All Episodes

December 8, 2025 60 mins

Get ready for one full hour (60 minutes) of enriching, non-stop wisdom! This special compilation features 6 classic Tamil moral stories drawn from three major sources of wisdom: AathichoodiThirukkural (Thirukural), and Proverb Stories (Pazhamozhi Kathaigal).

This collection is perfect for teaching children about patience, avoiding anger, the importance of effort, seeking knowledge, and recognizing true wisdom. Use it for bedtime, long drives, or focused family listening.

🎧 Stories Included in this Wisdom Collection (Timestamps):

  • 00:00 - Intro

  • 07:30 - காட்டில் கோவில் மணி (Kaattil Kovil Mani) | The Temple Bell in the Forest

  • 10:46 - களைந்த வேஷம் (Kalantha Vesham) | The Discarded Disguise

  • 20:28 - மூன்று கேள்விகள் (Moondru Kelvigal) | The Three Questions

  • 30:28 - அறிவில் சிறந்தவர் (Arivil Sirandhavar) | The Wisest Person

  • 39:26 - எலியும் அணிலும் (Eliyum Anilum) | The Mouse and the Squirrel (Proverb Story)

  • 49:14 - கோபக்கார முனிவர் (Kobakkara Munivar) | The Angry Sage

Keywords: Tamil Moral Stories, Aathichoodi Stories, Thirukkural Stories, Proverb Stories, 1 Hour Stories, Tamil Wisdom, Non-Stop Kids Stories, Kadhaineram.

❤️ Love this 1-hour collection? Please Follow the show and Save this episode to your library!

Mark as Played
Transcript

Episode Transcript

Available transcripts are automatically generated. Complete accuracy is not guaranteed.
(00:00):
கத கேளுங்க மறக்காம ரேட்டிங் குடுங்க.
ப்ளேலிஸ்ட் பேஜ் அ விசிட். பண்ணுங்க நம்ம பாட்காஸ்ட் ஷேர்
பண்ணுங்க. ஆத்துச்சுடி கதைகள்.
காட்டில். கோவில் மணி.

(00:20):
சென்னைக்கு பக்கத்துல மகாபலிபுரம்அப்படின்னு ஒரு ஊர் இருக்கு.
இந்த ஊர சுத்தி காடலும் காடு முண்டு.
பல வருஷங்களுக்கு முன்னாடி இந்த காட்டு.
பகுதிக்கு பக்கத்துல. ஒரு கிராமத்துல திருடன் ஒருத்தன்
வாழ்ந்துண்டு வந்தா அந்த திருடனும் எத பாத்தாலும்

(00:41):
படக்குன்னு போய் திருடி காட்டுக்கு பக்கத்துல இருந்த வேற
ஒரு கிராமத்துல அத வித்து தன்னோட வாழ்க்கை நடத்திட்டு வந்தா.
ஒரு நாள் இந்த திருட இந்த காட்டுக்கு பக்கத்துல இருந்த
கிராமம் ஒன்னுல்ல நடந்து போயிட்டுஇருந்தா அப்படி போயிட்டு
இருக்கும்போது. டிங் டிங் டிங் டிங்.

(01:02):
அப்படின்னு கோவில்ல 1 மணி ஓசை கேட்டுச்சு.
அத கேட்டதும் இவன் மனசுல ஆஹா. இது என்னது இவ்வளவு அற்புதமா
இருக்கு இந்த மணி யோசை இந்த மணிய கொண்டு போய் நம்ம வித்துன்னா ஒரு
வாரத்துக்கு நம்ம திருட வேண்டிய அவசியமே இல்ல அப்படின்னு நினைச்சா

(01:22):
உடனே அந்த கோவிலுக்கு போய் சாமி கும்புடுறது போல நின்னா.
நல்லா சாமி கும்பிட்டு முடிச்சதும் சாமி நானு உங்க
கோவில்ல இருக்குற மணிய. திருடிட்டு போய் விக்க.
போறேன் எனக்கு எந்த. பிரச்சனையும் வராம பாத்துக்கோங்க.
அப்படின்னு அந்த கோவில்ல இருந்த. சாமி கிட்டயே வேண்டிக்கிட்டு.
இருந்தா இவன். அப்புறமா அப்படியே பொறுமையா

(01:45):
சுத்திமுத்தி. பாத்துட்டு.
யாரும் இல்லாத சமயமா பாத்து இந்த மணிய லபக்குனு திருடிட்டு
அப்படியே நடக்க ஆரம்பிச்சா. இவன் நடக்க ஆரம்பிச்சதோ இந்த
கிராமத்துக்கு பக்கத்துல இருந்த ஒரு காட்டு பகுதி இவனோ அந்த
காட்டுக்கு மறுபக்கம் இருந்த வேற ஒரு கிராமத்துல இத விக்கணும்
முடிவு பண்ணா. என்ன இதே கிராமத்துல வித்த

(02:09):
அவங்களுக்கு இந்த மணி எங்க இருந்து வந்துச்சுன்னு
தெரிஞ்சிருந்தான. அதனால பக்கத்து கிராமத்துக்கு
போறதுக்கு இவன் காட்டு வழியால நடந்து போக ஆரம்பிச்சா.
அப்படி இவன் நடந்து போகும்போது இவன் கையில இருந்த இந்த மணியோ
டிங் டாங் டிங் டாங் னு சட்டம் போட்டுக்கிட்டே இருந்துச்சு.
இந்த சத்தத்தால இந்த காட்டுல தூங்கிட்டு இருந்த ஒரு புலி அதோட

(02:34):
தூக்கம் கெட்டுப்போய் தடாள்னு முழிச்சு பாத்தது.
என்னடா இது நம்ம காட்டுல யாரோ என்ன எழுப்பி விடுறாங்க.
அதுவும் ஏதோ சத்தம் கேக்குதே அப்படின்னு ரொம்ப கோவப்பட்டுச்சு.
உடனே இந்த புலி எங்க இருந்து இந்தசத்தம் வருது அப்படின்னு சுத்தி.
முத்தி தேடி பாத்துச்சு பாத்தா. தூரக்க இந்த திருடன் நடந்து

(02:58):
போயிட்டு இருந்தா. ஆஹா இவங்கிட்ட இருந்து தான் இந்த
சத்தம் வருதா. ஒரு மனுஷன் ஒரு.
புளியான என்னை எழுப்பி விட்டுட்டானா?
இப்ப என்ன பண்றேன் பாரு அப்படின்னு.
அப்படின்னு சத்தம் போட்டுக்கிட்டுஇந்த திருடன் நோக்கி வேகமா ஓடி
போச்சு. இந்த திருடனும் இப்படி ஒரு சத்தம்

(03:19):
வரது கேட்டு பின்னாடி திரும்பி பார்த்தான் பாத்த உனக்கு ஒரே
அதிர்ச்சி அய்யய்யோ என்னடா இது நம்மள ஒரு புலி துரத்தி கிட்டு
வருது இன்னைக்கு நம்ம அவ்வளவு தான் தொலைஞ்சோம் அப்படின்னு
செம்மையா பயந்துட்டான் உடனே இன்னும் பயங்கர வேகமா ஓட
ஆரம்பிச்சா இவன். ஆனா இவன் வேகமா?

(03:41):
ஓட ஓட கையில. இருந்த மணி சத்தம் போட்டுக்கிட்டே
இருந்துச்சு. அதனால இந்த புளியும் அவன விடாம
தொரத்திட்டே இருந்துச்சு. ஆஹா.
இதுக்கு மேலயும் இத நம்ம கைல வச்சிருந்தான்னா இன்னைக்கு நம்ம.
தொலைஞ்சோம். கடவுளே என்ன காப்பாத்துன்னு தான
வேண்டும். எனக்கு இப்படி ஒரு ஆபத்துல கொண்டு
போய் விட்டுட்டுயே. நான் திருடி இருக்கவே கூடாது

(04:04):
ரொம்ப பெரிய தப்பு பண்ணிட்டேன். இனிமேல்.
இந்த திருட்டு தொழிலே விட்டுடனும்டா.
சாமி அப்படின்னு அவனோட மனசுல நெனச்சுக்கிட்டு இந்த மணிய.
தபால்னு பக்கத்துல தூக்கி போட்டுட்டு.
வேகமா ஓட ஆரம்பிச்சுட்டான். இந்த புள்ளியும் அவன ரொம்ப தூரம்
துரத்தி கிட்டு போய் அப்பறம். சரி போறான் விடு அப்படின்னு அவன

(04:25):
விட்டுருச்சு. ஆனா இவன் இந்த மணி ஒரு இடத்துல
தூக்கி போட்டான். தான அந்த இடத்துக்கு பக்கத்துல
ஒரு குரங்கு கூட்டம் இருந்துச்சு.என்னடா இந்த மனுஷன் எதையோ இங்க
தூக்கி போட்டுட்டு ஓடுறானே அப்படின்னு இந்த குரங்கு
கூட்டத்துல இருந்த ஒரு சேட்டக்காரகுரங்கு அந்த போய் பாத்துச்சு.

(04:46):
அந்த மணி ய தன்னோட கையில எடுத்து கொஞ்சம் இப்படி அப்படி அசைச்சதும்
அதுல. இருந்து நீங்கடாங் டிங் டாங்.
அப்படின்னு சத்தம் வர ஆரம்பிச்சது.
இந்த சத்தத்தை கேட்டதும் அந்த குரங்கு கூட்டத்துல இருந்த எல்லா
குரங்குகளும் பயங்கரமா அத ரசிச்சுசிரிக்க ஆரம்பிச்சுச்சு.
ஐ அருமையா சத்தம் வருது நண்பா. இன்னொரு வாட்டி பண்ணு.

(05:09):
அப்படின்னு சொன்னதும் இது அந்த மானிய திரும்பவும் அடிச்சு இங்க.
அப்படின்னு சத்தம் வந்ததும் எல்லாகுரங்குகளும் ரசிச்சு சிரிக்க
ஆரம்பிச்சிடுச்சு. இப்படி இந்த மணி ஓசை எல்லா
குரங்குகளுக்கும் புடிச்சதால. இதுங்கெல்லாம் ஒண்ணா சேர்ந்து
அந்த மணியை எடுத்துக்கிட்டு இதுங்க வாழற பெரிய மரத்துகிட்ட

(05:31):
போச்சுங்க. அந்த மரத்து மேல ஏறி உக்காந்து.
டங் டங்னு. ஒவ்வொரு குரங்க இந்த மானிய வாங்கி
அத அசைச்சு சத்தம் போட ஆரம்பிச்சுங்க.
ஆனா இதுங்க இப்படியே தொடர்ந்து விளையாடிட்டு இப்படி சத்தம்
போட்டுக்கிட்டு இருந்தது. இந்த காட்டுக்கு பக்கத்துல.
இருந்த இந்த கிராமத்துல கேக்க ஆரம்பிச்சது ராத்திரியும் பகலும்

(05:53):
இந்த கிராமத்துல இந்த மணி யோசை கேட்டுக்கிட்டே இருந்துச்சு.
அதனால இந்த ஊர் மக்களெல்லாம் என்னடா இது, எங்கிருந்து இப்படி
மணி சத்தம் வருது. நம்மளால தூங்கவே முடியலையே.
இந்த காட்டில் இருந்து எப்படி மணிசெய்வாரு இது அப்படின்னு ரொம்ப
எரிச்சலாய்ட்டாங்க. குழம்பையும்.
போயிட்டாங்க ராத்திரி பகலா இப்படிதொடர்ந்து சத்தம் வந்துகிட்டே

(06:16):
இருந்ததால இந்த ஊர் மக்களெல்லாம் சேர்ந்து அந்த காலத்துல
மகாபலிபுரத்த ஆண்ட பல்லவ மன்னன் ஒருத்தங்கிட்ட போய் இத சொன்னாங்க.
அந்த மன்னரும் இத பாருங்க. இந்த பிரச்சனைக்கு யார் காரணம்னு
கண்டுபிடிச்சு அந்த மணி சத்தத்த யார் நிறுத்துறாங்களோ அவங்களுக்கு
நிறைய பரிசுகள் கொடுக்கப்படும். அப்படின்னு அறிவிச்சாரு.

(06:40):
மன்னர் இப்படி சொல்லிக்கிட்டு இருந்த இந்த விஷயங்கள எல்லாம்
கஜவதன துர்கேஷ் அப்படிங்குற. ஒரு சுட்டி பையன்
சென்னையிலிருந்து. அந்த காலத்துல மகாபலிபுரத்த
சுத்தி பாக்க போயிருந்த போது இப்படி கேட்டுகிட்டு இருந்தா
மன்னர் சொன்னதெல்லாம் ரொம்ப கவனமாகவனிச்ச இந்த கஜவதன துர்கேஷோ ஆஹா

(07:00):
இந்த காட்டுல எங்கேயோ மணி ஓசை வருது போல இருக்கு அத நம்ம போய்
கண்டுபிடிச்சு இந்த மன்னர்கிட்ட நல்லா பரிசு வாங்கிடலாம்
அப்படின்னு முடிவு பண்ணா. உடனே நல்லா தைரியத்தை வர
வச்சுகிட்டு அம்மா அப்பா நீங்க எதுவும் கவலைப்படாதீங்க.
நான் எவ்ளோ தைரியசாலின்னு உங்களுக்கு தெரியும் தான நானு.

(07:23):
பக்கத்துல இருக்க இந்த காட்டுல. போய் எங்கிருந்து சத்தம்
வருதுன்னு பாத்துட்டு வர அப்படின்னு சொல்லிட்டு இந்த
காட்டுக்கு வேகமா நடக்க ஆரம்பிச்சா.
அவங்க அப்பா அம்மாவோ. இத பாரு.
ரொம்ப ஜாக்கிரதையா போயிட்டு வரணும்.
சரியா? உனக்கு எப்பவாவது பயம்
வந்துச்சுன்னா உடனே எங்க கிட்ட திரும்பவா.
நாங்களும் உன்கூட வாரும் அப்படின்னு அவனுக்கு தைரியம்

(07:45):
சொல்லி அவன ஊக்கப்படுத்தி அனுப்பினாங்க.
இந்த கஜவதன துர்கேஷ்ம் இந்த காட்டுக்குள்ள நுழைய
ஆரம்பிச்சான். அங்க போனதும் மரத்து மேல.
வேடிக்க பாத்துக்கிட்டே. இருந்தா எங்க இருந்து சத்தம்
வருதுன்னு கவனிச்சுட்டே இருந்தா அங்க போய் பாத்தா இந்த குரங்குகள்
இந்த மணிய வச்சு விளையாடிக்கிட்டுஇருந்துச்சுங்க.

(08:06):
அடடா இதெல்லாம் இந்த குரங்குகளோட வேலை தானா?
சரி சரி இதுக்கு என்ன பண்ணனும்னு எனக்கு நல்லாவே தெரியும்.
அப்படின்னு அவங்க அப்பா அம்மா கிட்ட திரும்பவும் வந்தா வந்து
அம்மா அப்பா எனக்கு ஒரு கூட நிறையபழங்கள் வாங்கி தரீங்களா
அப்படின்னு கேட்டு. ஒரு கூடை நிறைய பழங்களும்

(08:28):
காய்கறிகளையும் வாங்கிக்கிட்டு நல்ல ஒரு திட்டம் போட்டுட்டு
திரும்பவும் இந்த காட்டுக்குள்ள போனா போனவன் நேர அந்த மரத்துகிட்ட
போய் நின்னா. அங்க போய் மரத்து கீழ.
இந்த கூட வச்சுக்கிட்டு தூங்குறதுபோல நடிக்க ஆரம்பிச்சா.
இவன் தூங்குறத கவனிச்ச இந்த குரங்குகளோ.

(08:49):
ஏய் அங்க பாருங்கடா கீழ யாரோ ஒருத்தன் கூட நிறைய பழங்களும்
காய்கறிகளும் எடுத்துட்டு வந்திருக்கா.
இன்னைக்கு நல்ல நமக்கு தீனி தான்.அப்படின்னு நினைச்சு இந்த
மரத்திலிருந்து ஒவ்வொரு குரங்க கீழே இறங்கி வர ஆரம்பிச்சுங்க.
அங்க வந்ததும் இந்த கூடையில் இருந்த பழங்களையும்,
காய்கறிகளையும் ஒவ்வொண்ணா எடுத்துதிங்க ஆரம்பிச்சுங்க.

(09:12):
குரங்குகள் எப்பயும். புதுசா ஒரு விஷயத்த பாத்து.
சின்ன தன் கைல ஏற்கனவே இருக்கிறதுகீழ போட்டுடுங்க.
அதே போல இந்த மானிய வச்சிருந்த குரங்கும் கீழ வந்ததும் அத தூக்கி
போட்டுட்டு இந்த காய்கறிகளை எடுத்து திங்க ஆரம்பிச்சது.
அவ்வளவு தான். இந்த குரங்கு மணிய கீழ போட்டதோ

(09:33):
கஜவதன துர்கேஷோ. அதை எடுத்துகிட்டு.
பொறுமையா தான் வசிச்சுண்டு வந்த ஊர நோக்கி நடக்க ஆரம்பிச்சா.
அங்க போனவன் நேர தன்னோட அப்பா அம்மாவ கூட்டிட்டு மன்னர்கிட்ட
போய் நின்னா மண்ணா இந்தாங்க இதுதான் ஊர் மக்களோட தூக்கத்தை
கெடுத்த மணி. அந்த மணி அ நான் எடுத்துட்டு

(09:54):
வந்துட்டேன். இனிமேல் மக்களுக்கு எந்த ஒரு
தொந்தரவும் கிடையாது அப்படின்னு சொன்னா இவ்வளவு அருமையா ஒரு
சுட்டி பையன் தன் முன்னால வந்து நின்னு பேசுனத பாத்த மன்னரோ ஆஹா.
இந்த சின்ன வயசுல இவ்வளவு. தைரியம் உனக்கு எப்படி வந்தது?
எதனால உனக்கு உதவி. பண்ணனும்னு தோணுச்சு.
அப்படின்னு கேட்டாரு மன்னர் அதுக்கு கஜவதன துர்கே ஷோ மண்ணா

(10:19):
ஔவையார் ஆத்திச்சுடி ல ஆரம்ப செய்ய விரும்பு அப்படின்னு
சொல்லிருக்காங்க தான. அதனால தான் எனக்கு மக்களுக்கு
நல்லது செய்யணும்னு தோணுச்சு. அப்படின்னு சொன்னா இத கேட்ட
மன்னரும் மத்த எல்லாரும் கஜவதன துர்கேஷ் ரொம்ப பாராட்டினாங்க.
அவ்ளோதான். காலை இந்த வேஷம்.

(10:53):
பல. வருஷத்துக்கு முன்னாடி ஒரு பெரிய.
கிராமத்துல திருடன் ஒருத்தன் இருந்தா அவனோ எப்பயும் சின்ன
சின்ன திருட்டுகள் செஞ்சுகிட்டு அந்த கிராமத்த சுத்தியே
வந்துகிட்டு இருப்பா. எந்த வேலைக்கும் போகாம சோம்பேறியா
இருந்தா அவனுக்கு திருடுறது மூலமாகிடைக்கிற பணத்துல சாப்டு

(11:13):
சந்தோஷமா வாழ்ந்துகிட்டு இருந்தா.இப்படியே இருந்த சமயத்துல.
ஒரு சமயம் இந்த கிராம மக்கள் எல்லாம் மன்னர்கிட்ட போய் இங்க
நடக்க திருட்டு விஷயத்த பத்தி சொல்லவும்.
அத கேள்விப்பட்ட மன்னரோ ஒரு புத்திசாலியான தளபதிய அந்த
பகுதிக்கு காவலாக போட்டாரு. இப்புடி புதுசாக நியமிக்கப்பட்ட

(11:34):
இந்த தளபதியோ இந்த கிராமத்துல மூலம் உடுக்கெல்லாம் எங்கயும்
யாரும் திருடன் வராதபடி காவலுக்குஆட்களை போட்டாரு.
அதனால இந்த திருடனுக்கு பெரிய தொந்தரவா போச்சு.
இத்தன நாள் வரைக்கும் எந்த தொந்தரவும் இல்லாம திருட்டு வேலை
செஞ்சுகிட்டு சோகமா இருந்த இவனால.இதுக்கு மேல திருடவே.

(11:56):
முடியல. அதனால என்ன செய்யறது அப்படின்னு
நெனச்ச இந்த திருடனோ ஆஹா. என்னடா இது இந்த தளபதிகளும் இவனோட
படையாட்களும் நமக்கு ரொம்ப தொல்லையா இருக்காங்களே நம்ம என்ன
பண்ணலாம் அப்படின்னு நினைச்சு சரிசரி.
ஒரு யோசனை பண்ணுவோம். பேசாம ஒரேடியா நிறைய பொண்ணும்

(12:18):
பொருளும். திருடிக்கிட்டு.
இந்த ஊர விட்டு போயிடலாம். அப்படின்னு முடிவு பண்ணா.
இப்படி ஒரு யோசனைக்கு வந்தவன் அதேகிராமத்துல இருந்த ஒரு பெரிய
கோவிலுக்கு தாடி மீசையெல்லாம் ஒட்டிக்கிட்டு ஏதோ ஒரு சாமியார்
போல போனா அங்க போனவனோ அந்த கோவில்ல இருந்த நெறைய நக

(12:38):
பாத்திரங்கள் இது எல்லாத்தையும் திருடிக்கிட்டு ராத்திரியோட
ராத்திரியா அந்த ஊரு விட்டு போயிட்டா.
இப்படி அந்த கிராமத்திலிருந்து கிளம்பி ரொம்ப தூரம் போனவன் வேற
ஒரு சின்ன கிராமத்துகிட்ட வந்ததும் அப்பாடா.
நம்ம ரொம்ப தூரம் வந்துட்டோம். இதுக்கு மேல நமக்கு பிரச்சனை இல்ல
அப்படின்னு நினைச்சு அங்க இருந்த ஒரு பெரிய ஆழ மரத்துல அவன்

(13:02):
திருடிகிட்டு வந்த பொருட்களை எல்லாம் மறச்சு வச்சா.
ரொம்ப தூரம் ஓடி வந்த கலைப்பாள பயங்கரமா சோறுவா இருந்தான்.
அதனால இந்த ஆலமர தடியிலேயே படுத்து நல்லா தூங்கிட்டான்.
இப்படியே இவன் நல்லா கலைப்பாற தூங்கி அடுத்த நாள் காத்தால இதே
தாடி மீசையோட எழுந்திருச்சா? அங்க இருந்த இவன பாத்த

(13:24):
மக்களெல்லாம் இங்க பாத்தியா யாரோ ஒரு சாமியார் எங்கேந்தோ நம்ம
கிராமத்துக்கு வந்திருக்காரு. அப்படின்னு அவன பெரிய
சாமியார்ன்னு நெனச்சுக்கிட்டாங்க.அதனால அவன்கிட்ட வந்து ஆசீர்வாதம்
வாங்க ஆரம்பிச்சுட்டாங்க. அவனுக்கும் அப்பதான்
புரிஞ்சுச்சு. ஆஹா.

(13:45):
இது நல்ல யோசனையா இருக்கே. இந்த ஊர்லயே.
ஒளிஞ்சுகிட்டு நம்ம கொண்டு வந்த பொருட்களை எல்லாம் கொஞ்சம்
கொஞ்சமா வித்து அப்படியே சாப்பிட்டுட்டு இருக்கலாம்.
அப்படின்னு முடிவு பண்ணா. அப்புறமா அன்னிலிருந்து அவன
பாக்குறதுக்காக இன்னும் நிறைய பக்தர்கள் அவன.
தேடி வெவ்வேறு ஊர்ல. இருந்தலாம் வர ஆரம்பிச்சுட்டாங்க

(14:06):
வந்தவங்க எல்லாரும் அவனுக்கு சுவையான உணவு பரிசு பொருட்களும்
கொண்டு வர ஆரம்பிச்சாங்க. இவனோ இத எல்லாம் பாத்து ரொம்ப
சந்தோஷப்பட்டு அந்த ஊர்லயே அவனோட வாழ்க்கையை தொடங்குனா கொஞ்சம்
கொஞ்சமா அவனுக்கு கிடைச்ச பொருட்களை எல்லாம் வச்சு இந்த
மரத்த ஒட்டி ஒரு குடிச ஒன்னு கட்டஆரம்பிச்சா.

(14:28):
ஆனா இதே சமயத்துல இந்த திருடன பிடிக்க வந்த தளபதியோ அவங்க.
ஊர்ல இருந்த. கோவில்ல நடந்து திருட்டுக்கப்பறமா
ஊருக்குள்ள? வேற.
திருட்டுகள் நடக்காதத கவனிச்சாரு.புத்திசாலி ஆன இவரோ ஓஹோ அப்ப இங்க
இருந்த திருட. வேற ஊருக்கு.
போயிட்டான் அப்படின்னு முடிவு பண்ணாரு.

(14:48):
அதே சமயத்துல அவனோட ஒற்றர்கள் மூலமாக பக்கத்து கிராமத்துல ஒரு
புது சாமியார் வந்திருக்கிற விஷயமோ அவர்கிட்ட ஆசீர்வாதம்
வாங்குறதுக்காக நிறைய கூட்டம் கூடுது.
அப்படிங்குற விஷயத்தையும் தெரிஞ்சுகிட்டாரு.
இப்படி இந்த விஷயத்தெல்லாம் தெரிஞ்சுகிட்ட இந்த தளபதியும்
அவரோட. சில.
காவலாளிகளும் இந்த சாமியார பாக்க.போற பக்தர்கள போல.

(15:13):
மாறுவேஷம் போட்டுக்கிட்டாங்க. இந்த மாறு வேஷத்து போட்டுக்கிட்டு
இந்த சாமியார பாக்குறதுக்காக போனாங்க.
இவரோ அந்த ஊருக்கு. எப்ப வந்து சேர்ந்தாரு
அப்படிங்கிற விஷயத்த அப்படியே மெதுவா அந்த கிராமத்து மக்கள்
மூலமா கேட்டாரு. அப்படி விசாரிச்சதுல அவங்க.
ஊர் கோவில்ல திருட்டு. போன அந்த நாளோட இது ஒத்து

(15:34):
வந்துச்சு. ஓஹோ அது தான் சேதியா அப்படின்னு
இவரோட மனசுல இருந்த நெறைய கேள்விகளுக்கு பதில்
கிடைச்சுச்சு. இந்த சாமியார நம்ம திருடன் சொல்லி
சோதன போட்டா தங்களோட நம்பிக்கைய குறைக்கிறது தான் நெனச்சு இந்த
கிராமத்து மக்கள் எல்லாம் நம்ம கிட்ட சண்டைக்கு வருவாங்க.

(15:55):
அப்பறம் இந்த சாமியார விசாரிக்கவேமுடியாம போயிடும்.
அப்படின்னு தன் மனசுலயே யோசிச்சாரு.
அதனால ஒரு பெரிய தந்திரத்தையும் போட்டார் இந்த தளபதி.
இதுக்கு அடுத்த நாளே ஆசீர்வாதம் வாங்குற மாதிரி இந்த
சாமியார்கிட்ட போன தளபதியோ இந்த கூட்டத்துக்கு எல்லாம் கேக்குறது
போல சத்தமாக அடடா. இந்து சாமியாரா இவர்கிட்ட நான்

(16:19):
ஏற்கனவே ஆசீர்வாதம் வாங்கி இருக்கேன்.
என்னோட திருட்டு போன வழக்கைய. மீட்டு குடுக்க சொல்லி இவர்கிட்ட.
போய் ஒரு தடவ கேட்டேன். உடனே அவரோட வீட்டுக்குள்ள போய்
மந்திரம் போட்டு என்னோட வழக்கை வரவழைச்சு இவர் எனக்கு திரும்ப
கொடுத்தாரு. அப்படின்னு எல்லாருக்கும்
கேக்குறது. போல.
சத்தமா சொன்னாரு? இத கேட்டதும் இந்த கூட்டத்துல

(16:42):
இருந்த பக்தர்களுக்கெல்லாம் பயங்கர ஆச்சரியமாக போச்சு.
அப்பதான் மாறுவேஷத்துல இருந்த இன்னொரு காவலாளியோ அய்யா எங்க
கிராமத்துல இருந்த கோவில்ல சாமியோட கிரீடம் காணாம
போயிடுச்சுங்கய்யா. அது எப்படியாவது.
நீங்க தான் வரவழைச்சு குடுக்கணும்.
அப்படின்னு சொன்னா. அத கேட்ட இந்த கூட்டத்துல இருந்த

(17:04):
பக்தர்கள் எல்லாம் ஆஹா நம்ம கண்ணுமுன்னாடியே சாமியாரோட சக்திய நம்ம
இப்ப பாக்க போறோம் அப்படின்னு பயங்கர ஆவலாக இருந்தாங்க.
ஆனா இந்த திருடனுக்கோ தூக்கிவாரி போட்டுச்சு.
ஆஹா இது என்னடா இது இப்ப இவங்களுக்கு அந்த கிரீடத்த நம்ம

(17:25):
வரவழைச்சு கொடுத்தாகணுமே இல்லனா நமக்கு எதுவும் சக்தி இல்ல.
நம்ம போலின்னு நெனச்சு இந்த ஊர்ல இருந்தே நம்மள துரத்திடுவாங்களே
அப்படின்னு நினைச்சு அவன் திருடிகிட்டு வந்த அந்த கிரீடமும்
நகையும் ஒளிச்சு வச்சிருந்த இடத்துக்கு போய்.
அதை எடுத்துக் கொடுத்து. எல்லார்கிட்டயும் நல்ல பேரு
வாங்கிக்கலாம். அப்படின்னு நினைச்சா.

(17:47):
அதனால இப்புடி இந்த காவல் அலி கேட்டதுக்கு அப்புறமா அவனோட
குடிசுக்குள்ள போன இந்த சாமியாரோ கொஞ்ச நேரத்துக்கு அப்புறமா காணாம
போன. இந்த கிரீடத்தோட வெளிய.
வந்தா அத பாத்து எல்லா பக்தர்களும் பயங்கர
பரவசமாயிட்டாங்க. அங்கிருந்த எல்லாரும் எப்பா இந்த
சாமியாரோட சக்திய பாத்தீங்களா அப்படின்னு அவரு பயங்கரமா

(18:10):
புகழ்ந்தாங்க. இப்படி அந்த கிரீடத்த வாங்கி
பாத்த அந்த காவலாலியோ அது காணாம போன அவங்க ஊர் கோவிலோட கிரீடம்
தான் அப்படின்னு உறுதி செஞ்சுக்கிட்டாங்க.
அதுக்கு அப்புறமா இந்த தளபதியோ இந்த சாமியார்கிட்ட போனாரு போனவரு
அவரோட தாடிய புடிச்சு இழுத்தாரு. அது கையோட வந்துடுச்சு.

(18:33):
அப்ப தான் அங்க இருந்த எல்லா மக்களுக்கும் அய்யய்யோ இவரு
உண்மையிலேயே சாமியார் இல்ல. இது போலி அப்படின்னு தெரிய
வந்துச்சு. இப்படி தன்னோட வேஷம்
வெளிப்பட்டதால அங்கிருந்து ஓடிப்போக பாத்தான் இந்த திருடன்.
ஆனா மாறுவேஷத்துல வந்திருந்த மத்தகாவலாளிகளும் அவன உடனே மடக்கி

(18:55):
பிடிச்சு தளபதி கிட்ட இழுத்துட்டுபோனாங்க.
அப்பதான் தன்னோட வேஷியத்த கலைச்சாரு தளபதி இங்க என்ன
நடக்குது அப்டிங்கறத ஆவலாக பாத்துக்கிட்டு இருந்த கிராம
மக்கள் கிட்ட இத பாருங்க. யாரு என்னன்னு விசாரிக்காம யாரு
வந்தாலும் சாமியாரா ஏத்துக்கிற உங்களோட அறியாமைய நெனச்சு எனக்கு

(19:17):
ரொம்ப வருத்தமா இருக்கு. அப்படின்னு சொன்னாரு.
இந்த தளபதி அப்படி சொன்னதும் அத கேட்ட இந்த கிராம மக்கள் எல்லாம்
ரொம்ப வருத்தப்பட்டாங்க. அப்பதான் அந்த கிராமத்துல இருந்த
ஒரு சின்ன பையனோ அந்த திருடன் பாத்து.
ஐயா நீங்க வேற ஒரு ஊர்ல திருடி. எங்க ஊர்ல வந்து சாமியார் போல

(19:38):
நடிச்சு எங்களோட நம்பிக்கையெல்லாம்
கெடுத்துட்டீங்க. இனிமேலாவது இது போல எல்லாம்
இல்லாம தயவு செஞ்சு நல்லபடியாக வாழுங்க.
இதுக்கு தான் அவ்வையார் ஆத்திச்சுடி ல கீழ்மையாகற்று
அப்படின்னு சொல்லிருக்காங்க. அதாவது இழிவான குணச்செயல்களை
நீக்கி வாழணும் அப்படின்னு இதுக்கு அர்த்தம்.

(20:01):
அதனால இதுக்கு மேலயும் யாரையும் நீங்க ஏமாத்தாம நல்லபடியா உழச்சு
வாழ பாருங்க. அப்படின்னு சொன்னா அந்த குட்டி
பையன். அத கேட்டதுக்கு அப்பறம் இந்த
திருட தன்னோட செயல நெனச்சு வருத்தப்பட்டு தல குனிஞ்சு இந்த
தளபதியோட அந்த நாட்டு சிறைச்சாலைக்கு போனா.

(20:21):
அவ்ளோதான். திருக்குறள் கதைகள்.
மூன்று கேள்விகள். பல.
வருஷத்துக்கு முன்னாடி முற்றும் துறந்த முனிவர் ஒருத்தர் திருத்தல

(20:42):
யாத்திரை செஞ்சுட்டு வந்தாரு. அதாவது பல கோவில்களுக்கும் போய்.
அங்க இருந்த கடவுள் வணங்கி வந்தாரு.
பற்றற்ற பரம ஞானியாக இருந்த இவரோ,ஒரு நாள் இருந்த ஊர்ல இன்னொரு
நாள் இருக்க மாட்டாரு. நாள் ஒன்றுக்கு.
ஒரே ஒரு தடவ. உப்பில்லாத உணவ தான்
சாப்பிடுவாரு. இவரோ பொய்ய பயங்கரமாக

(21:07):
வெறுக்கிறவரு. மனத்தோடு வாய்மை மொழியின்
தவத்தோடு தானம் செய்வாரின் தலை அப்படிங்குற திருக்குறளுக்கு
ஏத்தபடி தான் இவர் நடந்து பாரு. அதாவது யார் ஒருத்தர் தன்னுடைய
உள்ளம் அறிய உண்மை பேசுறாங்களோ அவங்க தவமும் தானமும் செய்றவங்கள
விட உயர்ந்த மனுஷங்களா வாங்க அப்படிங்குற இந்த நெறிப்படி இந்த.

(21:32):
திருக்குறள இவரு இடைவிடாது சொல்வாரு.
அப்படிப்பட்ட இவரோ மறந்தும் கூட போய் பேசுறவங்களோட வீட்ல
சாப்பிடவே மாட்டாரு. ஒரு நாள் கடலூருக்கு பக்கத்துல
இருந்த சிதம்பரம் அப்படிங்குற ஊருக்கு போனாரு.
அங்க போனவரு தன் கண்ணுல. பட்ட சிலர.
பாத்து இந்த பாருங்க. இந்த ஊர்ல உண்மை பேசுறவங்க யாரு

(21:57):
அப்படின்னு கேட்டாங்க. அதுக்கு அங்க இருந்த சிலரோ அதோ
பாருங்க. அந்த மாடி வீடு அதுல ராமநாதன்
அப்படின்னு ஒருத்தர் வாழறாரு. அவரு தான் எங்களுக்கு தெரிஞ்ச
உண்மையாளர். அவரோ ரொம்பவும் கடவுள்.
பக்தி உடையவர். 1,00,000 பணமும். நாலு பசங்களும் உடையவர்

(22:19):
அப்படின்னு பல பேர் சொன்னாங்க. இதுக்கு அப்புறமா அந்த ராமநாதனோட
வீடு தேடி இந்த முனிவர் போனாரு. தன்னோட வீட்ல உக்காந்திருந்த இந்த
ராமநாதனும் இந்த முனிவர பாத்ததும்உடனே எழுந்தாரு.
ஓடி வந்து. அவரோட கால்ல விழுந்து.
வணங்கினார். அப்புறமா அவர தன்னோட இருக்கையில

(22:41):
உட்கார வச்சிட்டு. அய்யா உங்களுக்காக நான் உணவு
செய்யட்டுமா என்ன செய்யணும் அப்படின்னு கேட்டு இருந்தாரு.
இப்படி கேட்டதும் இத கவனிச்ச இந்தமுனிவர் இந்த ராமநாதனோட அன்பு
பணிவு, அடக்கம் போன்ற நல்ல குணங்கள பாத்து ரொம்ப மகிழ்ச்சி
அடைந்தாரு. அப்புறமா இவரு நெஜமாலுமே உண்மை

(23:06):
பேசுறவரு தானா அப்படிங்கிறத சோதிச்சதுக்கு அப்புறமா தான்
சாப்பிடணும் அப்படின்னு நினைச்சாரு.
அப்புறமா இந்த ராமநாதன் அ பாத்து முனிவர் மூணு கேள்விகள் கேட்டாரு.
ஐயா. உமக்கு செல்வம் எவ்வளவு உண்டு.
அப்படின்னு கேட்டாரு. அதுக்கு இந்த ராமநாதனோ சுவாமி

(23:27):
எனக்கு ₹22,000 உண்டு. அப்படின்னு சொன்னாரு.
அப்புறமா இந்த முனிவர். உங்களுக்கு குழந்தைகள் எத்தன பேரு
அப்படின்னு கேட்டாரு. அதுக்கு ராமநாதனோ சுவாமி எனக்கு
ஒரு புதல்வன் தான் அப்படின்னு சொன்னாரு.
அப்பறம் கடைசியாக இந்த முனிவர். உமக்கு வயது எத்தன அப்படின்னு

(23:51):
கேட்டாரு. அதுக்கு இந்த ராமநாதனும் சுவாமி
எனக்கு மூன்று வருஷம் ஐந்து மாதம்ஏழு நாள் பதினாறரை மணி அப்படின்னு
சொன்னாரு. இந்த பதில்கள் எல்லாம் ராமநாதன்
சொல்லி முடிச்சதும் இத கேட்ட இந்தமுனிவருக்கு பயங்கரமான கோபம்
வந்துருச்சு. அய்யா நீங்க இவ்வளவு சுத்த

(24:13):
புழுகரா இருக்கீங்களே நீங்க பேசுறதெல்லாம் பெரும் புரட்டு
உங்க வீட்ல நான் சாதம் சாப்பிட்டேன்னா என்னுடைய தவதே அது
அழிக்கும். நான் பொய்யர்கள் வீட்ல சாப்பிடவே
மாட்டேன் அப்படின்னு சொல்லி கோவப்பட்டு எழுந்திரிச்சாரு.
இந்த கோவத்த. பாத்ததும் ராமநாதன் இந்த முனிவரோட
கால்ல விழுந்து அய்யா. தயவு செஞ்சு என்ன மன்னிக்கணும்

(24:37):
நான். ஒரு போதும் பொய் பேசவே.
மாட்டேன் எப்பயும் உண்மை தான் பேசுவேன்.
கொஞ்சம் நிதானமாக என்னுடைய பதில்களை நீங்க ஆரஞ்சு
பாத்தீங்கன்னா அதனுடைய உண்மைய உணர்வீங்க அப்படின்னு சொல்லி.
தன்னோட வரவு செலவு புத்தகத்தை எடுத்து காமிச்சாரு.
அதுல இருப்பு. தொகை. ₹1,00,000 அப்படின்னு.

(24:58):
எழுதி இருந்துச்சு. இத பாத்த முனிவரோ.
அடேய். ராமநாதா இதோ உனக்கு சொத்து
1,00,000 ரூபாய்னு இருக்கே நீயோ 22,000 ரூபாய்ன்னு பொய் சொன்னியே
அப்படின்னு கோவப்பட்டாரு. அதுக்கு இந்த ராமநாதனும்.
சுவாமி ₹1,00,000 பெட்டியில இருக்கிறது உண்மைதான்.

(25:21):
ஆனா பெட்டியில இருக்குற பணம் எனக்கு சொந்தமாகும்மா?
இதோ பாருங்க. தர்ம கணக்குல இது வரைக்கும்
வெறும் ₹22,000 தான் செலவா இருக்கு.
தர்மம் செஞ்ச பணம் மட்டும் தான் என்னோடது.
இப்போ எனக்கு ஏதாவது ஆயிடுச்சுன்னா கூட பெட்டியில
இருக்குற பணம் என்கூட வராது. உடன் வருவது தர்மம் மட்டும் தான

(25:45):
அப்படின்னு சொன்னாரு. இந்த பதில கேட்ட முனிவர்
வியப்போடன் நின்றாரு. அட ஆமா ராமநாதா.
சரி உனக்கு நாலு புதல்வர்கள் இருக்காங்கன்னு கேள்விப்பட்டேனே.
அதுக்கு என்ன பதில் சொல்ல போற அப்படின்னு கேட்டாரு.
அதுக்கு இவரோ. சுவாமி எனக்கு பொறந்த பசங்க நாலு

(26:07):
பேரு ஆனா என் பிள்ளை ஒருத்தன் தான் அப்படின்னு சொன்னாரு.
இத கேட்டு குழம்பி போன இந்த முனிவரோ.
என்னப்பா நீ சொல்றதோட கருத்து எனக்கு புரியலையே.
கொஞ்சம் விளக்கமா சொல்றியா அப்படின்னு.
கேட்டாரு. அதுக்கு இந்த ராமநாதனும் சுவாமி
இதோ நிச்சயமா விளங்க வைக்கிறேன். அப்படின்னு சொல்லிட்டு.

(26:30):
மகனை நடராஜா அப்படின்னு தன்னுடைய பசங்கள்ல ஒருத்தன கூப்பிட்டாரு.
அவனும் சீட்டு விளையாடிட்டு. இருந்தான் தன்னோட அப்பாவ பாத்து.
நான் இப்ப வர முடியாது விளையாடிட்டு இருக்கிறது
தெரியலையா? அப்படின்னு திமிராக பதில் சொன்னா.
அதுக்கு அப்புறமா மகனே வேலுச்சாமிஅப்படின்னு தன்னோட இன்னொரு பையன

(26:53):
கூப்பிட்டாரு. அதுக்கு அவனும் ஏன் இப்படி கத்துற
கொஞ்சம் சும்மா இரு நான் தான் தூங்கிட்டு இருக்கேன் தான
அப்படின்னு ரொம்ப திமுரோட அவ மரியாதையாக பதில் சொன்னா.
அதுக்கு அப்புறமா தன்னோட இன்னொரு பையன பாத்து மகனை சிவசாமி
அப்படின்னு கூப்பிட்டாரு இவரு. அதுக்கு அவனும்.

(27:15):
ஏன் எப்ப பாத்தாலும் ஏதாவது. சொல்லிட்டே இருக்க.
என்னால இப்ப பேச முடியாது போ அப்படின்னு ரொம்ப
மரியாதைக்குறைவாக திமிருத்தனமாக பதில் சொன்னா.
இதுக்கு அப்புறமா இந்த ராமநாதன் மகனை கந்தசாமி அப்படின்னு
தன்னுடைய இன்னொரு பையனையும் கூப்பிட்டாரு.
ஆனா இந்த கந்தசாமியோ தன்னோட அப்பாகூப்ட உடனே ஓடி வந்து அவரையும்

(27:41):
அந்த முனிவரையும் கால்ல விழுந்து வணங்கினா.
அப்புறமா அந்த முனிவர பாத்து சுவாமி உங்களுக்கு
குடிக்கிறதுக்காக பால் கொண்டு வரட்டுமா பழம் கொண்டு வரட்டுமா
அப்படின்னு உபசரிச்சு. அவருக்கு விசிறி எடுத்து
வீசிக்கிட்டு. பணிவோடு நின்னா.
இப்போ இந்த ராமநாதன் முனிவர பாத்து.

(28:03):
சுவாமி அந்த மூணு பேரும் என்னுடையமகன்கள் தானா?
என்னுடைய கருத்துக்கு முரணானவர்கள் என் பிள்ளைகளா?
தன்னுடைய பெற்றவர்களுடைய பேச்சு கேட்காத இவங்கெல்லாம் என்னுடைய
மகன்களே கிடையாது தான இவன் ஒருத்தன் தான என்னுடைய பிள்ளை
அப்படின்னு கேட்டாரு. இந்த பதிலை கேட்ட முனிவரோ ராமநாதா

(28:26):
உன்னுடைய கருத்து எனக்கு ரொம்ப மகிழ்ச்சியே தருது.
நீ சொல்றது சரி தான் அப்படின்னு சொன்னாரு.
அதுக்கு அப்புறமா? சரி வயசு விஷயத்துல நீ சொன்னதோட
உட்பொருள் என்ன அது எனக்கு கொஞ்சம் விளக்கமா சொல்றேன்
அப்படின்னு கேட்டாரு. அதுக்கு.
இந்த ராமநாதனும் இந்த முனிவர பாத்து சுவாமி நானும் நாள்

(28:49):
ஒன்னுக்கு ஒன்ற மணி நேரம் தான். கடவுள வழிபாடு.
செய்கிறேன். மிச்ச நேரமெல்லாம்
வைத்துக்காகவும், குடும்பத்துக்காகவும்
உழைக்கிறேன். பேசாத நாளெல்லாம் பிறவானால் தானே?
கடவுள் பூஜிக்கிற நேரம் மட்டும் தான் எனக்கு சொந்தமான நேரம்.
எனக்கோ இந்த ஒடம்பு பொறந்து 60 வருஷம் ஆகுது.

(29:11):
ஆனா அஞ்சு வயசுல இருந்து தான் நான் கடவுள் வணங்க ஆரம்பிச்சேன்.
ஏற்கனவே சொன்னா மாதிரி நாள் ஒன்னுக்கு ஒன்ற மணி நேரம் தான்
பூஜை செய்கிறேன். அந்த வகையில பாத்தா 30,100 12 மணி
நேரங்கள் ஆகுது. அதனால தான் நான் பொறந்து 60
வருஷங்கள் ஆனாலும் எனக்கு சொந்த வயது திட்டமாக மூணு வருஷம் அஞ்சு

(29:35):
மாசம் ஏழு நாள் பதினாறரை மணி ஆகுது அப்படின்னு சொன்னாரு.
இது போல. தர்மம் செஞ்ச பணம் மட்டும் தான்
தனக்கு சொந்தம். என்னுடைய கருத்த அனுசரிக்கிறவன்
மட்டும் தான் என்னுடைய சொந்த பிள்ளை.
அப்பறம் பூஜை செய்கிற நேரம் மட்டும் தான் எனக்கு சொந்தம்
அப்படின்னு ராமநாதன் இந்த முனிவர்கிட்ட எடுத்து சொன்னாரு.

(30:00):
இது போல ராமநாதனோட இந்த பதில்களை கேட்ட முனிவர் ரொம்ப மகிழ்ச்சி
அடைந்தார். அப்புறமா அவரோட வீட்ல இருந்து
சாப்பிட்டுட்டு அவர நல்லா வாழ்த்திட்டு அங்கிருந்து
கெளம்பினார். இந்த கதை திருமுருக கிருபானந்த
வாரியார் சொன்ன கதை. சரியா?

(30:20):
அவ்ளோதான். அறிவுடையோர் யார்?
பல வருஷங்களுக்கு முன்னாடி கர்நாடக மாநிலத்துல மைசூர்
அப்படிங்குற நகரத்த மன்னர் ஒருத்தர் ஆண்டின் வந்தாரு.

(30:43):
அந்த மன்னருக்கு ரொம்ப அறிவுடைய மகள் ஒருத்தியும் இருந்தா அவ யார்
பேசினாலும் தன்னோட அறிவாற்றலால் அவங்கள மடக்கிடுவா.
இந்த மன்னரோ தன்னோட மகளான இந்த இளவரசி தான் அறிவில் சிறந்தவள்.
அப்படின்னு நினைச்சிருந்தாரு. அந்த சமயம் இந்த இளவரசியோ தந்தையே

(31:05):
நம்ம நாட்டுல யார் அறிவில் சிறந்தவர்கள்.
அப்படிங்கிறதுக்காக ஒரு போட்டி வைக்கலாம்.
அந்த போட்டியில பேச்சாற்றல்ல என்னயார் வெற்றி பெறுறாங்களோ
அவங்களுக்கு பரிசு தொகைய கொடுக்கலாம்.
அப்படின்னு சொன்னா. மன்னரும், அதுக்கு சம்மதம்
தெரிவிச்சாரு. அதனால பல நாட்டு இளவரசர்களும்

(31:26):
அறிஞர்களும் இந்த போட்டியில கலந்துட்டாங்க.
அதுக்காக இந்த அரண்மனைக்கு வந்தாங்க.
வந்த எல்லாரையும் போட்டியில தோக்கடிச்சு வெளிய அனுப்பினா இந்த
இளவரசி ஏராளமான கூட்டம். இந்த மைசூர் அரண்மனைக்கு வரத
பாத்த மன்னரோ பாருங்க. போட்டியில வெற்றி பெற்றீங்கன்னா

(31:46):
உங்களுக்கு பரிசு தோத்தீங்கனா 100கசையடி அப்படின்னு எல்லாருக்கும்
தெரிவிக்க ஆரம்பிச்சாரு. அதனால இளவரசியோட போட்டி
போடுறதுக்கு அப்பிலிருந்து அதிகமாயாரும் வரல.
வந்தவங்களும் தோத்து போய் கசையடி வாங்கிட்டு தான் போனாங்க.
இப்படி இருந்த சமயத்துல மைசூர்ல இருந்து ரொம்ப தூரத்துல இருந்த

(32:11):
மங்களூர் அப்படிங்குற ஊர்ல ஒரு இளைஞன் இருந்தா அந்த இளைஞனோ நல்லா
படிச்சிட்டு ஆனா சரியான வேலை கிடைக்காததால ஏதாவது நல்ல வேலை
கிடைக்குமா? அப்படின்னு தேடி அலைஞ்சுகிட்டு
இருந்தா. அந்த சமயத்துல அறிவில் சிறந்தவர்
யார்? அப்படிங்குற இந்த போட்டி மைசூர்ல
நடக்குறத பத்தி இந்த இளைஞன் கேள்விப்பட்டான்.

(32:35):
உடனே ஆஹா. இது நல்ல போட்டியாக இருக்கே நம்ம
இதுக்கு. முயற்சி பண்ணி பாக்கலாமே.
அப்படின்னு. தன்னோட ஊர்ல இருந்து தலைநகரான
இந்த மைசூர் நோக்கி. நடக்க ஆரம்பிச்சா.
அந்த காலத்துல எல்லாம் மங்களூர் லஇருந்து மைசூர் க்கு போகணும்.
அதுவும் நடந்தே போகணும். அப்படின்னா பல நாட்கள் ஆகும்.

(32:56):
இப்படி நீண்ட தூரம் பயணம் இந்த இளைஞன் மேற்கொண்டான்.
அப்படிவன் போயிட்டு இருக்கும் போது வழியில இறந்து கிடந்த கோழி
ஒன்னு இருந்துச்சு. ஆக இவன் பாத்தா இது.
எதுக்காவது நமக்கு பயன்படும் அப்படின்னு.
அவன் ஒரு சாக்கு. பைக்குள்ள இந்த.
கோழிய போட்டுக்கிட்டான். அப்பறம் இன்னும் தொடர்ந்து நடக்க

(33:19):
ஆரம்பிச்சா. அவன் தான் ரொம்ப நாள் நடக்கணுமே.
இப்படியே சில நாட்கள் இவன் தொடர்ந்து நடக்கும் போது வழியில
கடந்த சின்ன தொட்டியையும் மாடு ஆடுகளையெல்லாம் கற்ற தடி
உன்னையும் அப்பறம் குதிரையோட. கால் குழம்பு.
மற்றும் பல வளைவுகளை கொண்ட. ஆட்டோட கொம்பு அப்படின்னு இப்படி

(33:41):
எல்லாத்தையும் தன்னோட சாக்கு பயிலபோட்டுக்கிட்டு மைசூர் அரண்மையும்
நோக்கி நடந்துகிட்டு இருந்தா. ஒரு வழியா பல நாட்களுக்கு
அப்புறமா இந்த அரண்மனை வந்து அடைஞ்சா அப்படி அரண்மனை வாசலைவா
அடைஞ்சதும் அங்க காவலுக்கு இருந்தவீரர்கள் எல்லாம் இவனோட கந்தல்
ஆடையையும் இவன் கையிலிருந்த கோணிப்பையையும் பாத்து சிரிக்க

(34:04):
ஆரம்பிச்சுட்டாங்க. ஆனா இந்த இளைஞனோ மனம் தளராம அந்த
காவல் வீரர்கள் கிட்ட இந்த பாருங்க நானு இளவரசியோட போட்டி
போடுறதுக்காக வந்துருக்கேன். என்ன உள்ள விடுங்க அப்படின்னு
சொன்னா இவன் இப்படி சொன்னதும் அத கேட்ட இந்த காவலர்களோ அவன பாத்து
ஏளனமாக சிரிச்சாங்க. அப்புறமா அவன பாத்து.

(34:28):
என்னது இப்படி கந்தலாடையையும் கையில கோணிப்பையும் வச்சிருக்கிற.
உனக்கு என்ன தெரியும் அப்படின்னு.கேட்டாங்க.
ஆனா இந்த இளைஞனும் அமைதியாக அவங்கள பாத்து இந்த பாருங்க.
என்னோட திறமையான பேச்சால இளவரசிய நானு ஜெயிக்க போறேன்.
இத அவங்க கிட்ட போய் சொல்லுங்க அப்படின்னு உறுதியோட சொன்னா.

(34:51):
இந்த வீரர்களும் இளவரசி கிட்ட அவங்கள பாக்க ஒரு இளைஞன்
கந்தலாடையோட வந்துருக்கான். அப்படின்னு தெரிவிச்சாங்க.
அவளும் அவன அனுப்பி. வைக்கும்படி இந்த காவல்
வீரர்கள்கிட்ட. சொன்னா?
உடனே இந்த இளைஞன் உள்ள போனா அங்க போனதும் இந்த இளவரசிய பாத்து
பனிக்கட்டிய விட குளிர்ந்த கைகளை கொண்ட இளவரசியாரு வணக்கம்

(35:15):
அப்படின்னு சொன்னா. அத கேட்ட இந்த இளவரசியோ.
என்னது மைசூரில் அடிக்கிற வெயிலுக்கு என் கை இப்படி சூடா
இருக்கு. இந்த சூட்டுல ஒரு கோழியே
வறுபட்டுடும் இத போய் பனிக்கட்டி கயின்னு சொல்றியா?
அப்படின்னு வெடுக்குனு பதில் சொன்னா.
அதுக்கு இந்த இளைஞனோ ஓஹோ அப்படியாகோழியே வறுபட்டுடும்மா எங்க நான்

(35:40):
பாக்குறேனே அப்படின்னு சொல்லி தன்னோட கோணிப்பயில இருந்த அந்த
செத்த கோழிய வெளிய எடுத்தான். இப்படி அவ எதிர்பார்க்காத விதமா?
ஒரு கோழியை. இவன் வெளியே எடுத்ததும்.
அத பாத்து தகிச்சு. போனா இந்த இளவரசி.
ஆஹா. என்னடா இவன் ஒரு பேச்சுக்கு சொன்ன
உடனே கோழி வெளியே எடுத்துட்டா அப்படின்னு கொஞ்சம்

(36:01):
பரபரப்பாயிட்டா. ஆனா தன்னோட திகைப்ப வெளிய.
காட்டாம அப்படியே மறைச்சுக்கிட்டுஅதெல்லாம்.
ஒன்னும் இல்ல சூடுபட்டா கோழியோட கொழுப்பு வெளிய.
ஒழுக. ஆரம்பிச்சுடுமே.
அப்படின்னு சொன்னா அதுக்கு இந்த இளைஞனோ அவன் கோணியில் இருந்த அந்த
தொட்டிய வெளிய எடுத்து. அதெல்லாம் ஒன்னும் பிரச்சன இல்ல.

(36:23):
ஒழுங்குனா இதோ இந்த தொட்டியில புடிச்சிக்கலாம் அப்படின்னு
சொன்னா இந்த இளவரசி தன் மனசுல அய்யய்யோ என்னடா இவன் இதுக்கும்
ஒரு பதில வச்சிருக்கான். சரி சரி இவன எப்படியாவது
சமாளிப்போம். அப்படின்னு நினைச்சு இந்த பாரு
தொட்டில் விரிசல் விட்டுருந்தா ஒழுக ஆரம்பிச்சிடுமே அப்படின்னு
சொன்னா இவனோ தன் கோணில இருந்த இந்த குதிரையோட கால் குழம்பு

(36:48):
எடுத்து விரிசெல்லாம் விழுந்தா இதவச்சு அடைச்சிடலாம்.
அப்படின்னு சொன்னா ஆஹா என்னடா இவன் எந்த எதிர் கேள்வி.
கேட்டாலும் அதுக்கு ஒரு பதில். வச்சிருக்கானே?
அப்படின்னு நினைச்சுகிட்டு தொட்டிய விட இந்த குழம்பு இவ்ளோ.
பெருசா இருக்கே எப்படி. இதால தொட்டி அடைக்க முடியும்.
அப்படின்னு கேட்டா. அதுக்கு எவனும் அவன் கொண்டு

(37:11):
வந்திருந்த இந்த மாடு ஆடுகள கற்ற தடிய வெளிய எடுத்து இந்த பாருங்க.
அப்படி ஏதாவது ஆச்சுன்னா இதோ இந்தகுழம்புக்குள்ள தொட்டிய இருக்கமாக
பொருத்த முடியும். அப்படின்னு சொன்னா.
இந்த இளவரசி எப்படி தான் ஏறுமாறானகேள்விகள் கேட்டாலும் அதுக்கு
தக்க பதில் கொடுத்துக்கிட்டே இருந்தா இத பாத்து இந்த இளவரசி

(37:33):
ஆச்சரியப்பட்டு ஆஹா. இவன.
எப்படியாவது நம்ம மடக்கணுமே அப்படின்னு இளைஞனே நான் என்ன
சொன்னாலும் அத வேறொரு விதமா நீ திருப்பி விடுறியா?
நாக்கு பல திருப்பங்கள் இருக்கிறது போல நீ நடந்துக்கிறியே
அப்படின்னு கொஞ்சம் சுருக்குன்னு கேட்டா.
ஆனா ஈவனோ அதுக்கும் பதிலாக. தன்னோட கோணி பயில இருந்த அந்த

(37:56):
ஆட்டோட வளைஞ்ச கொம்புகளை எடுத்து காமிச்சு என் இளவரசி இந்த ஆட்டு
கொம்புகளை விட அதிக திருகுகள் இருக்கிறது.
நீங்க பாத்திருக்கீங்களா அப்படின்னு கேட்டான் இந்த
இளவரசியோ இந்த இளைஞனுக்கு என்ன பதில் சொல்றதுன்னு தெரியாம ரொம்ப
நேரம் யோசிச்சா. வேற வழி இல்லாம தன்னோட தோல்விய

(38:18):
ஒத்துக்கிட்டு இந்த இளைஞனுக்கு பரிசு கொடுக்கும்படி தன்னோட
தந்தையான மன்னர்கிட்ட சொன்னா மன்னர்கிட்ட இந்த இளைஞனுக்கு
பரிசு கொடுக்க சொல்லிட்டு இந்த இளவரசி இளைஞன பாத்து எப்படி எந்த
ஒரு கேள்வி கேட்டாலும் அதுக்கு சரியான பதிலும் அதுக்கு தகுந்த
பொருட்களையும் நீ வச்சிருக்க அப்படின்னு கேட்டா.

(38:40):
அதுக்கு இந்த இளைஞனும் இந்த பாருங்க.
அறிவுடையார் ஆவத அறிவார் அறிவியார் அக்தரிகள் ஆதவர்
அப்படின்னு திருவள்ளுவர் சொல்லி இருக்காரு.
அதாவது அறிவுடையோர் எதிர்காலத்துலநிகழப்போவது முன்னாடியே எண்ணி
அரிய வல்லவர் அறிவில்லாதவர்களோ அதனை அறிய முடியாதவர் அப்படின்னு

(39:02):
சொல்லி இருக்காரு. அதனால தான் சில பொருட்கள நான்
என்கிட்ட எப்பயுமே வச்சிருப்பேன்.தகுந்த சமயத்துல அத
உபயோகப்படுத்துவேன். அப்படின்னு சொன்னா அத கேட்டு இந்த
இளவரசியும் மன்னரும் ரொம்ப ஆச்சரியப்பட்டாங்க.
அவ்ளோ. தான்.

(39:29):
பழமொழி கதைகள். எழியும்.
அணிலும். கிருஷ்ணகிரிக்கு அடுத்து
தமிழ்நாட்டுக்கும், கர்நாடகாவுக்கும் எல்லையாக ஓசூர்
அப்படின்னு ஒரு ஊருக்கு. இந்த ஊர்ல ரொம்ப வருஷத்துக்கு
முன்னாடி ராஜு ராகினி அப்படின்னு ஒரு அண்ணன் தங்கச்சி இருந்தாங்க.

(39:53):
அவங்க சின்ன பசங்களா இருக்கும் போது எப்பயும் தினமும் தூங்கும்
போது அவங்க. அப்பாவ கதை சொல்ல சொல்லி.
கேப்பாங்க. அவங்க அப்பாவும் இவங்க ரெண்டு
பேருக்கும் தூங்குறதுக்கு முன்னாடி தேனமும் கதை சொல்லுவாரு.
அப்படி இவங்க அப்பா கதை சொல்ல ஆரம்பிக்கிறதுக்கு முன்னாடி இவங்க
அம்மா பக்கத்துல இருந்து ராஜு இப்ப பாரு அப்பா.

(40:17):
ஒரு ஊர்ல. ஒரு ஊர்ல அப்படின்னு கதை சொல்ல
ஆரம்பிப்பாரு. அப்படின்னு சொல்லி சிரிப்பாங்க
ராஜூவும் அம்மா இருங்கம்மா அப்பா கதை சொல்லட்டும் அப்படின்னு
தூங்குறதுக்கு தயாராக இருப்பான். அப்படி அன்னைக்கு ஒரு நாள் ராஜூ
ராகினியும் அவங்க அப்பாவ கதை சொல்ல சொல்லி கேட்டாங்க.

(40:40):
உடனே அவங்க அப்பாவும் கத சொல்ல தயாரானாங்க.
நம்ம ஓசூருக்கு பக்கத்துல மத்திகிரி இருக்குதான இந்த
மத்திகிரில ரொம்ப வருஷத்துக்கு முன்னாடி விவசாயி ஒருத்தர்
வாழ்ந்துட்டு வந்தாரு. அவரோட தோட்டத்துல நிறைய செடிகள்
எல்லாம் வளத்துட்டு வந்தாரு. மேலும் அவரோட தோட்டத்துல

(41:01):
காலத்துக்கு ஏத்தது போல நிலக்கடல கேரட்.
பீட்ரூட் அப்படின்னு வெவ்வேற. காய்கறிகள் விளைவிப்பாரு.
இப்படி இருந்த இவரோட தோட்டத்துல நிறைய சின்ன சின்ன விலங்குகள்
எல்லாம் வசிச்சுண்டு வந்துச்சு. அப்படி தான் அவரோட தோட்டத்துல ஒரு
அணிலும் எழியும் கூட வாழ்ந்துட்டுவந்துச்சுங்க அந்த ஒரு.

(41:23):
சமயத்துல இந்த விவசாயி. தன்னோட நிலத்துல சோழத்தை
பயிரிட்டு இருந்தாரு. இப்படி பயிரிட்ட சோளத்த சில
காலத்துக்கு அப்புறமா அறுவடை செஞ்சு அறுவடை செய்யப்பட்ட
சோளத்தை எல்லாம் பக்கத்துல இருந்தஒரு குடோன்ல சேமிச்சு
வச்சிருந்தாரு. இப்படி அந்த குடோன்ல இந்த
விவசாயி. இந்த சோளங்களை.

(41:44):
எல்லாம் பல மரப்பெட்டிகள்ல பத்திரமாக வச்சிருந்தாரு.
இதையெல்லாம் அந்த தோட்டத்துல இருந்த இந்த எலி கவனிச்சுட்டே
இருந்துச்சு. அந்த சமயத்துல இந்த எலியோ அந்த
குடோனுக்குள்ள பூந்து ஏதாவது ஒரு சோழப்பெட்டிக்குள்ள நுழையலாம்.
அப்படின்னு. தேடிக்கிட்டு இருந்துச்சு.
ஆனா எல்லா பெட்டிகளும் நல்லா இருக்குமா?

(42:07):
மூடப்பட்டிருந்துச்சு. ஆனா என்னது இது இவ்வளவு சோளங்கள்
எல்லாம் இவர் நல்லா அறுவடை பண்ணாரு.
அவ்வளவு மரப்பெட்டிகள்ல போட்டு வச்சாரு.
ஏதாவது ஒரு பெட்டியில பூந்து சோளத்து திங்களானு பாத்த இப்படி
எல்லாம் நல்ல மூடப்பட்டிருக்கே. அப்படின்னு இந்த எலி தனக்கு தானே
பேசிக்கிட்டு நடந்து போயிட்டே இருந்துச்சு.

(42:30):
இந்த எலி இப்படி பொலம் வருத. பக்கத்துல இருந்த இதோட நண்பன் ஆன
அனில் பாத்துட்டு இருந்துச்சு ஏய்.
என்னடா நீ தனியா ஏதோ பேசிக்கிட்டுஇருக்க என்ன விஷயம்.
அப்படின்னு கேட்டுச்சு. அதுக்கு இந்த எழியும் சோளத்த தேடி
அது ஏமாந்த. விஷயத்த சொல்லிக்கிட்டு
இருந்துச்சு. இது இப்படி சொன்னதும் அத

(42:51):
கேட்டானிலோ. அய்யா இதுக்காகவா நீ வருத்தப்படுற
இன்னும் எத்தன மரப்பெட்டிகள் இருக்கு.
ஒருமையாக தேடு நிச்சயம் ஏதாவது ஒரு பட்டியல்ல இடம் இருக்கும் நீ
அதுல பூந்து கொஞ்சம் கொஞ்சமா இந்தசோழத்தை எடுத்துட்டு வா சரியா.
அப்படின்னு சொல்லுச்சு. சரி நண்பா.
நானும் வேற சில பெட்டிகள் எல்லாம்தேடி பாக்குறேன்.

(43:13):
அப்படின்னு சொல்லிட்டு இந்த எலி திரும்பவும் சோழப்பெட்டிகளை தேட
ஆரம்பிச்சுச்சு. கொஞ்ச நேரம் இப்படி அந்த
குடோனுக்குள்ளே சுத்தி வந்த இந்த எலிக்கி ஒரு வழியா ஒரு பெட்டியில.
ஒரு. சின்ன ஓட்ட இருக்கிறது
தெரிஞ்சுச்சு. ஐ நம்ம உள்ள பூந்து போற அளவுக்கு
இந்த பெட்டியில் ஒரு ஓட்டை இருக்கே.

(43:33):
அப்படின்னு இந்த எலிக்கு ரொம்ப. ஆனந்தம்.
அவ்ளோ சந்தோஷப்பட்டுச்சு. உடனே சோளம் இருந்த அந்த
மரப்போட்டிக்குள்ள அந்த கூட்டி ஓட்ட வழியாக இந்த எலி உள்ள
பூந்துச்சு. ஆனா உள்ள பூந்த இந்த எளியோ
கொஞ்சம் கொஞ்சமா இந்த சோளத்த கொண்டு வந்து தன்னோட பொந்துல

(43:54):
வைக்காம அது என்ன பண்ணுச்சு தெரியுமா?
சோளத்த பார்த்த சந்தோஷத்துல அத அந்த பொட்டிக்குள்ளயே லபுக்கு
லபுக்கு லபுக்குன்னு திங்க ஆரம்பிச்சு.
ஆரம்பிச்சிடுச்சு. இப்படி இந்த சோலத்த
எக்கச்சக்கமாய்து. சாப்பிட்டதால அதோட வயிறு நல்ல
பெருசா, பொண்ணு உப்புடிச்சு. இத யோசிக்காத இந்த எலியோ

(44:17):
வேண்டியதெல்லாம் சாப்பிட்டு முடிச்சதுக்கு அப்புறமா கொஞ்சம்
கொஞ்சமா சோளத்து எடுத்துட்டு வெளிய போலாம்.
அப்படின்னு அந்த ஓட்டுக்குள்ள தலைவிட்டுச்சு.
அப்படி உட்டா. அய்யய்யோ என்னது நம்மளால வெளிய வர
முடியல நம்மளோட மிச்சு உடம்பெல்லாம் போட்டிக்குள்ளே
இருக்கு. அப்படின்னு கண்ணா பின்னனு தவிக்க.

(44:37):
ஆரம்பிச்சிடுச்சு. அப்பறம் தான் அந்த.
எலிக்கு அய்யய்யோ நம்ம என்னது இப்படி கண்ணா பின்னனு சோலுக்கு
சாப்பிட்டதால நம்மள இந்த போட்டியில் இருந்து வெளியே வர
முடியலேயே. எனக்கு வீட்டுக்கு போகணும்
எனக்கு. வீட்டுக்கு போகணும் அப்படின்னு
அந்த போட்டிக்குள்ளயே தனியா அழ ஆரம்பிச்சிடுச்சு.

(44:58):
அந்த சமயத்துல இந்த பெட்டிக்கு வெளி பக்கத்துல.
பொறுமையா நடந்து போயிட்டு இருந்த.அனிலுக்கு தன் நண்பனான இந்த எலி
அழற சத்தம் கேட்டுச்சு. அய்யோ என்னது நம்ம நன்மை எங்கயோ
அடராணி என்ன பண்றானோ தெரியலையே. அப்படின்னு.
அப்படின்னு இந்த அணியிலோட பாஷையிலகத்திச்சு.

(45:22):
இத கேட்ட இந்த எழியும் திரும்பவும் அந்த ஓட்டுக்கிட்ட
வந்து. நண்பன்.
இங்க இருக்கேன். அப்படின்னு.
ஆழ ஆரம்பிச்சுடுச்சு. அத பாத்ததும்.
இந்த மரப்பெட்டிக்கு பக்கத்துல இந்த அணில் ஓடி வந்துச்சு.
என் நண்பர் என்னாச்சுடா? எதுக்கு இங்க நீ அழுதுகிட்டு
இருக்க வெளிய வரவேண்டியது தான. அப்படின்னு கேட்டுச்சு.

(45:44):
அப்பதான் இந்த எலி நடந்த இந்த விஷயத்தெல்லாம் தன் நண்பனான
அணில்கிட்ட சொல்லுச்சு. அத கேட்ட.
இந்த அணிலோ நல்ல சிரிக்க ஆரம்பிச்சிடுச்சு.
நீ நண்பா ஒன்னு நான் அப்பவே சொன்னேன் தான கொஞ்சம் கொஞ்சமா
எடுத்துட்டு வான்னு எதுக்கு இப்படி மொத்தமா சாப்பிட்ட சரி போ
ஒன்னும் வருத்தப்படாத நீனு பத்திரமா இதுக்குள்ளே படுத்து

(46:06):
தூங்கு நாளைக்கு இந்த சோளம் எல்லாம் உனக்கு ஜீரணமானதுக்கு
அப்பறம் நீ வெளிய வந்துடலாம் கவலைப்படாத.
பயப்படாத. அப்படின்னு அதுக்கு தைரியம்
சொல்லிட்டு தன்னோட பொந்துக்கே போயிடுச்சு.
தன்னோட நண்பனான அனில் இப்படி தனக்கு தைரியம் சொல்லிட்டு
போனதும் இந்த ஏலி சரி. வேற என்ன பண்றது நம்ம இங்கே

(46:29):
படுத்து தூங்குவோம். நம்மளும் தேவையில்லாம
பேராசைக்காரனா இருந்துட்டோம். ஒழுங்கா இந்த சோளத்த எடுத்துட்டு
போய் நம்ம பூந்திலேயே வச்சு அப்புறமா சாப்பிட்டு இருக்கணும்.
இப்படி உடனடியா தின்னதால தான் நம்ம வெளிய வர முடியாம
மாட்டிக்கிட்டோம். அப்டின்னு பொழம்பிக்கிட்டு
அன்னைக்கு போட்டிக்குள்ளயே தூங்கிச்சு.

(46:50):
அடுத்த நாள் இந்த ஏழை தூங்கி எழுந்ததும் அந்த போட்டிக்குள்ளயே
குடு குடு குடுன்னு இந்த பக்கமும்அந்த பக்கமும் ஓடி.
இதுக்கு தான் இந்த மனுஷங்கள்லாம் காலைலயும் சாய்ந்தத்துல ஓடுறாங்க
போல இருக்கு. சாப்பிட்ட சாப்பாட்ட
ஜீரணிக்கிறதுக்காக தான் இப்படி ஓடுறாங்கலோ.
சரி நம்மளும் அப்படியே பண்ணி பாப்போம்.

(47:11):
அப்படின்னு கொஞ்சம் போட்டிக்குள்ளயே இந்த பக்கமும்
அந்த பக்கமும் ஓடி. தன்னோட வயித்துல இருந்த இந்த
சோலத்தை எல்லாம் ஜீரணிக்க வச்சிச்சு.
அப்புறமா மத்தியானத்துக்கு மேல தான் இந்த வயிறுல இருந்த சோளம்
எல்லாம் கொஞ்சம் கொஞ்சமா கரைஞ்சதுக்கு அப்பறம் இந்த பெட்டி
வழியால அது எட்டிப் பார்த்து வெளிய வர முடியுதா?

(47:31):
அப்படின்னு பாத்துச்சு. அப்புறமா தான் சாய்ந்திரத்துக்கு
மேல ஒரு வழியா இதோட வயிறு கொஞ்சம்எளிஞ்சதால இந்த பெட்டியில்
இருந்து அதனால வெளிய வர முடிஞ்சுச்சு.
அப்படி வெளிய வந்ததும் நேர தன்னோடநண்பனான அணில பாக்க ஓடுச்சு.
அங்க போய் தன்னோட தவறை சுட்டிக் காட்டினதுக்காக அது கிட்ட நன்றி

(47:53):
சொல்லிச்சு. அதுக்கு அப்புறமா இந்த தோட்டத்துல
ரெண்டு பேரும் தோள் மேல கை போட்டுகிட்டு பாட்டு பாடிக்கிட்டு
சுத்த ஆரம்பிச்சுட்டாங்க. அப்படின்னு.
இந்த கதைய ராஜூவும் ராகினியோட அப்பாவும்.
சொல்லி முடிச்சுட்டு இருந்தாரு. அப்படி முடிக்கும்போது தான் ராஜு
தன்னோட அப்பா கிட்டயும் தன் தங்கச்சியான ராகினி கிட்டயும்.

(48:14):
ஐ உங்களுக்கு ஞாபகம். இருக்கா அம்மா எப்பயும் ஒரு.
பழமொழி சொல்லுவாங்க தான. சிறுக கட்டி பெருகவாள்
அப்படின்னு. அது போல தான் இந்த எலி கொஞ்ச
கொஞ்சமா சேர்த்து வச்சு அப்பறம் வேண்டிய சமயத்துல அது.
உபயோகப்படுத்தி இருக்கணும். வேண்டிய நேரத்துல அது
செலவழிச்சிருக்கணும். ஆனா அது போல இல்லாம.

(48:36):
இது ஒரே. வாட்டி செலவழிச்சதால தான் இப்படி
அந்த பெட்டியில போய் மாட்டிருக்கு.
நல்ல வேல அதோட நண்பன் இதுக்கு சரியான நேரத்துல அது புரிய
வச்சுச்சு அப்படின்னு. அவங்க அம்மா சொல்றேன் அந்த.
பழமொழி சொல்லிட்டு அப்பறம் அப்பா நீங்க கதை முடிக்கிறதுக்கு
முன்னாடி அம்மா எப்பயும் ஆச்சு அவ்ளோதான் அப்படி சொல்வாங்க இல்ல

(48:58):
அதே மாதிரி நானே இந்த கதையை முடிக்கிறேன் அப்படின்னு
சொல்லிட்டு இதோ இத தான் சொன்னா. என்னன்னா?
அவ்ளோதான். திருக்குறள் கதைகள்.

(49:19):
கோவக்கார முனிவர். நம்ம இந்திய நாட்டுல உத்தராகண்ட்
அப்படிங்குற மாநிலத்துல. கார் வால் அப்படிங்குற ஒரு
இடத்துல தேவப்பிரயாகி ருத்ர பிரயாக் ஐ கர்ணப் பிரயாகை விஷ்ணு
பிரயாகை நந்த பிரயாகை அப்படின்னு கங்கை ஆற்றோட துணை ஆறுகளான

(49:42):
பாக்யிருதியாரு ஆழகன் தாறு மந்தாகினி ஆறு.
பிந்தராறு அப்படின்னு பல ஆறுகள் ஒன்னு சேரையாடம்.
இந்த அஞ்சு பிரயாக இல்ல ருத்ர பிரயாகி பக்கத்துல இருக்க
மந்தாகினி ஆறு கிட்ட ஒரு பெரிய காடு இருந்தது.
இந்த காட்டுல பல 1000 வருஷத்துக்கு முன்னாடி ஜமதக்கினி

(50:07):
அப்படின்னு ஒரு முனிவர் ஒருத்தர் கடுமையான தவம் செஞ்சுண்டு
வந்தாரு. அவர் இது போல தவத்துல
ஈடுபட்டிருக்கும் போது அந்த பக்கமா ரெண்டு காட்டுவாசிகள்
வந்தாங்க. அந்த ரெண்டு பேர்ல ஒருத்தங்க
திடீர்னு மயக்கம் போட்டு கீழ விழுந்துட்டாங்க.
அடடா என்ன செய்யறது அப்படின்னு தெரியாம தகச்சு போன இன்னொருத்தனோ

(50:31):
பக்கத்துல தவத்துல இருந்த இந்த முனிவர எழுப்பி அவர்கிட்ட உதவி
கேட்டான். தன்னோட தவம் கலைஞ்ச கோவத்தால்.
இந்த முனிவர் அந்த காட்டுவாசிய சாம்பலாக போகும்படி
சபிச்சிட்டாரு. அடுத்த கணமே இந்த காட்டுவாசி
எரிஞ்சு சாம்பலாயிட்டான். இவன் இப்படி சாம்பலாகி கீழ

(50:52):
விழுந்ததும் கொஞ்ச நேரத்திலேயே ஏற்கனவே மயக்கம் போட்டிருந்த அந்த
இன்னொரு காட்டு வாசி மயக்கம் தெளிஞ்சு எழுந்து பாத்தா.
எழுந்து பாத்தா கண்ணோட நண்பன் இப்படி சாம்பலாகி கீழ
விழுந்திருக்கிறது கவனிச்சா. அத பாத்து மனசு ரொம்ப கஷ்டப்பட்டு
போய் காதலி அழுதான். இது நடக்கறதுக்குள்ள இந்த

(51:17):
முனிவரோட கோபம் கொஞ்சம் தனிஞ்சிருந்தது.
உடனே இந்த இன்னொரு காட்டுவாசியோ இந்த முனிவர் கிட்ட போய் அய்யா
என் நண்பனுக்கு நீங்க இட்ட சாபத்தநீக்குங்க அப்படின்னு அவரு வேண்டி
கேட்டுன்னா. ஆனா அதுக்கு அந்த முனிவரோ எனக்கு
சாபம் கொடுக்க தான் தெரியுமே தவிரசாபத்திலிருந்து எப்படி

(51:39):
மீட்கிறதுன்னு தெரியாது. நான் போய் விஷ்ணு பிரயகை ல இருக்க
என்னோட குரு சியாவனா கிட்ட சாபத்தஎப்படி நீக்கிறது அப்படிங்கிறது
கத்துக்கிட்டு வந்து உன்னோட நண்பனமீட்கிறேன்.
அது வரைக்கும் நீனு உன் நண்பனோட சாம்பல பத்திரமா பாதுகாத்துண்டு
வா அப்டின்னு சொல்லிட்டு தன்னோட குருவ தேடிப் போனாரு இந்த

(52:01):
முனிவர். 12 நாள் நடந்து தன் குருவோட வசிப்பிடத்துக்கு போனாரு.
அங்க போய். அவர்கிட்ட நடந்த இந்த
விஷயங்களையெல்லாம் விளக்கமாக சொல்லி அதுக்கு பரிகாரம்
கேட்டாரு. அதுக்கு தன்னோட குருவான இந்த
சாவனாவோ. இங்க பாரு மனுஷனோட முதல் விரோதி

(52:23):
அவனோட கோவம் தான். நீ குடுக்குற சாபத்தால உன்னோட தவ
வலிமை குறைஞ்சிடும். உன்னோட தவ வலிமை முழுக்க நீ
தியாகம் செஞ்சன்னா தான் உன்னோட சாபத்த நீ திரும்ப பெறலாம்.
அப்படின்னு சொன்னாரு. ஆனா அதுக்கு இந்த ஜமதக்கினி
முனிவரோ இணங்காம வேற ஏதாவது யோசன சொல்லும்படி கேட்டாரு.

(52:46):
உடனே தன்னோட குருவான இந்த சாவனாவோ, இங்க பாரு கந்தபுரம்
அப்படிங்குற ஊர்ல சுந்தரன் அப்படிங்குற ஒரு புண்ணியவான்.
இருக்காரு. அவரோ இல்ல இடத்துல.
இருக்கவரு. அவர் வீட்டுக்கு போய் அவரோட
புண்ணியத்துல ஒரு பகுதிய தானமாக வாங்கிக்கோ அத வச்சு வேணா இந்த

(53:08):
காட்டுவாசிய நீ உயிர்ப்பிக்கலாம்.அப்படின்னு சொன்னாரு.
உடனே இந்த முனிவரோ அந்த சுந்தரன தேடி அவரோட ஊருக்கு போனாரு.
அப்படி ஒரு வீதி. வழியால போயிட்டு இருக்கும் போது
அந்த இடத்துல ஒரு சின்ன நாய் குட்டி ஒன்னு விளையாடிட்டு
இருந்துச்சு. அப்படி இந்த முனிவர் இந்த

(53:29):
நாய்க்குட்டிய பாத்துக்கிட்டு இருக்கும்போது அது இந்த முனிவரோட
கால்கிட்ட வந்துச்சு போயிடுச்சு. இந்த நாய்க்குட்டி இப்படி தன்னோட
கால அசிங்கப்படுத்தினதும் இந்த முனிவருக்கு பயங்கரமான.
கோபம் வந்துருச்சு. அட நாய்க்குட்டிய இவ்ளோ அழகா நீ
விளையாடிட்டு இருக்கேன்னு உன்ன பாத்து ரசிச்சேன்னா உனக்கு

(53:49):
எவ்வளவு திமிரு இருக்கணும் என்னோடகால்லயே வந்து நீன்னு சுச்சு
போறியா? உன்ன என்ன பண்றேன் பாரு இதுக்கு
மேல நீ நாய்க்குட்டியாக இல்லாம அவலட்சனமாக நோய் வந்த ஒரு நாயாக
மாறுவாய் அப்படின்னு அதுக்கு சாபம் விட்டுட்டாரு.
அதுக்கு அப்புறமா தொடர்ந்து அந்த சுந்தரன பாக்குறதுக்காக

(54:09):
கந்தபுரத்த நோக்கி நடந்தாரு. அப்படி போகும்போது வழியில ஒரு
இளைஞன்கிட்ட சுந்தரனோட வீட்டுக்குபோகறதுக்கான வழி கேட்டாரு.
ஆனா அந்த இளைஞனோ எதுக்காக அவரு வீட்டுக்கு வழி கேக்குறீங்க.
அவரு வீட்ல ஒரு அழகான நாய்க்குட்டி இருக்கு.
அது எப்படியாவது எடுத்துட்டு போகலாம்னு பாக்குறீங்களா?

(54:30):
அதுக்காக தான் கேக்குறீங்களா உங்கள போல முனிவருக்கு இது தேவையா
அப்படின்னு கொஞ்சம் அதட்டலாக கேட்டா.
உடனே இந்த முனிவர் அதுக்கும் கோவப்பட்டு என்னையே நீ எதிர்த்து
பேசுறியா? உன்ன என்ன பண்றேன் பார்
அப்படின்னு அவன ஊமையாக போகும்படி சபிச்சிட்டாரு.

(54:51):
இது நடந்ததுக்கு அப்புறம் கொஞ்ச நேரம் கழிச்சு தானாகவே இந்த
சுந்தரத்தோட வீட்ட கண்டுபிடிச்சிட்டாரு.
இந்த முனி வர சுந்தரன் வரவேற்று தன்னோட வீட்ல அமர செஞ்சாரு.
என்னோட குரு சாவனா தான் உங்கள ஒருபுண்ணியவான் அப்படின்னு சொன்னாரு.
நீங்க அப்படி என்ன தவம் செஞ்சு என் குருவே உங்கள புகழும் படி

(55:13):
புண்ணியம் சம்பாதிச்சீங்க அப்படின்னு கேட்டாரு இந்த
முனிவர். அதுக்கு இந்த சுந்தரமோ இவர
பாத்து. இந்த பாருங்கய்யா நானு காலைல.
எழுந்து. என்னோட நித்திய கடன்களை எல்லாம்
முடிச்சிட்டு வீட்டு. வேலைகளையும், வெளி வேலைகளையும்
பங்கேற்கிறேன். எல்லாருக்கும் என்னால முடிஞ்ச

(55:35):
அளவுக்கு உதவிகள் செய்கிறேன். கோவம், பொறாமை, ஆசை இது
எல்லாத்தையும் விட்டொழிஞ்சு மனசாலையும், வாக்காலையும்
உடம்பினாலயும் பலருக்கு நன்மைகள் செய்கிற அப்படின்னாரு சுந்தரன்.
இந்த முனிவரோ அவர பாத்து கொஞ்சம் ஆச்சரியமாக.

(55:55):
அப்போ நீங்க கடவுள் தியானம் செய்கிறது கிடையாதா?
அப்படின்னு கேட்டாரு. அதுக்கு இந்த சுந்தரமோ?
இந்த பாருங்க. கடவுள் என்னிலும் இருக்கார்.
மற்றவர்களிடமும் இருக்கார். சகல உயிர்களிடமும் இருக்கிறார்.
அவர தனியாக பூஜையோ தியானமோ ஏன் செய்யணும்?

(56:17):
மத்தவங்களுக்கு உதவி செஞ்சாலே அதுகடவுளுக்கு செய்யப்படுற பூஜை,
தியானம், தவம் இது எல்லாத்தையும் செஞ்சது போலாகுமே அப்படின்னு
சொன்னாரு. இத கேட்ட இந்த கோவக்கார முனிவரோ.
என்னது அப்போ நான் செய்யுற தவம் எல்லாம் வீண் வேலைன்னு
சொல்றீங்களா அப்படின்னு ரொம்ப கோவப்பட்டாரு.

(56:39):
சுவாமி. நான் உங்கள பத்தியோ உங்களோட தவத்த
பத்தியோ குறை சொல்லல நானு என்னோட கருத்து தான் சொன்னேன் அப்படின்னு
ரொம்ப பணிவோட பதில் சொன்னாரு இந்தசுந்தரம்.
ஆனா அவரு அவ்வளவு பணிவோட சொல்லியும் கூட இந்த முனிவருக்கு
சுந்தரத்து மேல கோவம் குறையவே இல்ல.

(57:01):
உடனே அவர பாத்து இந்த நிமிஷத்துல இருந்து நீ கண் பார்வை இழந்து
நடக்க முடியாம படுத்த படுக்கையாக விழுவாய் அப்படின்னு
சாபமிட்டுட்டாரு. ஆனா அதுக்கு அப்புறமா கூட
சுந்தரனுக்கு ஒன்னுமே ஆகல. திரும்பவும் அவர் பணி ஓட.
இந்த முனிவர பாத்து சுவாமி சாந்தமடையுங்கள்.

(57:25):
உங்கள போல மகான் கோபமடையும் படி நான் பேசினது தப்பு தான் என்ன
மன்னிச்சிடுங்க அப்படின்னு பணிவோடகேட்டாரு.
இந்த முனிவரோ சுந்தரா. நான் உனக்கு இட்டு சாபம் உனக்கு
பலிக்கவே இல்லையே ஏன் அப்படின்னு கேட்டாரு.
அதுக்கு இவரோ சுவாமி. அப்படி இல்ல.

(57:47):
காட்டுவாசி அந்த நாய்க்குட்டி வழியில பாத்த அந்த இளைஞன்
அப்படின்னு இவங்க எல்லாருக்கும் நீங்க கொடுத்த சாபத்தால உங்களோட
தவ வலிமை முழுக்க நஷ்டமாயிடுச்சு.நீங்க உங்க தவத்தோட பலன்
முழுவதையும் இழந்துட்டீங்க. நான் மட்டுமில்ல இனிமே நீங்க
யாருக்கு சாபம் கொடுத்தாலும். அது பலிக்காது.

(58:10):
சரி போகட்டும் நீங்க. என்கிட்ட வாங்க வந்த அந்த
புண்ணியத்தோட ஒரு பகுதிய உங்களுக்கு நான் இப்போ
குடுக்குறேன். அந்த புண்ணியத்தால நீங்க
சாபமிட்டவங்க எல்லாருக்கும் இந்த கணத்திலிருந்து சாபம் நீங்கிடும்.
உங்களோட தவ வலிமைய இந்த வினாடில இருந்து நீங்க திரும்பவும்

(58:31):
பெற்றுடுவீங்க. நீங்க விரும்பினா.
இப்ப வேணா எனக்கு சாபம் கொடுக்கலாம்.
அது நிச்சயமா பலிக்கும் அப்படின்னு சொன்னாரு.
தன்னோட செய்கையால் அவமானம் அடைஞ்சஇந்த முனிவர் சுந்தரனுக்கு நன்றி
சொல்லிட்டு மௌனமாக தன்னோட குருவ தேடி போனாரு.
வர வழில தான் சாபமிட்டவங்க எல்லாரும் மறுபடியும் தங்களோட

(58:55):
நல்ல நிலைக்கு மாறியிருக்கிறது. இந்த முனிவர் கவனிச்சாரு.
தன்னோட குருவான சாவனா கிட்ட நடந்தஎல்லா விஷயங்களையும் சொல்லி
அதுக்காக விளக்கம் கேட்டாரு இந்த முனிவர்.
அதுக்கு அந்த குருவோ. தவத்தினால் பல சக்திகளை அடையலாம்.
ஆனா தன்னோட கடமைய சிறப்பா செய்யிறவனும் பிறருக்கு உதவி

(59:19):
செய்யுறதுயே லட்சியமாக கொண்டவனுமான ஒரு மனுஷன் ஒரு தவ
யோகியை விட அதிக புண்ணியம் செஞ்சவனாகரம் அப்படின்னு
சொன்னாரு. அதுக்கு இந்த முனிவரோ குருவே.
இப்போ சுந்தரன் தான் செஞ்ச புண்ணியத்த எனக்கு தானம்
செஞ்சிட்டாரே அதனால. அவரோட சக்தியும் கொறஞ்சிருந்தான

(59:40):
அப்படின்னு ஒரு சந்தேகம் கேட்டாரு.
அதுக்கு இந்த முனிவர் கிட்ட இந்த குருவோ.
இதோ பாரு. மத்தவங்களுக்காக தன்னோட
புண்ணியத்தையே தானம் செஞ்சதால அதுவே பெரிய புண்ணியம்.
சுந்தரனோட சக்தி குறையல முன்னாடி இருந்தத விட இப்போ அதிகமா தான்
இருக்கு அப்டின்னு சொன்னாரு. இத கேட்ட இந்த முனிவரோ.

(01:00:04):
கோபத்தால இனிமேல் யாருக்குமே சாபமிடக்கூடாது.
அப்படின்னு தீர்மானிச்சு. தான் இருந்த அந்த காட்டு நோக்கி
போனாரு. இதுக்கு தான் திருவள்ளுவர்ம்.
தன்னைத்தான் காக்கின் சினம் காக்ககாவாக்காள் தன்னையே கொல்லும்
சினம் அப்படின்னு சொல்லி இருக்காரு.

(01:00:25):
அதாவது யார் ஒருத்தன் தன்னை தானே காத்துக்கணும் அப்படின்னு
நினைக்கிறானோ அவன் கோவத்த கைவிடணும் இல்லனா அந்த கோவமே அவன
அழிச்சிடும் அப்படின்னு சொல்லிருக்காரு.
சரியா? அவ்ளோதான்.
Advertise With Us

Popular Podcasts

Stuff You Should Know
Dateline NBC

Dateline NBC

Current and classic episodes, featuring compelling true-crime mysteries, powerful documentaries and in-depth investigations. Follow now to get the latest episodes of Dateline NBC completely free, or subscribe to Dateline Premium for ad-free listening and exclusive bonus content: DatelinePremium.com

The Bobby Bones Show

The Bobby Bones Show

Listen to 'The Bobby Bones Show' by downloading the daily full replay.

Music, radio and podcasts, all free. Listen online or download the iHeart App.

Connect

© 2025 iHeartMedia, Inc.