All Episodes

December 1, 2025 53 mins

Get ready for nearly a full hour (53 minutes) of non-stop mystery and puzzle with the legendary Vikramadithan & Vedhalam (Vikram & Betaal)! In this special compilation episode, we bring you 5 engaging tales where the wise King Vikramadithan must solve the tricky puzzles posed by the cunning Vedhalam.

Perfect for older kids who love a challenge, long drives, or a screen-free puzzle-solving session. These stories teach valuable lessons about leadership, understanding others, dealing with enemies, and the power of effort, all in pure Tamil.

🎧 Stories Included in this Mystery Collection (Timestamps):

  • 00:00 - Intro

  • 00:24 - Who is Fit to be the Commander? (Senathipathi Pathavikku Thaguthiyanavan Yaar?)

  • 11:35 - The People Who Did Not Understand (Purinthu Kollatha Makkal)

  • 22:09 - Mermaid Hishika (Kadal Kanni Hishika)

  • 30:42 - The Good Enemy (Nalla Pagaivan)

  • 42:03 - Hard Effort (Kadumaiyana Muyarchi)

❤️ Love this 53-minute compilation? Please Follow the show and Save this episode to your library!

Keywords: Tamil Kids Podcast, Vikramadithan Stories, Vedhalam Stories, Vikram Betaal Tamil, Puzzle Stories, Mystery Tales, Non-stop Tamil Stories, Bedtime Stories in Tamil, Kadhaineram.

Mark as Played
Transcript

Episode Transcript

Available transcripts are automatically generated. Complete accuracy is not guaranteed.
(00:00):
குழந்தைகளுக்கும், பெற்றோர்களுக்கும் வணக்கம் நான்
தான் பேசுறேன். இந்த வருஷம் நம்ம கதைகள் எல்லாம்
எப்படி இருந்துச்சு. அடுத்த வருஷம் இன்னும் சுவாரஸ்யமா
இருக்கணுமா? என்னென்ன கதைகள்ல
எதிர்பாக்குறீங்க. இது எல்லாத்தையும் நம்ம
ப்ளேலிஸ்ட் பேஜ் ல இருக்க ஃபீட்பேக் லிங்க் ல தெரிவீங்க.
மறக்காம உடனே உங்களோட ஃபீட்பேக் குடுங்க.

(00:21):
இப்போ இந்த கதைய கேட்கலாம். விக்ரமாதித்தன் வேதாளம் கதைகள்.
சேனாதிபதி பதவிக்கு தகுதியானவன் யார்?
தன் முயற்சியில் சற்றும் மனம் தளராத விக்ரமன் திருப்பியும்
மரத்துல ஏறி அதுல தொங்கின. உடம்ப கீழ தள்ளினா.

(00:41):
அதுக்கப்புறம் கீழ இறங்கி அவன் அந்த உடம்பு தூக்கிட்டு
போகும்போது அதுக்குள்ள இருந்த வேதாளம் மண்ணா எந்த
லட்சியத்துக்காக இந்த மாதிரி நடுராத்திரி மயானத்துல வந்து என்ன
தூக்கிட்டு போற இது எனக்கு புரியவே இல்ல.
சில சமயத்துல அறிவுல சிறந்தவர்கள்அப்படின்னு நம்ம நினைக்கிற சிலரோட

(01:04):
ஆலோசனைகள். நம்மள தவறான பாதையில அழைச்சுண்டு
போகும். அந்த மாதிரி அருவில் சிறந்தவர்
அப்படின்னு தான் கருதிய மந்திரியோட சொல்லை கேட்டு தவறு
வைத்த மன்னன் ஒருத்தனோட கதைய உனக்கு சொல்றேன்.
அப்படின்னு சொல்லிட்டு வேதாளம் கதை சொல்ல ஆரம்பிச்சு தான்.
மகி பாலன் அப்படிங்குற மன்னன் தன்னோட முதல் மந்திரியான

(01:28):
தர்மசீலரோட ஆலோசனைப்படி ஆட்சி செலுத்தி வந்தா ஒரு சமயம் அவனோட
சேனாதிபதி திடீர்னு இறந்து போக புதிய சேனாதிபதிய நியமிக்கிற
பொறுப்ப மகி பாலன் தர்மசீல இருக்கட்டும் படிச்சா?
உடனே தர்மசீலரும் நாடெங்கும் இருக்கிற பல வீர இளைஞர்கள்

(01:49):
தலைநகரத்துக்கு வர வச்சு வாள் சண்டை, வில் வித்தை, மல்யுத்தம்,
படைகளை இருக்கிற ஆற்றல், யுத்த தந்திரங்கள் அப்படின்னு இது
எல்லாவற்றிலும் தங்களோட ஆற்றலையும், திறமைகளையும்
வெளிப்படுத்த அழைச்சு வந்தா. அந்த அறிவிப்பின்படி ஏராளமான
வீரர்கள் தலைநகரத்துக்கு வந்தாங்களா?

(02:11):
ஒவ்வொரு நாளும் பலரோட திறமைகளையும் உன்னிப்பா கவனிச்சு
வந்த தர்மசீலர் கடைசில ரூபேசன் பராக் ரமன் அப்படிங்கிற ரெண்டு
பேரு தேர்வு செஞ்சார். இருவருமே.
எல்லா கலைகளிலும் சமமாக இருந்தாங்களாம்.
அதனால ரெண்டு பேர்ல ஒருத்தர் மட்டும் தேர்ந்தெடுக்கிறதுல

(02:32):
தர்மசீலருக்கு கொஞ்சம் சிரமம் ஏற்பட்டுதான்.
அந்த ரெண்டு பேரையும் நேர்ல கூப்பிட்ட மாதிரி.
நீங்க ரெண்டு பேரும் எல்லா கலைகளிலும் சரி சமமா இருக்கீங்க.
சோதிக்கப்பட வேண்டிய சில குணங்கள்இன்னும் கொஞ்சம் இருக்கு.
அத சோதிக்கிறதுக்காக நான் உங்ககிட்ட சபையில எல்லார்
முன்னிலையும் மூணு கேள்விகள் கேட்பேன்.

(02:55):
அந்த கேள்விகளுக்கு நீங்கள் அளிக்கும் பதிலை பொறுத்து உங்கள
ஒருத்தரை தேர்வு செய்வேன். சம்மதம்மா அப்படின்னு கேட்டாராம்.
ரெண்டு பேரும் அதற்கு சம்மதிச்சாங்களாம்.
அதன்படி அடுத்த நாளே ரெண்டு பேரும் சபைக்கு வந்தாங்களாம்.
சபை நிரம்பி இருக்கும் போது மன்னரும் மந்திரியும் வந்து

(03:15):
தங்களோட இருக்கையில உக்காந்தாங்களா?
தர்மசீலர் எழுந்து ரெண்டு பேரையும் பாத்து சேனாதிபதி
பதவிக்குரிய மற்றும் இன்னும் சில குணாதிசயங்களை சோதிக்கிறதுக்காக
நான் உங்கள மூணு கேள்வி கேட்டேன்.அப்படின்னு சொல்லி இருந்தேன்.
என்னுடைய முதல் கேள்வி இதோ அப்படின்னு சொல்லிட்டு பிரதான

(03:35):
சாலைல ரெண்டு இளைஞர்கள் ஒருத்தரோடு ஒருத்தர் சண்டை
போட்டுட்டு இருக்காங்க. இத நீங்க பாக்குறீங்க.
உடனே நீங்க என்ன செய்வீங்க அப்படின்னு கேட்டாரா?
உடனே பராக்கிரமன் என்னோட வயது லட்சன்னவன் ரூபேசன் மொதல்ல
அவனுக்கு வாய்ப்பு குடுங்க. அப்படின்னு சொன்னானா?
தர்மசீலரும், ரூபேசன பாத்தாரா? உடனே ரூபேசன் அய்யா.

(04:00):
பிரதான சாலைல ரெண்டு பேர் சண்ட போடுறது சட்டப்படி குற்றம்.
அதனால அவங்கள கைது செஞ்சு சிறையில் அடைப்பேன்.
பின்னர் விசாரணை செய்வேன். அதுக்கு அப்புறமா அவங்க ரெண்டு
பேருகிட்டயும் தாங்க சண்டை போட்டதுக்கான காரணங்கள கேட்டு
அவங்கள மன்னர் முன்னாடி கூட்டிட்டு வந்து தீர்ப்பு

(04:21):
வழங்கிறதுக்காக நிறுத்துவேன். அப்படின்னு சொன்னானா?
பராக்கிரமனம் ரெண்டு பேர் பிரதான சாலைல சண்டை போடுறாங்க.
அப்படினா அதற்கு காரணம் இருக்கும்.
நான் அவங்க சண்டை போடுறத தடுத்து காரணம் கேட்பேன்.
தப்பு யார் பேர்ல இருக்கு அப்படிங்கிறது தெரிஞ்சுண்டு அவங்க
சண்டைக்கான தீர்வு கொடுப்பேன் அப்படின்னு சொன்னானா?

(04:42):
சபை இல்ல தர்மசீலர் மன்னர் உட்பட எல்லாருக்கும் அவனோட பதில்
திருப்திகரமா இருந்துதான் தர்மசீலர் தன்னோட அடுத்த கேள்வியை
கேட்டாராம். நாட்டுல சில கழகக்காரர்கள் மக்கள
மன்னருக்கு எதிராக ராஜ துரோக காரியங்கள்ல நடந்துக்கிற மாதிரி
தூண்டி விடுறாங்க. அப்படிங்குற தகவல் உங்களுக்கு

(05:03):
கிடைக்கிறது. அப்படி கிடைக்கும் போது நீங்க
என்ன செய்வீங்க அப்படின்னு கேட்டாராம்.
அதுக்கு ரூபேசன் எனது திறமை வாய்ந்த ஒற்றர்கள் மூலம் அந்த
சதிக்காரர்களை கண்டுபிடிச்சு சிறையில் அடைச்சு விசாரணை
செய்வேன். அவங்களோட தலைவன் யார்?
அவங்க எந்த மாதிரியான நாச வேலைகள்ல ஈடுபடுறாங்க.
அவங்களுக்கும் நம்ம பகைவர்களுக்கும் தொடர்பு இருக்கா

(05:26):
என்பது போன்ற ரகசியங்களை கண்டுபிடிச்சு சேனையின் உதவியோடு
அவர்களை அழித்துவிடுவேன். அப்படின்னு ஆவேசமா சொன்னானா?
பராக்ரமன் வேலை இல்ல சிலர் ஈடுபடுறாங்க அப்படின்னா?
அதற்கு ஏதாவது காரணம் இருக்கும் சதிகாரர்கள்கிட்ட அந்த காரணத்த
தெரிஞ்சுக்க முயற்சி பண்ணுவேன். நியாயமான காரணங்களுக்காக அவங்க

(05:48):
சதி வேலைல ஈடுபட்டிருந்தா அவங்களோட குறைகளை மன்னருக்கு
தெரிவிச்சு நீதி வழங்குவேன். ஆனா பேராசையின் பொருட்டு அந்த
மாதிரி செய்றாங்க. அப்படின்னா அவங்களுக்கு தண்டனை
கொடுப்பேன். அப்படின்னு சொன்னானா?
பராக்ரமணோட அறிவுப்பூர்வமான இந்த பதிலை கேட்டு சபையில எல்லாரும்
கரகோஷம் செய்தாங்களாம். அதுக்கப்புறம் தர்மசீலர் தன்னோட

(06:10):
மூணாவது கேள்வி கேட்டாரா? மன்னரோட வேட்டையாட போகும்போது
அவர் மேல ஒரு சிங்கம் திடீர்னு பாஞ்சா என்ன செய்வீங்க?
அப்படின்னு கேட்டாரா? என் உயிரை கொடுத்து மன்னரோட உயிரை
காப்பாத்துவேன். அப்படின்னு சொன்னா நான் ரூபேசன்.
நான் கூட இருந்தா மன்னர் மேல சிங்கம் பாயறதுக்கான ஒரு
சூழ்நிலையே உண்டாகாது. அப்படின்னு சொன்னானா பராக்ரமன்

(06:34):
அவனோட பதில கேட்டு சபையில் இருந்தஎல்லாரும் பலமான கரகோஷம்
பண்ணாங்களாம். கொஞ்ச நேரத்துக்கு அப்பறம்
தர்மசீலர் ரெண்டு பேரையும் பாத்துஉங்ககிட்ட மூணு கேள்வி மட்டுமே
கேக்குறதா சொன்னேன். ஆனா இப்போ கடைசியா இன்னொரு
கேள்வியும் கேட்க போறேன். நமக்கு அருகில் இருக்கும்
ராஜ்யங்கள் மூன்று ல ஒரு ராஜ்ஜியத்துல தங்கம் நிறைஞ்சு

(06:56):
இருக்கு. இன்னொரு ராஜ்யத்துல தானியங்கள்
நிரம்பி இருக்கு. மூணாவது ராஜ்யத்துல ஆயுதங்கள்
நிறைஞ்சு இருக்கு. எந்த ராஜ்யத்தின் மேல படையெடுத்து
கைப்பற்றினா நமக்கு பயன் உண்டாகும் அப்படின்னு கேட்டாரா?
உடனே ரூபேசன் இந்த விஷயத்துல மன்னரோட தீர்மானமே இறுதியானது.
மந்திரியோடு ஆலோசிச்சு அவர் எந்த ராஜ்யத்தின் மேல படையெடுக்க

(07:20):
சொல்றாரோ அது மேல படம் எடுப்பேன்.அப்படின்னு சொன்னானா படையை
பலப்படுத்துவது சேனாதிபதியோட முதல் கடமையாகும்.
அதுக்கு ஆயுதங்கள் ரொம்பவும் அவசியம்.
ஆயுதங்கள் நமக்கு கிடைச்சாச்சுன்னா நம்மளால எளிதா
மற்ற ரெண்டு ராஜ்யத்தையும் கைப்பற்ற முடியும்.
தைரிய லட்சுமி எங்க இருக்கிறாளோ அங்க தான் மத்த ஏழு லட்சுமியும்

(07:42):
வசிப்பால் அப்படிங்கிறது உங்களுக்கு தான் தெரியுமே.
அதனால நான் மொதல்ல எந்த ராஜ்யத்துல ஆயுதங்கள் இருக்கோ அது
மேல தான் படையெடுப்பேன் அப்படின்னு ரொம்பவும் கம்பீரமா
பதிலளிச்சா நான் பராக்ரமன் பராக்கிரமனோட அறிவுப்பூர்வமான
இந்த பதிலை கேட்டு சபையில பயங்கரமான கரகோஷம் உண்டாச்சா?
மன்னர் கண்டிப்பா பராக்கிரமனை தான் தேர்ந்தெடுப்பார்.

(08:05):
அப்படின்னு சபையோருக்கெல்லாம் நல்லாவே தெரிஞ்சுச்சா.
அப்படி இருக்கும்போது அவர் ரூபேசனசேனாதிபதியாக தேர்ந்தெடுக்கிறதா
அறிவிச்சாரம் இது எல்லாருக்கும் பயங்கரமான அதிர்ச்சி அடிச்சா இந்த
இடத்துல கதை நிறுத்தின வேதாளம். விக்ரமன் கிட்ட.
மண்ணா பராக்கிரமன் ரூபேசன் ரெண்டுபேருமே போர்க்களைகள்ல சரி சமமா

(08:29):
காணப்பட்டார்கள். அதனால அவங்களோட மத்த தகுதியை
பரிசீலிக்க மந்திரி தர்மசீலர் முயற்சி பண்ணதுல தப்பு கிடையாது.
ஆனா அவர் கேட்ட கேள்விக்கெல்லாம் மன்னர்கிட்ட அறிவிப்பேன்.
அவர் கட்டளைப்படி நடப்பேன். அப்படின்னு பதில் சொன்ன ரூபேசனை
விட. பிரச்சனைகளோட மூல காரணத்தை
ஆராய்ந்து தானே செயல்படும் பராக்கிரமன் அளித்த

(08:52):
அறிவுப்பூர்வமான பதில்களிலிருந்துஅவனே சேனாதிபதி பதவிக்கு
தகுதியானவன் அப்படிங்கிறது தெரியுதுதான அவனோட பதில
சபையோர்கள் மட்டுமின்றி தர்மசீலரும் கூட பாராட்டினார்.
அப்படி இருந்தும். தர்மசீலர் கடைசில ரூபேசனை
தேர்ந்தெடுத்தது. அவரோட தவறான முடிவுதான காட்டுறது.
இதிலிருந்து தர்மசீலர் மதிநுட்பத்துக்கு முக்கியத்துவம்

(09:15):
கொடுக்காம ஒரு சாதாரண வீரன சேனாதிபதியா தேர்ந்தெடுத்தது.
அவரோட நடுல இனிமேல் இருந்து தவறிட்டார்.
அப்படிங்கிறது தான் காமிக்குது ரூபேசன் கிட்ட அப்படி என்ன குணம்
அல்லது திறமை இருக்கு அப்படின்னு நினைச்சு அவன தேர்ந்தெடுத்தார்.
என்னோட இந்த சந்தேகங்களுக்கு பதில் தெரிஞ்சும் நீ மௌனமா
இருந்தா உன் தல சுக்கு நோரா சிதறிடும் அப்படின்னு

(09:38):
சொல்லித்தான் வேதாளம். அதற்கு விக்ரமன் மதிநுட்பத்தை
மட்டுமே வச்சு ரெண்டு பேரையும் பரிசீலிச்சா பராத்கிரமன் நிச்சயமா
ரூபேசனை விட சிறந்தவந்தான். ஆனா தர்மசீலர் முன்னாடியே சொன்ன
மாதிரி. சேனாதிபதி பதவிக்குரிய குணங்கள்ல
முக்கியமான ஒன்னு பராக்ரமன் கிட்டகிடையாது.

(09:59):
ரூபேசன் கிட்ட தான் இருந்தது. ஒரு சேனாதிபதியோட கடமை தனது
படைக்கு தலைமை ஏற்று அவர்களை ஊக்குவிச்சு தனது யுத்த
தந்திரங்களால போர்ல வெற்றி பெறுவது மட்டும்தான்.
மத்தபடி எந்த பிரச்சனைக்கும் முடிவெடுக்கிறது.
அவனோட அதிகாரத்துல கிடையாது. எந்த ஒரு விஷயத்திலும் தீர்மானம்

(10:19):
செய்யறது மன்னருக்கே உரிதான உரிமை.
அதுல சேனாதிபதி தலையிடக்கூடாது. அரசாங்க விஷயங்கள்ல ஆலோசனை சொல்ற
உரிமை மந்திரிக்கு மட்டுமே உண்டு.அவரோட ஆலோசனைய கேட்கிறதும்,
அதன்படி நடக்கிறதும் நடக்காததும் மன்னரோட உரிமை எல்லா
விஷயங்களிலும் தான் நுழைஞ்சு தானேமுடிவெடுக்கும் சேனாதிபதி

(10:42):
ஆபத்தானவன், மன்னனோட அதிகாரத்த அவன் தன் கையில எடுத்துக்கிறது.
கொஞ்சம் கூட சரி கிடையாது. பராத்கிரமன் கொடுத்த பதில்களில்
இருந்து அவன் மேதாவி அப்படிங்கிறது தெளிவானாலும்
அத்தகைய மேதாவிகள் மன்னருக்கு முற்றிலும் கீழ்ப்படிந்து நடக்க
மாட்டார்கள். அப்படின்னு மந்திரி நம்பினார்.

(11:02):
அதனால தான் கீழ்ப்படிந்து நடக்கும் சுபாவம் கொண்ட ரூபேசன
சேனாதிபதியா பரிந்துரை செய்தார் மந்திரியோட கருத்து.
அவரோட தொலைநோக்கு பார்வைய காட்டுறது.
அதனால அவர் எடுத்த முடிவு சரியானது தான்.
அப்படின்னு சொன்னானா விக்ரமன், விக்ரமனோட சரியான பதிலாக அவன்
தன்னோட மௌனம் களையவே வேதாளம் தான்புகுந்திருந்த உடம்பிலிருந்து

(11:26):
மீண்டும் வெளியே வந்து முருங்க மரம் ஏறி உக்காந்து தான்.
அவ்ளோதான். புரிந்து கொள்ளாத மக்கள்.
தன் முயற்சியில் சற்றும் மனம் தளராத விக்ரமன் மரத்துல ஏறி அதுல
தொங்குன உடம்பு கீழ தள்ளினா. அதுக்கப்புறம் அவன் கீழ இறங்கி அத

(11:50):
தூக்கி இந்த மாயாணத்த நோக்கி போகும்போது அதுல இருந்த வேதாளம்
மண்ணா. யாரையாவது பழி தீக்குறதுக்காக
இந்த நடுராத்திரி மயானத்துல அழிஞ்சு திரிஞ்சு உன்ன நீயே
வருத்திக்கிறியா? உன்னோட நோக்கம்தான் என்ன?
உன்ன மாதிரி சிலர் உணர்ச்சிவசப்பட்டு ஏதாவது சபதம்

(12:10):
எடுத்துக்கிறாங்க. ஆனா சில வருஷங்கள் கழிச்சு
அவங்களோட ஆவேசம் தனிஞ்சு போயிடுது.
குணவர்மன் அப்படிங்கிற இளைஞன் தன்னோட சிந்தனைகளை புரிஞ்சு
கொள்ளாத கிராமத்து மக்களை வெறுத்து அவங்க கிட்டேந்து
விலகினவன் கடைசில. அவங்ககிட்டயே திரும்பி வந்து
சேர்ந்தா அவனோட கதை உனக்கு சொல்றேன்.

(12:31):
கேள் அப்படின்னு சொல்லிச்சான். அன்னாவரம் அப்படிங்குற கிராமம்
மலை சூழ்ந்த இயற்கை எழில் நிறைந்தகிராமம்.
அங்கிருந்த விவசாயிகள் பல நூதனமானபயிர்களை விவசாயம் செஞ்சுட்டு
வந்தாங்க. பலவிதமான கிழங்கு.
பழ மரங்கள், மூலிகைகள் அப்படின்னுஇதையெல்லாம் பயிர் செஞ்சு.

(12:52):
அதையே அவங்களோட முக்கியமான உணவாவும் கொண்டிருந்தாங்களாம்.
அந்த கிராமத்துல குணவர்மன் அப்படிங்கிற இளைஞன் வசிச்சுண்டு
வந்தா சின்ன வயசுல இருந்தே அவன் தீவிர சிந்தனையாளனா இருந்தானா?
எப்பயும் எத பத்தியாவது சிந்திச்சுண்டே இருப்பானா?
அதனால அவன கிராமத்து மக்கள் எல்லாம் சோம்பேறின்னு எலகாரம்

(13:14):
பண்ணுவாங்களாம். அவனோட வாழ்க்கையோட கண்ணோட்டமே வேற
விதமா இருந்துதான் கிராமத்து மக்களோட வாழ்க்கை முறை அவனுக்கு
பிடிக்கவே இல்லையா? கடவுள் கொடுத்த பகுத்தறிவு நல்லா
பயன்படுத்தணும். கத்துக்க வேண்டிய விஷயங்கள் இந்த
உலகத்துல எத்தனையோ இருக்கு. அப்படின்னு இந்த மாதிரி நிறைய
புது புது சிந்தனைகள் அவனுக்கு தோணுமா?

(13:37):
இந்த சிந்தனைகள் எல்லாம் கிராமத்து மக்களோட மூளையில
நுழையவே இல்லையா? கண்ணோட புது கருத்துகளை யாருமே
ஏத்துக்காததால சலிப்படைந்து போன குணவர்மன் ஒரு நாள் தன்னோட அப்பா
கிட்ட. அப்பா இங்க இருக்குற மக்கள்
எல்லாம் இயந்திரம் போல இயங்குறாங்க.
இங்க இருந்தா என் வாழ்க்கையே வீணாயிடும்.

(14:00):
தண்டகாரண்யா காட்டுல புஜங்கர் அப்படிங்குறவர் நடத்துற
குருகுலத்துல சேர்ந்து என்னோட கல்வி அறிவு அபிவிருத்தி செஞ்சு
கொள்ள விரும்புறேன். அதுக்கப்புறம் அங்கே இருந்து
திரும்பி வந்து எந்த கிராமத்து மக்கள் என்ன ஏழன செய்றாங்களோ
அவங்களையே எனக்கு மரியாதை செலுத்துமாறு செய்வேன்.
அப்படின்னு சொல்லிட்டு. தண்டகாரண்யத்தை நோக்கிப் போனானா?

(14:23):
புஜங்கரோட ஆசிரமத்து நெருங்கிட்டுஇருக்கும்போது ஒரு தேர் அவன்
பின்னாடி வந்துதான். அவன்கிட்ட வந்து தேரநிறுத்தின
தேரோட்டி தம்பி நீ எங்க போற அப்படின்னு கேக்க குணவர் மனம்
பதில் சொல்ல, அந்த தேரோட்டி நானும் அங்க தான் போறேன்.
நீயும் தேர்ல ஏறிக்கோ மன்னரோட தாய்க்கு உடல்நிலை சரியில்லாததால்

(14:47):
புஜங்கர கூட்டின் போறதுக்கு நான் வந்திருக்கேன்.
அப்படின்னு சொல்லிட்டு குணவர்மன தான் கூட கூட்டிட்டு போனானா?
குரு குளத்த அடஞ்சதும் குணவர்மன் புஜங்கரோட கால்ல விழுந்து வணங்கி
தன்னோட விருப்பத்த சொன்னானா? அதுக்கு அவர்.
மகனே. என்கிட்ட சீட நான் சேரணும்னா

(15:07):
அதுக்கு முன்னாடி ஜம்பு காரணியத்துல என்னோட பழைய மாணவர்
வினயர் ஒரு குருகுலம் நடத்திண்டு வரார்.
அங்கு போய் ரெண்டு வருஷங்கள் படிச்சதுக்கு அப்புறமா நீங்க வா
அப்படின்னு சொன்னாராம். குருவே உங்களுக்கு என்னோட
அறிவுத்திறமைல சந்தேகம் அப்படின்னு நினைக்கிற வேணும்னா.
நீங்க என்னோட அறிவு சோதிச்சு பாருங்க.

(15:29):
அப்படின்னு சொன்னானா மகனே இப்போ நான் அரண்மனைக்கு போக வேண்டி
இருக்கு திரும்பி வர்றதுக்கு எனக்கு ஒரு வாரம் ஆகும்.
அது வரைக்கும் இந்த ரெண்டு கிரந்தங்களையும் உன்கிட்ட தான அத
நீ கவனமா படி இதுல இருக்குற கருத்த நீ நல்லா புரிஞ்சுட்டா
மட்டும் நீ என்னோட சீட நாம தகுதியானவன் சொல்லிட்டு

(15:51):
அரண்மனைக்கு தேர்ல ஏறி புறப்பட்டாராம்.
உடனே அங்க இருந்த மத்த சீடர்கள் அவன்கிட்ட ரெண்டு வருஷமா
இதெல்லாம் படிச்சு புரிஞ்சுக்க நாங்க படாத பாடு பாடுறோம்.
அப்படி இருக்க உன்னால ஒரு வாரத்துல இதெல்லாம் புரிஞ்சுக்க
முடியுமா? அப்படின்னு சொல்லி அவன பயமுறுத்தி
நாங்கலாம். ஆனா குணவர் மனம் இதனா ஒரு சவாலா

(16:14):
ஏத்துக்கிறேன். அப்படின்னு சொல்லிட்டு அந்த
கிரந்தங்கள் ஏற்றப்பட்டிருந்த ஓலைச்சுவடிகள் ஆழ்ந்து படிக்க
ஆரம்பிச்சானா? நாளே நாள்ல அதோட சாரத்த குணவர்மன்
நல்லா கிரகிச்சு கொண்டானா? மத்த சீடர்களுக்கு கூப்டு அவன்
புரிஞ்சுண்ட விஷயங்கள அவங்களுக்குவிளக்கி நானா?
ஆனா அந்த மத்த சீடர்கள்லாம் அவனோடஅறிவு திறமைய தாழ்வாவே

(16:38):
மதிப்பிட்டு எள்ளி நகையாடினாங்கலாம்.
கோபமான குணவர்மன் உங்களுக்கும். உங்களுக்கும் என் கிராமத்து
மக்களுக்கும் அதிக வேறுபாடு கிடையாது.
அவங்களாம் படிக்காத முட்டாள்கள் நீங்க படிச்ச முட்டாள்கள்
அப்படின்னு சொல்லி கோவப்பட்டானா? அரண்மனை லிருந்து திரும்பி வந்த
புஜங்கர் குணவர்மன பாத்து கிரந்தங்களோட விளக்கத்த

(17:01):
கேட்டாராம் குணவர்மன் சொன்ன விளக்கங்கள கேட்டு அவர் வியந்து
போனாராம். மகனே உன்ன போல ஒரு புத்திசாலி
எனக்கு சீட நான் கெடைக்க நான் ரொம்பவும் குடுத்து
வச்சிருக்கணும். அப்படின்னு மனமார பாராட்டினாரா?
அதுக்கு அப்புறமா அவர் அரண்மனைல நடந்த விஷயங்கள விவரிக்க
ஆரம்பிச்சாராம். மன்னரோட தாயின் நோயை குணமாக்க

(17:26):
எந்த வைத்தியராலையும் முடியல. அப்போ அவரோட சபையில் இருந்த
கவிஞர்கள் ஒருத்தர் தான் பத்திரப்படுத்தி வச்சிருந்த யாரோ
ஒருத்தர் எழுதின காவியத்த மன்னர்கிட்ட படிச்சு காட்டினார்.
காவியத்துல வரும் நாயகிக்கு ஏற்பட்ட அந்த விசித்திர நோயோட
வர்ணனைகள் மன்னரோட தாய்க்கு ஏற்பட்டிருந்த நோய அப்படியே

(17:47):
ஒத்திருந்த தான். அத படிச்சு காட்டின கவிஞர் மண்ணா
இதுல மூலிகைகள் பத்தின விவரங்களும் சிகிச்சை முறைகள்
பத்தின விவரங்களும் எழுதி இருக்கு.
ஆனா அந்த கவிதைகளோட பொருள் எனக்குபுரியல.
இத படிச்சு யாராவது அதோட பொருள புரிஞ்சுண்டா?
அதே மருந்துகளையும் சிகிச்சைகளையும் அளித்து.

(18:10):
உங்களோட தாய குணமாக்கிடலாம் அப்படின்னு சொன்னாராம்.
அதுக்காக தான் புஜங்கர் அரண்மனைக்கு
அழைக்கப்பட்டிருந்தாராம். ஆனா அவராலயும் அதோட பொருள
உணர்ந்துகொள்ள முடியல மகனே எனக்கேபுரியாத அந்த கவிதைகளோட பொருள்
ஒருவேள உனக்கு புரியக்கூடும். அதனால நீ இத படிச்சுப் பார்

(18:31):
அப்டின்னு சொன்னாராம். அத வாங்கி படிச்சதும்
குணவர்மனுக்கு அதோட பொருள் புரிஞ்சிருச்சா குருவே.
இதுல மூலிகைகள் ஓட, பெயர், ரெண்டுபொருள் பட சொல்லப்பட்டிருக்கு.
அவற்றை முறையை எடுத்து கசாயம் செஞ்சு அதுல
சொல்லப்பட்டிருக்கிறது. படி மன்னரோட தாய் பாடல் பாடலை
ரசிச்சபடி அந்த கசாயத்த அருந்தினாஅவங்க குணமாயிடுவாங்க.

(18:55):
அப்படின்னு சொன்னானா? ஆனா இந்த மூலிகைகள் எல்லாம்
எப்படி தேடுறது? நான் இத பத்தி கேள்விப்பட்டது
இல்லையே. அப்படின்னு சொன்னாராம் புஜங்கர்.
அது பத்தி கவலை கிடையாது. இந்த மூலிகைகள் எல்லாம் என்னோட
கிராமத்துல பயிரிடப்படுகின்றன. அப்படின்னு குணவர்மன் சொல்ல
புஜங்கர் மகிழ்ச்சியோட அவன் அரண்மனைக்கு கூட்டிட்டு போனாராம்

(19:17):
குணவர்மன சந்திச்ச மன்னர். ரொம்பவும் மகிழ்ச்சி அடைந்தாராம்.
உடனே மன்னரோட ஆட்கள் குணவர்மன் கூட சென்று அன்னாவரத்திலிருந்து
மூலிகைகள் கொண்டு வந்தாங்களாம். வைத்தியர்களும் அந்த மூலிகைகள்
வச்சு மருந்து தயாரிச்ச உடனே மன்னரோட தாய் குணமானாங்களாம்.
ரொம்பவும் மகிழ்ச்சியான மன்னர். குணவர்மனுக்கு பொன்னும் பொருளும்

(19:41):
வெகுமதி அளிச்சாராம். அதுக்கப்புறம் அவன் புஜங்கரோட
குருகளத்துல சேர்ந்து ரெண்டு வருஷங்களா பல வேதாந்தங்களையும்,
சாஸ்திரங்களையும் படிச்சு தெரிஞ்சுண்டானா?
கடைசில அவன ஒரு முழு மேதாவி ஆக்கின பெருமையோட புஜங்கர் அவன்
ஆசீர்வதிச்சு அனுப்பினாரா? பேரறிஞர் ஆன குணவர்மன் தன்னோட

(20:02):
ஊருக்கு சென்றடைந்தானா? அவன் கத்துண்ட எல்லா
விஷயங்களையும் தன்னோட கிராமத்து மக்களுக்கு எடுத்து சொன்ன போது
கிராமத்தினர் யாருக்கும் ஆர்வமே ஏற்படலையா?
ஆனா குணவர்மன் மனமுடையவில்லை. அவனே ஒரு குருக்குளம் ஆரம்பிச்சு
கிராமத்து குழந்தைகளுக்கு அவன் கத்துண்டதையெல்லாம் சொல்லிக்
கொடுக்க ஆரம்பிச்சா நான். இந்த இடத்துல கதைய நிறுத்தின

(20:25):
வேதாளம் மண்ணா கிராமத்தினர தன்னோடபுதிய சிந்தனைகளால இருக்க முடியல.
அப்படிங்குற காரணத்தினால மனம் சளிச்சு கிராமத்த விட்டு
வெளியேறுனவன் திருப்பியும் அதே கிராமத்து நோக்கி ஏன் வரணும்?
தன்னோட அறிவை கொண்டு வாழ்க்கையில முன்னேற்றம் அடைய நினைக்காம
திருப்பியும் தன்னோட சொந்த ஊருக்கே போனது ஏன்?

(20:48):
சரி அது போகட்டும் எந்த நோக்கத்தோட அவன் தன் கிராமத்துல
குருகுலத்தை தொடங்கினா என்னோட இந்த கேள்விகளுக்கு பதில்
தெரிஞ்சும் நீ மௌனமா இருந்தா உன் தலை வெடிச்சு சுக்குனூர் ஆகும்
அப்படின்னு சொல்லிச்சா. அதுக்கு விக்ரமன்.
குணவர்மன் ஒரு லட்சியவாதி. தன்னோட சிந்தனைகளை தனது சொந்த
கிராமத்து மக்கள் கிட்டயே பகிர்ந்துக்கிறது.

(21:11):
அவனோட லட்சியமா இருந்தது. ஆனா எல்லாரும் அவன கிண்டல்
செஞ்சும்போது அவனுக்கு தன் மேதாவித்தனத்து மேலேயே சந்தேகம்
வந்துருச்சு. ஆனா மகா அறிவாளியான புஜங்கரே அவன
மனதார பாராட்டுன போதும். மன்னரின் தாயோட நோய தன்னோட அபார
சிந்திக்கும் திறமையால தீர்த்து வச்ச போதும் அவனுக்கு தன்னாம்

(21:32):
பத்தின தன்னம்பிக்கை பரிபூரணமாயிடுச்சு.
வயதில் பெரியவங்ககிட்ட தன்னோட புதிய சிந்தனைகள் பரப்ப
முடியாதுன்னு தோணினதால குழந்தைகள்கிட்ட அத கற்பிக்க முயற்சி பண்ணா.
பெரியவங்க புரிஞ்சுக்க முடியாத பலவிஷயங்கள குழந்தைகள்
புரிஞ்சுப்பாங்க. அப்படிங்குற நம்பிக்கையால
குருகுலத்த தொடங்கினான். அப்படின்னு சொன்னானா விக்ரமனோட

(21:53):
சரியான பதிலாக அவனோட மௌனம் களையவேவேதாளம்.
அது புகுந்திருந்த உடம்போட பறந்துபோய் திருப்பியும் முருங்கை
மரத்துல ஏறி உக்காந்து தான். அவ்ளோதான்.
கடல் கன்னி ஹிஷிகா. தன் முயற்சியில் சற்றும் தளராத

(22:16):
விக்ரமன் மீண்டும் மரத்துல ஏறி அதுல தூங்கின.
உடம்பு கீழ தள்ளினா. பின்னர் அதை சுமந்துண்டு மயானத்தை
நோக்கி போகும்போது அதுக்குள்ள இருந்த வேதாளம் விக்ரமன பாத்து.
மண்ணா? நீ அனுபவிக்க வேண்டிய ராஜபோகத்தை
தொடர்ந்து விட்டு. நிகழ் காலத்தை மட்டுமின்றி உன்

(22:38):
எதிர்காலத்தையும் நீ வீணாக்கிக் கொண்டிருக்கிறாய்.
உன்னை போல பூஷணன் என்னும் மன்னன் தனக்கு கிடைக்கவிருந்த
ஐஸ்வர்யங்களை தனது மதியினத்தால் கை நழுவ விட்டான்.
அவன் கதையை கேள். அப்படின்னு சொல்லி அந்த கதைய
சொல்ல ஆரம்பிச்சு தான். வராககிரி கூர்மகிரி அப்படிங்கிறது

(23:01):
ரெண்டும் அடுத்தடுத்த ராஜ்யங்கள்.வராககிரியை ஆண்டுவந்த பூஷணன் நல்ல
குணமுடையவன். ஆனால் கூர்மகிரி மன்னன் மணிதரனும்
அதற்கு நேர்மாறானவன். நிர்வாகத்தை மந்திரியிடம்
ஒப்படைத்துவிட்டு ராஜபோகத்தை அனுபவிக்கிறதுலேயே காலத்தை
கழிச்சா? அதனால அவனோட படை பலம் குறைந்தது.

(23:24):
ஆனால் வராககிரி மன்னனும் இந்த கூர்மகிரி மன்னனும் நண்பர்களாக
திகழ்ந்தனர். கூர்மகிரி ராஜ்யத்துக்கு உட்பட்ட
கடற்கரைல அமைந்திருந்த ஊர் ரத்தினகிரி.
அந்த ஊர்ல சாமந்தன் அப்படிங்குற ஒரு இளம் வாலிபன் வசித்து
வந்தான். அவனோட தந்தையான மணிகண்டன்
மிகப்பெரிய வியாபாரி. அவர் திடீர்னு ஒரு நாள் காசிக்கு

(23:48):
போக அதுவரை தந்தையோட வியாபாரத்துலகவனமே செலுத்தாத சாமந்தன்
வியாபாரத்தை தொடர்ந்து செய்ய முடியாம திக்குமுக்காடி போனானா?
இதனால பலத்த நஷ்டம் ஏற்பட்டுதான்.கடன்காரர்கள் பணத்தை திருப்பிக்
கொடுக்குமாறு கேட்டு பயங்கரமாக தொந்தரவு செய்ய சாமந்தன்

(24:08):
பயங்கரமான கவலை ல ஆழ்ந்தானா? ஒரு நாள் இரவு தூங்க புடிக்காம
கடற்கரை இல்ல நடந்துட்டு இருந்தானா?
அப்ப திடீரென்று ஒரு அற்புத காட்சி தென்பட்டது.
கடலில் இருந்து ஒரு அழகான இளம்பெண் எழுந்து வந்தாளாம்.
அவள் சாமந்தனை பார்த்து நான் ஒரு கடல் கன்னி என் பெயர் ஹிஷிகா.

(24:32):
நான் இந்த கடலுக்குள் இருக்கும் பாதாள லோகத்தில் வசிப்பவள்.
எங்கள் உலகத்தில் வாழ்ந்து வரும் ஜெலேந்திரன் என்ற வாலிபனை நான்
கல்யாணம் பண்ணிக்க இருந்தேன். நாங்க ரெண்டு பேரும் ஏற்கனவே
நிச்சயிக்கப்பட்டவர்கள். எங்கள் திருமணத்துக்கு முன்பாக
பூலோகத்தில் இருக்கும் நகரங்களையெல்லாம் ஒரு தடவை சுத்தி

(24:53):
பார்த்துட்டு வரேன்னு சொல்லி மூணுமாசத்துக்கு முன்னாடி ஜெலேந்திரன்
இங்கே வந்தான். ஆனா இன்னும் அவன் திரும்பி வரல.
எனக்கும் பூலோகத்தை சுத்தி பாக்கணும் நான் ஆசையா இருக்கு.
நீ எனக்கு உதவி செய்வியா? அப்படின்னு கேட்டாளா?
ரிஷிகா. தற்சமயம் நான் ஒரு பெரிய சிக்கல்ல
மூழ்கி இருக்கேன். எனக்கு வியாபாரத்தில் ஏற்பட்டு

(25:15):
இருக்க நஷ்டத்தை ஈடு செய்ய நிறைய பணம் தேவை.
அதற்கு உன்னால் உதவி செய்ய முடியும் என்றால் நானும் நீ
கேட்பதை செய்வேன். அப்படின்னு சொன்னானா?
உடனே ஹிஷிகா கடலுக்குள் மூழ்கி சென்று விலையுயர்ந்த முத்துக்களை
அள்ளிக் கொண்டு வந்தால். அவற்றை பெற்றுக்கொண்ட சாமந்தன்
அவளை தன் வீட்டுக்கு அழைச்சுண்டு போனானா?

(25:36):
அவள் தங்குவதற்கான சகல வசதிகளையும் ஏற்பாடு செய்து
கொடுத்தானாம். முத்துகளை விற்று அதில் வந்த
பணத்தை கொண்டு நஷ்டத்தை சரி செய்து மீண்டும் வியாபாரத்தை
தொடங்கினானா? தன் வீட்டு பெண்களோடு ஹிஷிகாவை
தினமும் நகரில் நடைபெறும் இசை நடனநிகழ்ச்சிக்கு அனுப்பி அவங்கள அத

(25:56):
பாத்துட்டு வரும்படி செஞ்சானா இசிகா அதை பார்த்து மிகவும்
ரசித்தாலம். ஒரு நாள் ஹிசிகா சாமந்தன் வீட்டு
பெண்களோடு ஒரு நாட்டிய நிகழ்ச்சிக்கு போயிருந்த போது.
அதே நிகழ்ச்சிக்கு கூர்மகிரி மன்னன் மணி தருணம் வந்திருந்தான்.
அழகே உருவான ஹிசிகாவை பார்த்ததும்அந்த மன்னன் தன்னோட படை வீரர்களை

(26:18):
அனுப்பி அவளை பலவந்தமாக அரண்மனை கீழ்த்துண்டு போக செஞ்சானா?
சாமந்தன் வீட்டு பெண்கள் ஓடி வந்து இந்த விஷயத்த சாமந்தன்கிட்ட
சொன்னாங்களா? என்ன செய்வது என்று தெரியாம
தகிச்சு போனா நான் சாமந்தன் திகித்து போனவன்.
அப்பறம் சும்மாவே இருந்துட்டானா? அரண்மனை க்கு இழுத்து வரப்பட்ட

(26:38):
ஹிஷிகாவிடம் பெண்ணே நீ யார் என்றுஎனக்கு தெரியாது.
ஆனால் நீ என்னை திருமணம் செய்து கொள்.
உன்னை மகாராணி ஆக்குகிறேன் அப்படின்னு சொன்னானா மணிதரன் ராஜா
நான் ஒரு கடற்கன்னி நான் எப்படி பூலோகத்து மனுஷனை திருமணம் செய்து
கொள்ள முடியும் தவிர. நான் ஏற்கனவே இன்னொருருக்கு
நிச்சயிக்கப்பட்டவள். அதனால் நான் ஜெலேந்திரனை தான்

(27:02):
திருமணம் செய்து கொள்ள இருக்கிறேன்.
அதனால் என்னை விட்டுவிடுங்கள். அப்படின்னு கேட்டாளாம்.
ஆனால் இதை கண்டுகொள்ளாத அந்த மன்னன் ஹிஷிகாவோட மனது மாறும்
வரைக்கும் அவளை அந்த புறத்துல சிறை வைக்க உத்தரவிட்டானாம்.
இதெல்லாம் நடந்து இருக்கும் போது பூலோகத்தை சுத்தி பார்த்து
முடிச்ச ஜலேந்திரன் திருப்பியும் கடலுக்கு போனானா?

(27:23):
அங்க ஹிஷிகா வ காணாம தேடி அலைஞ்சுஅவள் பூலோகத்தில் இருப்பதாக
கேள்விப்பட்டு ரத்னகிரியில் அவளை தேடி அலைஞ்சானா?
இறுதியில் சாமந்தன் மூலம் அவள் மன்னனோட அந்த புறத்தில்
சிறைப்பட்டிருப்பதை தெரிந்து கொண்டு அவன் மனிதரனை சந்தித்தானா?
மன்னனிடம் ஹிஸிகாவை விடுதலை செய்யுமாறு கெஞ்சினானா?

(27:46):
அவனுக்கு பதில் அளிக்க விரும்பாத மனிதரன் தன் மந்திரியை
நோக்கினானா? மன்னனோட மனதை புரிந்து கொண்ட
மந்திரி ஜெலேந்திரனை பார்த்து ஜெலேந்திரா எங்கள் ராஜ்யத்தில்
நிலத்தில் வசிப்பவர்கள். ஆனாலும் கடலில் வசிப்பவர்கள்
ஆனாலும் அனைவரும் எங்கள் ராஜாவின்ஆதிக்கத்திற்கு
கட்டுப்பட்டவர்கள். அதனால் ஹிஷிகாவை விடுதலை செய்ய

(28:09):
முடியாது. அப்படின்னு சொன்னானா மந்திரியாரே
உங்கள் மன்னரின் ஆதிக்கத்துக்கு உட்பட்டவர்கள் நாங்கள் என்பதை
நான் ஒத்துக்கொள்கிறேன். ஆனால் மன்னரே ஆனாலும் தனிப்பட்ட
நபரின் அந்தரங்கத்தில் குறுக்கிட அவர்களுக்கு அதிகாரம் இல்லை.
அப்படின்னு சொன்னானா? வார்த்தை அளந்து பேசு.
உங்கள் அந்தரங்கத்தில் மன்னர் குறுக்கிடவில்லை.

(28:31):
ஹிஷிகா ஒரு குற்றவாளி. கடலில் வசிப்பவர்கள் பூலோகத்தில்
மன்னரின் அனுமதியின்றி நுழையக்கூடாது.
அதனால்தான் அவளை சிறை வைத்திருக்கிறோம்.
அதே குற்றத்துக்காக உன்னையும் சிறைபிடிக்க முடியும்.
நீங்கள் தண்டனையிலிருந்து தப்ப வேண்டுமெனில் ஒரு நிபந்தனை
உள்ளது. அப்படின்னு சொன்னான் மன்னன்.

(28:51):
அந்த நிபந்தனை என்னவென்று சொல்லுங்கள்.
அப்படின்னு ஜலேந்திரன் கேட்க. கடலில் முத்துகளும் ரத்தினங்களும்
மிகுதியாக இருப்பது எங்களுக்கு தெரியும்.
நீ எங்களுக்கு 1,00,000 ரத்தின கற்களை கொண்டு வா.
அப்படி கொண்டு வந்தேன். ஆனால் ஹிஷிகா விடுதலை
செய்யப்படுவாள் அப்படின்னு சொன்னானா மந்திரி.

(29:11):
அதற்கு அவன் ஒப்புக்கொண்டு கடலுக்குள் போய் 1,00,000
ரத்தினக்கற்களை சேகரிச்சுண்டு வந்து மனிதரின் கிட்ட கொடுத்தானா?
ஆனா அப்படியும் ராஜா ஹிஷிகாவை விடுதலை செய்யவில்லையாம்.
மாறாக ரத்ன கற்களை விற்ற பணத்தை வச்சு தன்னுடைய படையை பெருக்கவும்
ஏராளமான ஆயுதங்கள் வாங்கவும் செலவழிச்சானா?

(29:33):
இந்த செய்தி ஒற்றல்கள் மூலமாக வராக கிரி மன்னன் பூஷனுக்கு
எட்டியதான். உடனே பூஷணன் ஒரு பெரும் படையை
திரட்டிக்கொண்டு கூர்மகிரி மேல படம் எடுத்தானா?
கடுமையாக மூண்ட போர் ல மனிதரன் கொல்லப்பட்டானா?
கூர்மகிரியும் பூஷணன் வசம் வந்து தான் சிறைப்பட்டிருந்த ஹிஷிகாவை

(29:53):
விடுதலை செய்த மன்னன் பூஷணன் ஜெலேந்திரனை கூப்டு அன்பினால்
இணைந்த உங்களை நான் சேர்த்து வைக்க விரும்புகிறேன்.
நீங்கள் உங்கள் உலகத்திற்கு செல்லுங்கள் அப்படின்னு சொன்னானா?
மன்னன் பூஷணன் தங்களை என்ன செய்வானோ அப்படின்னு கலங்கின.
ஹிஸிகாவுக்கும் ஜெலேந்திரனுக்கும்அவனோட பெருந்தன்மை ரொம்பவும்

(30:14):
மகிழ்ச்சி அளித்ததாம். மகாராஜா உங்கள் உதவிக்காக
உங்களுக்கு எங்களால் முடிந்த அளவுமுத்துக்களும், ரத்தினங்களும் தர
விரும்புகிறோம். அப்படின்னு சொன்னாங்களாம்.
அதை கேட்டு புன்னகைத்த மன்னன் பூஷணன் நீங்கள் எனக்கு எதுவும் தர
வேண்டாம். உங்கள் இருப்பிடத்திற்கு சென்று
வளமுடன் வாழுங்கள் அப்படின்னு கூறி விடை கொடுத்தானா?

(30:36):
அவ்ளோதான். நல்ல பகைவன்.
தன் முயற்சியில் சற்றும் மனம் தளராத விக்ரமன் திருப்பியும்
மரத்துல ஏறி அதுல தொங்குன உடம்ப கீழ தள்ளினா.
அதுக்கப்புறம் கீழ இறங்கி அந்த உடம்ப சுமந்துண்டு மாயாணத்து

(30:59):
நோக்கி போகும் போது அதுக்குள்ள இருந்த வேதாளம் விக்ரமன பார்த்து
மண்ணா நமக்கு உதவி செஞ்சவங்களுக்கு நட்பு
பாராட்டுறதும் அவங்களுக்கு நன்றி கடன் தீர்க்க நம்ம பிரோபகாரம்
செய்யறதும் இயற்கை. இத தான் நம்மளோட சாஸ்திரங்களும்
வலியுறுத்துறது. ஆனா நான் இப்போ உனக்கு சொல்லப்போற

(31:21):
கதைல தனக்கு பேருதவி செஞ்சவரோட பகைமை பாராட்டுமாறு ஒருத்தன்
கருத்து தெரிவிக்க அத நல்லா கற்றுநந்த அவனோட குருவும்
ஆமோதிக்கிறார். அந்த கதையை கொஞ்சம் கேள்
அப்படின்னு வேதாளம் கதை சொல்ல ஆரம்பிச்சு தான்.
விஜயபுரி அப்படிங்கிற ஊர்ல சரண்யன் அப்படிங்கிற ஒரு பெரிய

(31:44):
தனவந்தர் நல்ல குணங்கள் நிரம்பியவராகவும் தான தர்மங்கள்
செய்பவராகவும் இருந்தாராம். பல வருஷம் கழிச்சு அவருக்கு ஒரு
பையன் பொறந்தானா? அவனுக்கு நம்பி அப்படின்னு பெயர்
சூட்டி அவன நல்லா வளத்து வந்தாராம்.
நம்பி மத்த சிறுவர்களை போல இல்லாமகொஞ்சம் மந்த புத்தி உடையவனா

(32:06):
இருந்தானா? சாதாரண விஷயங்கள கூட அவனால சரியா
புரிஞ்சுக்க முடியலையா? அவன ஒரு நல்ல பள்ளிக்கூடத்துல
சேர்த்தா நிலைமை சரியாகும். அப்படின்னு சரண்ய நம்பினாராம்.
ஆனா பள்ளில சேர்ந்ததுக்கு அப்புறமாவும் அவன் மந்தமாகவே
இருந்தானா? ஜோதிடத்துல நம்பிக்கை இல்லாத

(32:27):
போதும் அவன ஒரு பிரபல ஜோதிடர் கிட்ட கூட்டிட்டு போனாராம்
சரண்யன். அவர்கிட்ட ஜோதிடர் உங்க பையனுக்கு
கிரகங்கள் சரி ஆமையில இடமாற்றம் செஞ்சா சகஜ நிலைக்கு அவன்
திரும்பலாம். வித்யா வனம் அப்படிங்கிற ஊர்ல
ஞானேந்திரர் அப்படிங்கிற குரு கிட்ட கூட்டிட்டு போங்க.

(32:48):
அவரோட குருகுலத்துல படிச்சா அவன் சரியாயிடுவான்.
அப்படின்னு சொன்னாராம். அதே மாதிரி சரண்யன் நம்பிய
ஞானேந்திரரோட குருகுலத்துக்கு கூட்டிட்டு போனாராம்.
நம்பிய சில கேள்விகள் கேட்டு சோதிச்ச ஞானேந்திரர் உங்க மகன்
எந்த விஷயத்தையும் தனக்கே உரிய முறையில புரிஞ்சுக்கிறான்.

(33:09):
மத்த பசங்கள போல அவன சிந்திக்க வைக்க என்னால முடிஞ்ச அளவுக்கு
முயற்சிக்கிறேன். நீங்களும் அடிக்கடி வந்து
என்கிட்ட அவன பத்தி விசாரிச்சுட்டு போங்க.
அப்படின்னு சொன்னாராம். ஞானேந்திரர் ஓட குருகுளத்துல
சேர்ந்ததுக்கு அப்புறமாவும் நம்பியோட நிலைமைல பெருசா
முன்னேற்றம் மீதும் ஏற்படலையா? ஒரு நாள் அந்த குருகுலத்துல

(33:32):
சுகுமாரன் அப்படிங்கிற ஒரு விவசாயியோட பையன் மாணவனா சேர்ந்து
ஆனா. பிரம்பவம் புத்திசாலியான
சுகுமாரன் சேர்ந்த சில மாதங்களிலேயே தலை சிறந்த மாணவன்
அப்படிங்கிற பேர் வாங்கிட்டானா? சுகுமாரனுக்கு நண்பனாக ஆசைப்பட்ட
நம்பி அவன்கிட்ட நட்புரிமை பாராட்ட முயற்சி பண்ணும்போது

(33:53):
சுகுமாரன் அவன ஏத்துக்கலையா? சுகுமாரன் குருகுலத்துல சேர்ந்து
ஒரு வருஷம் ஆனதுக்கு அப்பறம் அவனோட தந்தை கடன் தொல்லையால்
சிக்கி தவிக்கிறதா? அவனுக்கு தகவல் வந்து தான்.
அதனால அவன் படிப்ப பாதியில நிறுத்திடலாம்.
அப்படின்னு முயற்சி பண்ணானா? தற்செயலா நம்பிய பாக்க வந்த
சரண்யன்கிட்ட நம்பி சுகுமாரன பத்தி சொன்னானா?

(34:18):
சரண்யன் சுகுமார் அ சந்திச்சு தம்பி உன்ன போல புத்திசாலி
மாணவர்களோட கல்வி தடைபடக்கூடாது. உன்னோட கல்விக்கான செலவுகள நான்
ஏத்துக்கிறேன். நீ தொடர்ந்து படி அப்படின்னு
சொன்னாராம். நம்பியோட நல்ல உள்ளத்தையும் அவன்
தந்தையோட பெருந்தன்மையும் கண்டு சுகுமாரன் வெட்கி தலை குனிஞ்சானா?

(34:41):
உடனே அவன் நம்பிக்கிட்ட. கானாகவே வழிய சென்று நட்புக்கரம்
நீட்டினானா? நம்பி நீயும் புத்திசாலி தான்
தவிர நீ ரொம்பவும் நல்லவன். அதனால உன்ன நண்பனா அடைய நான்
விரும்புறேன். இனி குரு நடத்தும் பாடங்கள நீ
எப்படி புரிஞ்சுக்கிற அப்படின்னு நான் தெரிஞ்சுக்க முயற்சி

(35:02):
பண்றேன். அப்படின்னு சொன்னானா முதன் முதலாக
தன்னை புத்திசாலி அப்படின்னு சுகுமாறன் சொன்னதை கேட்டு ரொம்ப
மகிழ்ச்சி அடைஞ்சானா? நம்பி அன்று முதல் வகுப்புல நடந்த
பாடங்கள தான் புரிஞ்சு கொண்டத பத்தி சுகுமாரன் கிட்ட விளக்க
தொடங்கினானா? அத கவனமா கேட்டதுக்கு அப்பறம்
அவன் தனக்கு தெரிஞ்சத விளக்குவானா?

(35:25):
ஒரு வருஷ காலத்திலேயே நம்பி மத்த மாணவர்களை போல சிந்திக்க
தொடங்கினானா? நம்பியோட மாற்றத்துக்கு காரணமான
சுகுமாரன தன்கிட்ட அழைத்து ஞானேந்திரர் நம்பிய எப்படி மாத்த
முடிஞ்சது அப்படின்னு ஆச்சரியத்தோட கேட்டாராம்.
குருவே மந்த புத்தி காரண பாத்து கேலி செய்யறதுக்கு சாமர்த்தியம்

(35:46):
தேவையில்ல. அவன சராசரிக்கும் மேலான
அறிவாளியாக மாற்ற தான் அறிவு சாமர்த்தியம், திறமை முயற்சி
இதெல்லாம் தேவை. இது எல்லாம் பிரயோகிச்சு தான்.
அவன என்னைப் போல அறிவால் ஏமாற்றினேன்.
அப்படின்னு சொன்னானா? ஆஹா.
உத்தமமான பிள்ளை நீ சுயநலமே உருவான இந்த உலகத்துல.

(36:08):
நம்பி மேல விசேஷமான அக்கறை எடுத்து அவன மாத்தி இருக்க அவனோட
மாற்றத்திற்கு காரணம் நீ தான் அப்படின்னு அவனோட அப்பாக்கு
தெரிஞ்சா அவர் இன்னும் உனக்கு அதிக உதவிகள் செய்வார்.
அப்படின்னு சொன்னாராம் குரு வேண்டாம் குருவே அப்படின்னு சொன்ன
சுகுமாரன் அவர் ஏற்கனவே எனக்கு நிறைய உதவிகள் செஞ்சிருக்கிறார்.

(36:29):
அதுவே போதும். இது அதுக்கான கை மாறா
இருக்கட்டும் அப்படின்னு சொன்னானா?
சுகுமாரனோட கல்விக்கான செலவை ஏத்துன்றது மட்டுமில்லாம நம்பியோட
தந்தையான சரண்யன் சுகுமாரனோட தந்தை வசிக்கும் கிராமத்துக்கு
அடிக்கடி சென்று அவர் பட்ட கடனை எல்லாம் தானே தீர்த்து வச்சாராம்.

(36:50):
பொருளாதார பிரச்சனை ல இருந்து அவரமீட்கவும் செஞ்சாராம்.
அப்போ தான் அவருக்கு சுகுமாரனோட தந்தை ஏன் கடனாளி ஆனார்?
அப்படிங்கிற விபரம் தெரிய வந்துதான் அவரோட பங்காளிகள்
பேராசையை உருவானவர்களாம். புத்திசாலியான சுகுமாரன் தன்
தந்தையை விட்டு குருகுலம் வந்து சேர்ந்ததுக்கு அப்பறம்.

(37:10):
அவரு பசுப்பு வார்த்தைகள் சொல்லி மயக்கி அவரை ஏமாத்தி பணம் பறிச்சு
கடனாளி ஆக்கிட்டாங்களாம். இந்த விஷயத்த அவர் அப்பப்போ
சுகுமாரன் கிட்டயும் தெரிவிச்சுட்டு வந்தாராம்.
இதனால தன்னோட சொந்தக்காரர்களை நினைச்சு மனம் கொதிச்சானா?
சுகுமாரன் கல்வியே நிறுத்திடலாம்.அப்படின்னு நினைச்சும்போது

(37:31):
நம்பியின் தந்தை குறுக்கிட்டு கல்வியை தொடர செய்தாராம்.
ஐந்தாண்டுகளுக்கு அப்பறம், சுகுமாரன் நம்பி ஆகியோரது குருகுல
கல்வி நிறைவு பெற்றதும் குரு கிட்ட ஆசீர்வாதம் வாங்கிக்க
வந்தாங்களாம். அப்படி சுகுமாரன் வந்த போது குரு
சுகுமாரன பார்த்து சுகுமார சுபாவத்திலேயே நீ ரொம்பவும் நல்ல

(37:53):
பிள்ளை நீ இன்று போல் என்றும் நல்லவனாகவே இருப்பாய்.
அப்படின்னு சொன்னாராம். அதற்கு சுகுமாரன் குருவே என்
தந்தையோட பங்காளிகள் என் தந்தைய படுகொள்ள தள்ளிட்டது நினைச்சு
என்னோட மனசு கொதிக்குது. அதனால அவங்கள பழிக்குப்பழி
வாங்குனதுக்கு அப்புறமா நான் நல்லவனாக முயற்சிப்பேன்.

(38:14):
அப்படின்னு சொன்னானா அதற்கு ஞானேந்திரர் மகனே பழிக்குப்பழி
வஞ்சத்துக்கு வஞ்சம் அப்படின்னு பிடிவாதமா இருந்தா அதுக்கு ஒரு
முடிவே இருக்காது. நான் சொல்றத கேள் அவங்கள
மன்னிச்சுடு அப்போதான் வாழ்க்கைய நிம்மதியா கழிக்க முடியும்
அப்படின்னு சொன்னாரா அப்போ அங்க சரண் என் வந்தாராம் நடந்த

(38:36):
விஷயங்கள கேட்டதுக்கு அப்பறம் அவர் சுகுமாரன் கிட்ட தம்பி உன்ன
என்னோட மகனாக தான் இதுவரை நான் நினைச்சிருக்கேன்.
இனி யும் அப்படியே நீ செய்ய விரும்பும் செயல்கள் எதுவானாலும்
அதுக்கு நான் துணை புரிவேன். அப்படின்னு சொன்னாரா?
அப்போ ஞானேந்திரர் குறுக்கிட்டு ஐயா.
நீங்க சுகுமாரனுக்கு எப்படி உதவி செய்ய வேண்டும் அப்படிங்கிறத அவன்

(38:59):
கிட்ட கேக்காதீங்க. மகாமேதாவி ஆகிவிட்ட உங்கள் மகன்
நம்பியிடம் அதைப்பற்றி கேளுங்கள்.அப்படின்னு சொன்னாராம்.
அதுக்கப்புறம் அவர் நம்பிய அழைச்சு நடந்த விஷயத்தெல்லாம்
விவரிச்சாரா? அதுக்கப்புறம் இது குறிச்சு
நம்பிக்கிட்ட அபிப்ராயம் கேட்டாராம்.
அதற்கு நம்பி என் தந்தை மேற்கொண்டு உதவி செய்ய

(39:22):
விரும்பினால். அவர் சுகுமாரனுக்கு பகைவராக மாற
வேண்டும். இதுவே எனது யோசனை அப்படின்னு
சொன்னானா மத்த மூவரும் திடுகிட்டாங்களாம்.
சுகுமாரா அப்படின்னு தொடர்ந்து நம்பி நீ இதுவரைக்கும் என்னோட
தந்தை செஞ்ச உதவிகள் எல்லாம் மறந்துட்டு அவர உன்னோட பகைவராக
நினைக்கணும். அவரை பழிக்கு பழி வாங்க முயற்சி

(39:44):
செய். அவர் பழி வாங்குனதுக்கு அப்பறம்
உன்னோட கவனத்தை உன் சொந்தக்காரர்களிடம் திருப்பு
அவர்கள அதுக்கப்புறம் பழிவாங்கு அப்படின்னு சொன்னானா?
நம்பி சொன்னத கேட்டு அவனோட தந்தையும் சுகுமாரனும் அதிர்ச்சி
அடைய குரு மட்டும் அத புரிஞ்சுக்கொண்டவரா புன்னகை
புரிந்தாராம். அவனோட யோசனையையும் ஆமோதிச்சாரா?

(40:08):
இந்த இடத்துல கதையை நிறுத்தின வேதாளம் விக்ரமனை பார்த்து மண்ணா
நம்பி ஏற்கனவே மந்த புத்தி உடையவன்.
அதனால தான் உதவி செஞ்சு அவங்கள போய் பகைவரா நினைக்கிறேன்.
ஆனா மகா புத்திசாலியான குரு ஞானேந்திரர் நம்பியோட யோசனையை
எப்படி ஆமோதிக்கிறார்? என்னோட இந்த சந்தேகத்துக்கு விடை

(40:30):
தெரிஞ்சும் நீ மௌனமா இருந்தா உன் தலை வெடிச்சு சுக்குனாராகும்
அப்படின்னு சொல்லித்தான். அதுக்கு விக்ரமன் சுகுமாரன்
சிறந்த அறிவாளி மட்டுமில்லாம ரொம்பவும் நல்லவனும் கூட
சுகுமாரனோட ஆத்திரத்துக்கு காரணம்தன் சொந்தக்காரர்கள் முற்றிலும்
நயவஞ்சகர்கள் அப்படின்னு. அவங்ககிட்ட நல்ல குணங்கள் எதுவும்

(40:51):
இல்லை. அப்படின்னு அவன் நினைச்சது தான்
பழி வாங்குற என்னத்த சுகுமாரன் மறக்க வேண்டும்னா முதல்ல அவன் தன்
சொந்தக்காரர்கள் கிட்ட இருக்க நல்ல குணாதிசயங்கள ஆராய வேண்டும்.
அத்தகைய மனப்பாங்க அவனுக்கு உண்டாக வேண்டும்னா அதற்கு அவன்
சரண்யான் போல தர்ம சிந்தனையாளர் ஒருத்தர் பகைவனா நினைக்க வேண்டும்

(41:13):
சரண்யன் என்னதான் பகைவராக மாறினாலும் சுகுமாரனுக்கு அவர்
மேல விரோதம் உண்டாகாது. அவர் தனக்கு செஞ்ச உதவிகளை
மட்டுமே நினைவில் நிறுத்தி. அவரு அவன் மன்னிச்சுருவான்.
அதனால அவனோட பழிவாங்கும் எண்ணம் குறைஞ்சிடும்.
அதனால தான் நம்பி தன் தந்தை சரண்யென விரோதியா பாவிக்கும்படி

(41:34):
அவனுக்கு அறிகுறி கூறினான். அவன் கூறியது அபத்தமான யோசனை
கிடையாது. மாறாக நன்கு சிந்தித்த பிறகு அவன்
கூறிய மிக சிறந்த யோசனை ஆகும். அப்படின்னு சொன்னானா?
விக்ரமனோட சரியான இந்த பதிலாக அவனோட மௌனம் கலைஞ்சதும் வேதாளம்
தான் புகுந்திருந்த உடம்போட பறந்து போய் திருப்பியும் முருங்க

(41:56):
மரத்துல ஏறிண்டு தான். அவ்ளோ தான்.
கடுமையான முயற்சி. தன் முயற்சியில் சற்றும் மனம்
தளராத விக்ரமன் திருப்பியும் மரத்துல ஏறி அதுல தொங்குன உடம்ப
கீழ தள்ளினா. அப்பறம் அவன் கீழ இறங்கி அத

(42:19):
தூக்கிட்டு மாயாணத்தை நோக்கி போகும்போது அதுல இருந்த வேதாளம்
விக்ரமன பாத்து மண்ணா ராத்திரி பகல் பாக்காம இந்த மயானத்துல நீ
இவ்ளோ கடுமையான முயற்சி செய்றது யாருக்காக?
உன்னோட ஏதாவது லட்சம் நிறைவேறுறதுக்காகவா அல்லது வேற
யாருக்காகவோ செய்கிறியா? கிருபானந்தா அப்படிங்குற வஞ்சக

(42:42):
யோகி ஒரு தடவ மூணு பேர ரொம்ப சிரமபடம் செஞ்சான்.
அவனோட கதையை சொல்றேன். கேள் அப்படின்னு தான் வேதாளம்.
ஒரு கிராமத்துல ராமன் பீமன் சோமன்அப்படின்னு மூணு வாலிபர்கள்
நண்பர்களாக இருந்தாங்க. ராமன் கல்வி அறிவு உள்ளவன் பீமன்

(43:02):
மல்யுத்தத்தில் கெட்டிக்காரன் சோமன் தண்ணில மூழ்கி பல வித்தைகளை
செய்யக்கூடியவன். இந்த மூணு பேரும் தங்களோட பலவித
வித்தைகளின் திறமையால அந்த கிராமத்து மக்களோட ஆதரவாளையும்
சொற்ப வருமானம் பெற்று அவங்களோட காலத்து கழிச்சுண்டு வந்தாங்க.
ஒரு சமயம் கிராமத்துல பஞ்சம் ஏற்பட்டதால அவங்க வேல தேடி

(43:25):
ஸ்ரீநகர் அடைஞ்சாங்க. ஸ்ரீநகர் ல ஈஸ்வரன் அப்படிங்குற
ஜமீன்தார் வாசிச்சுண்டு வந்தார். ஒரு சமயம் அவர் வீட்டுக்கு
கிருபானந்தா அப்படிங்குற யோகி வருகை தந்தார்.
ஜமீன்தாரோட உபசாரங்களால ரொம்ப திருப்தி அடைஞ்ச அந்த யோகி உன்னோட
மருமகள் விரைவிலேயே ஒரு ஆண்மகவை பெற்றெடுப்பால் அப்படின்னு

(43:47):
வாழ்த்தினாராம். உடனே ஈஸ்வரனோட மனைவி சுவாமி
எங்களுக்கு தான் இன்னும் குழந்தையே இல்லையே.
அப்படி இருக்க பேரன் எப்படி போறப்பான் அப்படின்னு
கேட்டாங்களாம். கொஞ்ச நேரம் தன்னோட கண்களை மூடி
யோசனைல ஆழ்ந்த யோகி அம்மா அது தெய்வவாக்கு நீங்க யாராவது ஒரு
வயது வந்த வாலிபன தத்தெடுத்து அவனுக்கு கல்யாணம் செஞ்சு வைங்க.

(44:12):
அவனுக்கு விரைவிலேயே குழந்தை பிறக்கும் அப்படினார் அந்த யோகி
சரியாக அந்த சமயத்துல ராமன், பீமன், சோமன் ஆகிய மூணு பேரும்.
ஈஸ்வரனோட வீட்டு கதவ தட்டினாங்க. ஈஸ்வரன் கதவ தொறந்ததும் அந்த மூணு
பேரும் தங்கள் அறிமுகம் செஞ்சுகிறதுக்கு முன்னாடியே
கிருபானந்த யோகி அந்த மூணு பேரையும் பெயரிட்டு அழைச்சு அவங்க

(44:36):
அங்க வந்திருக்கிறதோட நோக்கத்தையும் சொன்னாராம்.
அது அந்த மூணு பேரும் ஆச்சரியத்தோட கேட்டுட்டு
இருக்கும்போது அந்த யோகி தொடர்ந்து.
இந்த பாருங்க. இந்த ஜமீன்தாருக்கு குழந்தை
பாக்கியம் இல்ல. அவரோட மனைவி கர்ப்பமாகிறதுக்காக
தசரத மழையில உள்ள வசிஷ்ட மரத்திலிருந்து ஒரு பழம் கொண்டு
வந்து கொடுக்கணும். அத சாப்பிட்டா அவள் தாயாவால் ஆனா

(45:01):
தசரத மலை பத்தி ஒரு சின்ன தகவல் மட்டும் தான் என்னால உங்களுக்கு
தர முடியும். அது மேற்கு திசையில் இல்ல.
அதனால மத்த மூணு திசைகளையும் ஆளுக்கு ஒரு திசையா போய் தேடுங்க.
ரெண்டு மாசத்துக்குள்ள யார் மொதல்ல அந்த வசிஷ்ட
மரத்திலிருந்து பழம் கொண்டு வரானோஅவனுக்கு ஜமீன்தார் தன்னோட

(45:21):
சொத்துல பாதிய எழுதித் தருவார். மூணு மாசமாகியும் ஒருத்தராளையும்
கொண்டு வர முடியல. அப்படின்னா நீங்க மூணு பேரும்
திரும்பி வந்துருங்க. உங்க மூணு பேருல யார் ரொம்ப
கடுமையான முயற்சி செஞ்சானோ அல்லதுகஷ்டமான வேலை செஞ்சானோ அவன
ஜமீன்தார் தன்னோட ஸ்வீகார புத்திரனா தத்தெடுத்து பார்.

(45:42):
அப்படி நாராந்த யோகி உடனே அந்த மூணு பேரும் யோகிய வணங்கிட்டு
அங்கிருந்து புறப்பட்டு போனாங்க. ராமன் வடக்கு திசையை நோக்கி போனா
போற இடமெல்லாம் தசரத மலைய பத்தி விசாரிச்சுண்டே போனா ஆனா யாரும்
சரியாவே அவனுக்கு பதில் சொல்லல. வழில ஒரு கிராமத்துல கோவிந்தன்

(46:03):
அப்படிங்குற வியாபாரி தனக்கு அந்தமலைய பத்தி தெரியும் அப்படின்னு
சொன்னா உடனே அவளோட ராமன் அவன விசாரிக்க ஆரம்பிச்சான்.
ஆனா அதுக்கு அவனும் என் வீட்ல. ஆறு வாரம் எடுபடி வேலை செய்.
நீ நல்லா வேலை செய்றவனாகவும் புத்திசாலியாகவும் இருப்பதாக
எனக்கு தோனுச்சுனா அதுக்கு அப்புறமா நான் உனக்கு அந்த மலைய

(46:25):
பத்தின விவரித்த சொல்றேன். அப்படி நானா உடனே ராமன் அந்த
வியாபாரியோட வீட்ல வேலைக்கு சேர்ந்தான்.
நல்லா கல்வி கற்று இருந்த அவன அந்த வியாபாரி எடுபிடி வேலைகள்ல
ஈடுபடுத்தினா தன்னோட தகுதியையும் தான் செய்யும் வேலையும் நினைச்சு
ராமன். வருந்தினா இருந்தாலும் தசரதமலைய

(46:45):
பத்தின விவரத்த தெரிஞ்சுக்கணும். அப்டிங்கறதுக்காக அது
எல்லாத்தையும் பொறுத்துண்டா? ஆறு வாரங்கள் வேலை செஞ்சு முடிச்ச
அப்பறம் வியாபாரி கிட்ட தசரத மழையபத்தி ராமன் கேட்டான்.
உடனே அந்த கோவிந்தன் நீ உழைப்பாளிஅப்படிங்கிறதுல சந்தேகம் இல்ல.
ஆனா மாடு போல உழைச்ச உடனே எப்படி புத்திசாலின்னு சொல்றது.

(47:06):
அதனால உனக்கு நான் சொல்ல மாட்டேன்.
அப்படின்ட்டானா தனக்கு இருந்த காலக்கேடுல பாதி முடிஞ்சிட்டு
நெனச்சு இதுக்கு மேல அலஞ்சு பயன் இல்ல அப்டின்னு உணர்ந்த அவன்
ஸ்ரீநகருக்கு திரும்ப தீர்மானிச்சா இந்த மூணு பேர்ல
ரெண்டாவது ஆளான பீமன் தெற்கு திசைநோக்கி போனா.
விசித்திரபுரி அப்படிங்கிற கிராமத்துல அவன் தன்னோட மல்யுத்த

(47:29):
திறமையை காட்டி நம்போது அந்த கிராமத்து ஆட்கள்ல ஒருத்தனான
சூழபாணி அப்படிங்கிறவன் தம்பி உன்ன போல ஒரு ஆளத்தான் நான் பல
நாட்களா தேடிட்டு இருந்தேன். நான் மழை ஏறுறதுல விருப்பமுள்ளவன்
அஞ்சன மழை அப்படிங்குற ஒரு மலை இங்க இருக்கு.
அது மேல ஏறி பாக்கணும் அப்படின்னுஎனக்கு பல வருஷமா ஆச ஆனா உன்ன போல

(47:52):
பலமான ஒரு ஆள் என்கூட வந்தா நான் தைரியமா போவேன் யார் கண்டது நீ
தேடுற தசரதம்மாள அங்க கூட இருக்கலாம்.
அப்படின்னா அவன் உடனே பீமன் உற்சாகத்தோட சோழபாணியோட
கிளம்பினா. அந்த மலை பிரதேசத்துல ஏற்பட்ட பல
இடையூறுகளை பீமன் தன்னோட புஜ பலத்தாலயும் மல்யுத்த

(48:13):
திறமையாலையும் அவனுக்கு ஏற்பட்ட எல்லா இடையூறுகளையும் வெற்றி கரமா
சமாளிச்சா? இதுக்குள்ளேயே ஆறு வாரம் ஆனதால
அவங்களால அந்த மலைய கண்டுபிடிக்க முடியல.
அதனால பீமனும் ஸ்ரீநகருக்கு திரும்பி வந்தான்.
மூணாவது ஆளான சோமன் கிழக்கு திசை நோக்கி போனா போற இடமெல்லாம் தசரத

(48:33):
மாலை பத்தி விசாரிச்சோம். அவனுக்கு தகவல் ஏதும் கிடைக்கல.
ஒரு நாள் முல்லை ஆற்றங்கரையில் அமைஞ்சிருந்த மல்லிகாபுரி
அப்படிங்கிற கிராமத்துல ஆடிப்பெருக்கு விழா ல கலந்துனா
அங்க போன சோமன். ஆற்றுல குதிச்சு நீச்சல் அடிச்சு
பால வித்தைகள காமிச்சு அங்க இருந்தவங்கள ரொம்ப பிரமிக்க
வச்சா. அங்க இருந்தவங்கள மேகநாதன்

(48:55):
அப்படிங்கிறவன் தம்பி முல்லை யாருகடல்ல கலக்குற எடுத்துக்கிட்ட
மகரதீவு அப்படின்னு ரொம்ப அழகான தீவு ஒன்னு இருக்கு.
அங்க போகணும் அப்படிங்கிறது. என்னோட நீண்ட நாள் ஆசை ஆனா அந்த
நீர் சங்கமம் ஆகர பிரதேசத்துல ஏராளமான முதலைகள் இருக்கிறதால
யாரும் என்கூட வர தயாராகவே இல்ல. நீ வரையா ஒரு வேல மகரதீவு

(49:20):
பக்கத்திலேயே நீ தேடுற தசரத மலை கூட இருக்கலாம்.
அப்படின்னா இது கேட்ட சோமன் உற்சாகத்தோட மேகநாதன் கூட
புறப்பட்டான். ரெண்டு நாட்கள்
முள்ளையாற்றங்கரையில மேகநாதன் கூடபடகுல பயணம் செஞ்சதுக்கு அப்பறம்
அந்த ஆறு கடல்ல கலக்கிற இடம் வந்துதான் திடீர்னு ஏராளமான

(49:40):
முதலைகள். அந்த ரெண்டு பேரையும்
சூழ்ந்துண்டு அவங்கள தாக்க ஆரம்பிச்சு தான் சோமன் அத்தன
முதலைகளையும் படகோற்ற துடுப்பால டபால் டபால்னு அடிச்சு அத
பயங்கரமா காயப்படுத்தினா. முதலைகளுக்கு தீர்ந்து தப்பிச்சு
ரெண்டு பேரும் மகர தீவாடைஞ்சாங்க.ஆனா அந்த தீவா அவங்க அடைஞ்சதும்
அதுல வாழ்ந்த பழங்குடியினர். இந்த ரெண்டு பேரையும்

(50:02):
சிறைபிடிச்சு அவங்களோட தலைவன் முன்னாடி போய் நிறுத்தினாங்க.
பழங்குடியினரோட தலைவன் அவங்க ரெண்டு பேரையும் பாத்து மகர தேவி
எங்களோட குல தேவதை அவளுக்கு நாங்கநரபலி கொடுக்கிறது.
வழக்கம் உங்கள போல இந்த மாதிரி பயணிகள் யாராவது வந்தா அவங்கள
நாங்க பிடிச்சுண்டு போய் பலி கொடுத்துடுவோம்.
இங்க ஒரு முதலை குளம் இருக்கு. உங்க ரெண்டு பேரையும் அதுல வீசி

(50:26):
எறிவோம். மகர தேவி முதலையோட உருவத்துல
வந்து உங்கள கடிச்சு சாப்பிடுவா அப்டின்னா நான் அத கேட்ட ரெண்டு
பேருக்கும் இத எமே நின்னுடும் போலஆயிடுச்சா.
ஆனா கொஞ்ச நேரத்துல அத சமாளிச்சு இந்த சோமன் தலைவா மொதல்ல என்ன
குளத்துக்கு அனுப்பு. அங்க இருக்குற முதலைகள்கிட்ட
இருந்து நான் தப்பிச்சு வந்துட்டா.

(50:47):
எங்கள நீங்க விட்டுடனும் சரியா அப்படின்னு கேட்டானா?
அதுக்கு அந்த தலைவனும் சம்மதிச்சானா?
உடனே சோமன் முதலைக்குளத்துல தூக்கி வீசி எறியப்பட்டான்.
அங்க பல முதலைகள் அவன கடிச்சு தின்ன முயற்சி பண்ணியும் சோமன்
அதுக்கு ரொம்ப சாமர்த்தியமாக போக்கு.
காமிச்சு மின்னலாக அந்த இடத்திலிருந்து நீந்திடானா?

(51:10):
தலைவனும் மகர தேவி அவங்க பலியாக விரும்பல.
நம்பி அவங்கள விட்டுட்டாங்களாம். ரெண்டு பேரும் திரும்பியும்
மல்லிகா பூரி வந்து சேர்ந்தாங்களாம்.
இதுக்கு மேலயும் அந்த மழைய தேட முடியாது.
அப்படின்னு நினைச்ச சோமன் அங்கிருந்து ஸ்ரீநகருக்கு
திரும்பிட்டான். ஆக தசரத மலைய கண்டுபிடிக்காம மூணு
பேரும் ஸ்ரீநகருக்கு திரும்பி வந்துட்டாங்க.

(51:32):
நடந்த எல்லா விஷயங்களையும் கேட்டறிஞ்ச யோகி.
இந்த பாருங்க முன்னாடியே நான் சொன்னபடி தசரத மலைய கண்டுபிடிக்க
ரொம்ப கடுமையான முயற்சி செஞ்சவன ஜமீன்தான் தத்தெடுத்து பார்
அப்படின்னு சொல்லி இருந்தேன். அதன்படி உங்கள ராமன் தான்
ரொம்பவும் கஷ்டப்பட்டவன். ஆகவே அவனையே
தத்தெடுத்துகிறதுக்காக ஜமீன்தாருக்கு நான் சிபாரிசு

(51:55):
செய்கிறேன். அப்படின்னு சொன்னாரா?
இந்த இடத்துல கதை நிறுத்தின வேதாளம் விக்ரமன பாத்து மண்ணா
தசரதம்மாள் கண்டுபிடிக்க பீமனும் சோமனும் தான் ரொம்ப கடினமா
பாடுபட்டாங்க. உயிருக்கே ஆபத்து
விளைவிக்கக்கூடிய சாதனைகள் எல்லாம் புரிஞ்சாங்க.
அப்படி இருக்க கேவலம் எடுபிடி வேலை செஞ்ச ராமன போய் எப்படி யோகி

(52:18):
தேர்ந்தெடுத்தார். என் சந்தேகத்திற்கு பதில்
தெரிஞ்சும் நீ மௌனமா இருந்தா உன் தலை வெடிச்சு சுக்குநூறாயிடும்
அப்படின்னு சொல்லிச்சு. அதுக்கு விக்ரமன், பீமன், சோமன்
ரெண்டு பேரும் உண்மையாகவே பாடுபட்டாங்க.
அப்படினாலும் அவங்க செஞ்சது அவங்களோட திறமைக்கு பொருத்தமான
செயல்களே. அபாயகரமான சாதனைகள கூட அவங்க

(52:40):
உற்சாகத்தோட செஞ்சாங்க. ஒருத்தன் தன்னோட மனசுக்கு புடிச்ச
வேலை செய்யும் போது அதுல இருக்குறசிரமம் அவனுக்கு தெரியறது இல்ல.
ஆனா ராமனோட நிலைமை வேற நல்லா படிச்சிருந்தா அவன ஒரு கொத்தடிமை
போல எடுபிடி வேலைகள்ல ஈடுபட வச்சான் அந்த வியாபாரி.
அவனோட மனசுக்கு பிடிக்காத வேலையே அவனுக்கு செய்ய நேரிட்டது.

(53:01):
எதனால தசரதம்மாளைய பத்தி தெரிஞ்சுக்கணும்.
அப்படிங்குற ஆர்வத்தால தான. அதனால அந்த மூணு பேரோட நோக்கம்
ஒன்று ஆனாலும் அவங்க செய்ய நேரிட்ட முயற்சிகள் வேறுபட்டவை.
ஆகவே இந்த மூணு பேர்ல ராமன் தான் அதிகமா சிரமப்பட்டான்.
அப்படின்னு யோகி செஞ்ச தேர்வு சரியானதே.
அப்படினா விக்ரமன் விக்ரமனோட சரியான இந்த பதிலால அவனோட மௌனம்

(53:26):
களையவே அவன் சுமந்திருந்த வேதாளம்தான் புகுந்திருந்த ஒடம்போடு
பறந்து திருப்பியும் முருங்க மரத்துல ஏறி இருந்துச்சு.
அவ்ளோதான்.
Advertise With Us

Popular Podcasts

Stuff You Should Know
The Joe Rogan Experience

The Joe Rogan Experience

The official podcast of comedian Joe Rogan.

On Purpose with Jay Shetty

On Purpose with Jay Shetty

I’m Jay Shetty host of On Purpose the worlds #1 Mental Health podcast and I’m so grateful you found us. I started this podcast 5 years ago to invite you into conversations and workshops that are designed to help make you happier, healthier and more healed. I believe that when you (yes you) feel seen, heard and understood you’re able to deal with relationship struggles, work challenges and life’s ups and downs with more ease and grace. I interview experts, celebrities, thought leaders and athletes so that we can grow our mindset, build better habits and uncover a side of them we’ve never seen before. New episodes every Monday and Friday. Your support means the world to me and I don’t take it for granted — click the follow button and leave a review to help us spread the love with On Purpose. I can’t wait for you to listen to your first or 500th episode!

Music, radio and podcasts, all free. Listen online or download the iHeart App.

Connect

© 2025 iHeartMedia, Inc.