராட்டம் முடிவுக்கு வந்ததாக அறிவித்துள்ள குர்திஸ்தான் தொழிலாளர் கட்சி உள்ளிட்ட உலகச்செய்திகளின் பின்னணியை முன்வைக்கிறார் நமது தமிழக செய்தியாளர் தமிழ்ப் பிரபாகரன்.
Mark as Played
July 10, 2025 5 mins
இருபதாம் நூற்றாண்டில் யாழ்ப்பாணம் தந்த பெரும் புலவர் நவாலியூர் சோமசுந்தரப்புலவர். ஈழத்தமிழ் கவிதை வரலாற்றில் சிறுவர்பாடல்களால் முக்கியத்துவம் பெற்று “தங்கத்தாத்தா” என்று செல்லமாக அழைக்கப்பட்ட நவாலியூர் சோமசுந்தரப் புலவர் அவர்களின் நினைவுதினம் ஜூலை மாதம் 10 ஆம் தேதி அனுசரிக்கப்படுகிறது. அவர் இவ்வுலகைவிட்டுச் சென்றாலும் அவர் விட்டுச்சென்ற இலக்கியங்கள் தமிழ் வாழும்வரை வாழ்ந்து கொண்டே இருக்கும். “காலத்துளி” நிகழ்ச்சியை முன்வைக்கிறார் ற...
Mark as Played
உளவியல் நோய்களில் ஒன்றான PTSD என்று அழைக்கப்படும் Post Traumatic Stress Disorder அதிர்ச்சிக்கு பின் ஏற்படுகின்ற மன அழுத்த கோளாறு பற்றி விளக்குகிறார் சிட்னியில் மனநல மருத்துவராக பணியாற்றும் டாக்டர் துரைரட்ணம் சிவரூபன். அவரோடு உரையாடுபவர் செல்வி
Mark as Played
விக்டோரியா மாநிலம் தெற்கு கிப்ஸ்லாந்தில் கடந்த 2023இல் நச்சுக் காளான்களை சமைத்துக்கொடுத்து மூன்று பேரை கொலை செய்த குற்றச்சாட்டில் Erin Patterson குற்றவாளி என தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது. Erin Patterson யார் அவரின் பின்னணி என்ன? இது குறித்த செய்தியின் பின்னணியை தயாரித்து வழங்குகிறார் செல்வி.
Mark as Played
இது NAIDOC வாரம். National Aborigines and Islanders Day Observance Committee, என்பதன் சுருக்கம் தான் NAIDOC. 2015ஆம் ஆண்டின் Australian of the Year விருதுக்கான தேர்வில் மேற்கு ஆஸ்திரேலியாவில் இறுதிச் சுற்றில் தேர்வு பெற்றவரும், Australian e-Health Research Centreஇல் ஆராய்ச்சியாளராகவும், Harvard பல்கலைக்கழகத்திலும் Notre Dame பல்கலைக்கழகத்திலும் பேராசிரியராகக் கடமையாற்றும் பேராசிரியர் கனகசிங்கம் யோகேசன், பூர்வீக மக்களுடன் கண்பார்வை ...
Mark as Played
SBS தமிழ் ஒலிபரப்பின் இன்றைய (வியாழக்கிழமை 10/07/2025) செய்திகள். வாசித்தவர் : செல்வி.
Mark as Played
புரதச்சத்து உடலுக்குத் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த ஒரு ஊட்டச்சத்தாகும். இது தசைகள், எலும்புகள், தோல் மற்றும் உடல் செல்கள் அனைத்திற்கும் அடிப்படையாகும். குறிப்பாக, வயதான பெண்களுக்கு புரதச்சத்து ஏன் முக்கியம், நமது உணவில் அதனை எவ்வாறு எடுப்பது போன்ற பல கேள்விகளுக்கு பதில் தருகிறார் பெர்த் நகரில் உடல் எடை குறைப்பு ஆலோசனை சேவை வழங்கி வரும் Flexinutria நிறுவனத்தின் நிறுவனர் ஊட்டச்சத்து நிபுணர் மாலதி பச்சியப்பன் அவர்கள். அவரோடு உரையாட...
Mark as Played
வாழ்க்கைச் செலவு நெருக்கடிக்கு உதவும்வகையில் 250 டொலர்களுக்கு புதிய Washing Machine-சலவை இயந்திரத்தை வழங்கும் திட்டத்தை NSW அரசு நடைமுறைப்படுத்தியுள்ளது. இதுகுறித்த செய்தியை எடுத்துவருகிறார் றேனுகா துரைசிங்கம்.
Mark as Played
உடல் உறுப்பு மற்றும் திசு தானத்தின் முக்கியத்துவம் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த அர்ப்பணிக்கப்பட்டுள்ள வாரம், DonateLife வாரம் ஆகும். இந்த ஆண்டு, ஜூலை 27ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை முதல் ஆகஸ்ட் 3ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை வரை DonateLife வாரம் நடைபெறுகிறது. இந்த முக்கியமான வாரத்தின் ஒரு பகுதியாக, விக்டோரியா மாநிலத்தின் Robinvale என்ற இடத்தில் வாழும் பீஜே குடும்பத்தின் எழுச்சியூட்டும் பயணத்தை நாம் பகிர்ந்து கொள்கிறோம்.
Mark as Played
NAIDOC வாரம் (National Aboriginal and Islanders Day Observance Committee வாரம்) ஆஸ்திரேலியாவின் பூர்வீகக்குடியின மக்களின் பன்முகத்தன்மையும், அவர்களது கலை, கலாச்சாரம், சமூக பங்களிப்புகளும் கொண்டாடப்படும் முக்கியமான வாரமாகும். இந்த ஆண்டு NAIDOC வாரம் ஜூலை 6 முதல் 13ஆம் தேதி வரை கொண்டாடப்படுகிறது. இது குறித்த செய்தியின் பின்னணியை தயாரித்து வழங்குகிறார் செல்வி.
Mark as Played
கடலூரில் பள்ளி வாகனம் மீது ரயில் மோதி விபத்து; ரிதன்யா தற்கொலை விவகாரம்; பாஜகவுடன் கூட்டணி- அதிமுகவின் விளக்கம்; சிவகங்கை இளைஞர் கொலை செய்யப்பட்ட சம்பவம்; இந்தியா- பாகிஸ்தான் போரை நிறுத்தியதாக தொடர்ந்து கூறும் டிரம்ப்; மிசோரமில் தஞ்சமடையும் மியான்மர் அகதிகள் உள்ளிட்ட செய்திகளின் பின்னணியை முன்வைக்கிறார் நமது தமிழக செய்தியாளர் தமிழ்ப் பிரபாகரன்.
Mark as Played
SBS தமிழ் ஒலிபரப்பின் இன்றைய (புதன்கிழமை 09/07/2025) செய்திகள். வாசித்தவர் : செல்வி.
Mark as Played
நியூ சவுத் வேல்ஸ் அரசுக்கும் ரயில் தொழிற்சங்கத்துக்கும் இடையிலான பேச்சுக்கள் வெற்றிகரமாக முடிவடைந்துள்ளதைத் தொடர்ந்து இரு நாட்களுக்கு மட்டுமான இலவச பயணச் சலுகை அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்த செய்தியை எடுத்துவருகிறார் றேனுகா துரைசிங்கம்.
Mark as Played
ஆஸ்திரேலியாவின் அதிகாரபூர்வ வட்டி வீதம் குறித்த தனது முடிவினை ரிசர்வ் வங்கி இன்று அறிவித்தது. இதுகுறித்த செய்தியை எடுத்துவருகிறார் றேனுகா துரைசிங்கம்.
Mark as Played

Popular Podcasts

    If you've ever wanted to know about champagne, satanism, the Stonewall Uprising, chaos theory, LSD, El Nino, true crime and Rosa Parks, then look no further. Josh and Chuck have you covered.

    Dateline NBC

    Current and classic episodes, featuring compelling true-crime mysteries, powerful documentaries and in-depth investigations. Follow now to get the latest episodes of Dateline NBC completely free, or subscribe to Dateline Premium for ad-free listening and exclusive bonus content: DatelinePremium.com

    Las Culturistas with Matt Rogers and Bowen Yang

    Ding dong! Join your culture consultants, Matt Rogers and Bowen Yang, on an unforgettable journey into the beating heart of CULTURE. Alongside sizzling special guests, they GET INTO the hottest pop-culture moments of the day and the formative cultural experiences that turned them into Culturistas. Produced by the Big Money Players Network and iHeartRadio.

    The Breakfast Club

    The World's Most Dangerous Morning Show, The Breakfast Club, With DJ Envy And Charlamagne Tha God!

    The Clay Travis and Buck Sexton Show

    The Clay Travis and Buck Sexton Show. Clay Travis and Buck Sexton tackle the biggest stories in news, politics and current events with intelligence and humor. From the border crisis, to the madness of cancel culture and far-left missteps, Clay and Buck guide listeners through the latest headlines and hot topics with fun and entertaining conversations and opinions.

Advertise With Us
Music, radio and podcasts, all free. Listen online or download the iHeart App.

Connect

© 2025 iHeartMedia, Inc.