All Episodes

November 4, 2025 6 mins

In this heartwarming Tamil story, a wise king learns a priceless lesson about valuing every moment. When scholars debate the true worth of time, a humble young man helps the king realize that even a second can change one’s destiny. Through this simple yet powerful tale, children learn why time is the most precious gift; once lost, it never returns.

🎧 Listen with your child and talk about how every moment counts; whether it’s studying, playing, or helping others.

🎧 Screen-free, laughter-filled learning time for your kids; only on KadhaiNeram!

🎧 Do your kids enjoy witty, fun-filled Tamil stories? Ask them to rate us with stars on Spotify today!

🌟Explore 750+ bedtime and moral stories told in simple, pure Tamil; no ads; no fillers; just storytelling that sparks curiosity and imagination.

New episodes drop Monday to Friday; with special weekend stories by Hosur Thaatha! 

🧓✨🎙 India (IST) – 6:00 PM ; USA (EST) – 7:30 AM

🎧 Listen on all platforms → ⁠⁠⁠⁠⁠⁠⁠⁠⁠https://linktr.ee/kadhaineram⁠⁠⁠⁠⁠⁠⁠⁠⁠

🌱 Why only Tamil?So your kids ask you the meaning; listen through you; and think in Tamil — in a world full of English.

📮 Suggestions? Write to us: ⁠⁠⁠⁠⁠⁠⁠⁠⁠karutthukkalam@gmail.com⁠⁠⁠⁠⁠⁠⁠⁠⁠🏆 Winner: Best Tamil Blog; IndiBlogger Awards 2017

Tags: Value of time, tamil moral story, tamil kids podcast, tamil story for children, tamil story for kids, kadhaineram, bhargav kesavan, tamil bedtime story, tamil storytelling, tamil audio story, kids moral stories, tamil kutty kathai, time management for kids, inspirational tamil story, tamil king story, tamil podcast for children.

🖼️ Image Courtesy: Bhargav Kesavan Imagery

Mark as Played
Transcript

Episode Transcript

Available transcripts are automatically generated. Complete accuracy is not guaranteed.
(00:00):
நம்ம பாட்காஸ்ட் ல நீங்க மொதோ தடவகத கேக்குறீங்கன்னா மறக்காம
ரேட்டிங் குடுங்க. அதே போல டிஸ்க்ரிப்ஷன் ல இருக்குற
ப்ளேலிஸ்ட் பேஜ் விசிட் பண்ணுங்க.அதுல முப்பத்தஞ்சுக்கும் மேற்பட்ட
பிளேலிஸ்ட் ஒரே இடத்துல இருக்கு. எல்லா கதைகளையும் சுலபமா நீங்க
நேவிகேட் பண்ண அது யூஸ்ஃபுல்லா இருக்கும்.

(00:20):
சரியா? நற்பண்புக் கதைகள்.
காலத்தின் அருமை. விஜயபுரி அப்படிங்கிற நாட்ட
விவேகவர்மன் அப்படிங்கிற அரசன் ஆட்சி பண்ணிக்கிட்டு வந்தா.

(00:42):
அவனோட அரசவை இல்லையோ நல்லா கற்றறிந்த அறிஞர்கள் இடம்
பெற்றிருந்தாங்க. அதாவது ஒரு நாட்ட ஒரு மன்னர்
ஆட்சி பண்றாங்க. அப்படின்னா அந்த மன்னருக்கு
மட்டும் நல்ல அறிவு இருந்தா பத்தாது.
அந்த மன்னர் கூட இருக்க மத்த அமைச்சர்களுக்கும் மத்த அரசு

(01:03):
அலுவலர்களுக்கும் கூட நல்ல அறிவு,நல்ல எண்ணம், நல்ல புத்தி இது
எல்லாமே தேவை. இதெல்லாம் இருந்தா தான் ஒரு
மன்னர். இந்த அமைச்சர்கள் நல்ல வழியில
வழிகாட்ட முடியும். அதே போல அந்த மன்னரும் கூட அவங்க
நாட்ட நல்ல வகையில ஆட்சி பண்ண முடியும்.

(01:24):
அப்படி பல வருஷத்துக்கு முன்னாடி இந்த விஜயபுரி அப்படிங்கிற நாட்ட
விவேகவர்மன் அப்படிங்கிற அரசன் ஆட்சி பண்ணிக்கிட்டு வந்தா.
இந்த அரசனும் ஒரு நாள் அவன் கூட இருந்த அறிஞர்கள பாத்து அறிஞர்
பெருமக்களே. வாழ்க்கைல மிகவும் மதிப்பு

(01:44):
வாய்ந்த பொருள் எது அப்படின்னு கேட்டா.
இந்த மன்னரோ அவர் கூட இருக்குற அறிஞர்களையும், அமைச்சர்களையும்
இது போல கேள்வி கேட்கிறது. வழக்கமாக தான் இருந்தது.
அதனால எப்பயுமே அவர் கூட இருக்கிறவங்க.
நல்லா படிச்சு நிறைய விஷயங்கள் தெரிஞ்சுக்கிட்டே இருப்பாங்க.

(02:05):
அப்படி இந்த மன்னர் அந்த கேள்வி கேட்டதும் அங்க இருந்த முதல்
அறிஞரோ மண்ணா வாழ்க்கைல ரொம்பவும்மதிப்பு வாய்ந்த பொருள் உயிர்
தான். உயிர் இல்லனா நம்ம வாழ்க்கைல
ஒன்னுமே அனுபவிக்க முடியாது. அப்படின்னு சொன்னா.
அதுக்கப்புறம் மன்னர் அவர் பக்கத்துல உக்காந்திருந்தவர பாக்க

(02:28):
அந்த ரெண்டாவது அறிஞரோ மண்ணா வாழ்க்கைல மிகவும் மதிப்பு
வாய்ந்தது. அறிவுதான் அறிவு இல்லனா
ஒருத்தருமே வாழ முடியாது. அப்படின்னு பதில் சொன்னாரு.
அவரு சொன்ன பதிலை கேட்டுக்கிட்டு அவருக்கு பக்கத்துல இருந்த
மூணாவது அறிஞர் பார்த்தாரு. அவரோ எழுந்து அரசரே வாழ்க்கைல

(02:54):
பொறுமைதான் மிகவும் முக்கியம். அந்த பொறுமை இல்லனா ஒரு கனம்கூட
நம்பளால வாழ முடியாது. அதனால மிகவும் விலை உயர்ந்தது
பொறுமைதான் அப்படின்னு பதில் சொன்னாரு.
அவர் சொன்னதுக்கு சரி அப்படிங்கிறது போல தலையாட்டிட்டு
நாலாவது அறிஞர் எழுந்தாரு. மண்ணா நம்ம பூமிக்கு வேண்டிய

(03:18):
ஆற்றல் சூரியன்கிட்ட இருந்து தான்கிடைக்குது.
சூரியன் இல்லனா பூமியில உயிர்களை ஜீவிக்க முடியாது.
அதனால சூரியன் தான் உயர்ந்தது. அப்படின்னு சொன்னாரு.
இதுக்கு அப்புறமா ஐந்தாவதாக ஒரு அறிஞர் எழுந்தாரு.
மண்ணா வாழ்க்கைல எல்லாமே இருந்தும் அன்பு இல்லனா மனுஷன்

(03:42):
வாழ்ந்து ஒரு பயனுமே கிடையாது. அதனால அன்பு தான் மிக மிக மதிப்பு
வாய்ந்தது. அப்படின்னு சொன்னாரு.
இவங்க எல்லாரும் இப்படி ஒவ்வொருத்தர் பதில் சொல்லவும்.
அதையெல்லாம் தன்னோட மனசுலேயே ஆசை போட்டுக்கிட்டு அந்த பதில்களை
எல்லாம் கேட்டுகிட்டு இருந்தாரு. மன்னர் இந்த சமயத்துல கடைசியாக

(04:05):
ஆறாவதாக ஒரு அறிஞர் எழுந்து அரசே காலம் தான் எல்லாத்தையும் விட மிக
மிக மதிப்பு வாய்ந்தது. நமக்கு காலம் இல்லனா உயிர்
இருந்து என்ன பயன்? அறிவ பயன்படுத்துறதுக்கு நமக்கு
நேரம் ஏது? பொறுமையாக இருக்க தான் ஏது

(04:25):
அவகாசம். சூரியன பயன்படுத்துறதுக்கு கூட
நமக்கு எது காலம்? அன்பு காட்டுறதுக்கு ஏது
வாய்ப்பு? அதனால உலகத்திலேயே மிகவும்
மதிப்பு வாய்ந்தது காலம் தான். அதனால அந்த காலத்த நம்ம
எக்காரணத்துக்கொண்டும் வீணாக்காம நம்மளோட ஆக்கப்பணிகளுக்காக

(04:48):
எந்தெந்த வகையில எல்லாம் அத பயன்படுத்திக்க முடியுமோ அந்தந்த
வகையில எல்லாம் அது நம்ம பயன்படுத்திக்கணும்.
அப்படின்னு சொன்னாரு. இப்படி இவர் சொல்லி முடிச்சதும்
மன்னருக்கு இந்த ஆறாவது அறிஞர் சொன்ன கருத்து தான் மிகவும்
சிறந்தது அப்படின்னு பட்டுச்சு. அதனால அவர பாராட்டி காலத்தோட

(05:10):
அருமையை குறிச்சு ரொம்ப அழகாக விளக்கம் கொடுத்த இவருக்கு அவர்
மனசு விரும்பற அளவுக்கு எண்ணற்ற பரிசுகளை கொடுத்து பாராட்டினார்.
அது மட்டும் இல்லாம அவர தன்னோட அமைச்சராகவும் நியமிச்சு
கௌரவப்படுத்தினார். மத்த ஐந்து அறிஞர்களும் கூட
அரசரோட இந்த செயல பாராட்டி அவருக்கு தங்களோட வாழ்த்துக்கள்

(05:34):
தெரிவிச்சாங்க. இந்த கதையிலிருந்து நம்ம என்ன
தெரிஞ்சுக்கணும். காலம் தான் இந்த உலகத்திலேயே விலை
மதிக்க முடியாத ஒன்னு. காலத்த தவற விட்டவங்க வாழ்க்கைல
முன்னேறுவதற்கு ரொம்பவும் கஷ்டப்படுவாங்க.
அதனால இளமையாக இருக்கும்போதே நிறைய படிச்சு தெரிஞ்சுக்கணும்.

(05:57):
நம்ம பாட புத்தகத்துல இருக்குறத எல்லாம் படிச்சு மனப்பாடம்
செய்றது மட்டும் நிறைய விஷயங்கள் தெரிஞ்சுகிறதுக்கு ஏதுவாகாது.
அதனால அதையும் தாண்டி உலக விஷயங்கள், பொது விஷயங்கள்
அப்படின்னு பல விஷயங்களையும் நம்மஅப்பா அம்மா கிட்ட கேட்டு
தெரிஞ்சுக்கணும். இது நம்மளோட வாழ்க்கைல ஒவ்வொரு

(06:19):
கட்டத்துலயும் நமக்கு பொருத்தமாக இருக்கும்.
இப்ப குழந்தையாக இருக்கும் போது படிக்கிறது.
விளையாடுறதும் மிகவும் முக்கியம்.அதே போல ஒவ்வொரு பருவத்துலயும்
வளர்ந்து வரும் போது அந்தந்த காலகட்டத்துக்கு எது தேவையோ,
அதுக்கு நம்ம முக்கியத்துவம் கொடுத்து.
காலத்தை தாழ்த்தாம எல்லா செயல்களையும் செஞ்சுட்டு வரணும்.

(06:42):
சரியா? அவ்ளோதான்.
Advertise With Us

Popular Podcasts

Stuff You Should Know
Dateline NBC

Dateline NBC

Current and classic episodes, featuring compelling true-crime mysteries, powerful documentaries and in-depth investigations. Follow now to get the latest episodes of Dateline NBC completely free, or subscribe to Dateline Premium for ad-free listening and exclusive bonus content: DatelinePremium.com

The Bobby Bones Show

The Bobby Bones Show

Listen to 'The Bobby Bones Show' by downloading the daily full replay.

Music, radio and podcasts, all free. Listen online or download the iHeart App.

Connect

© 2025 iHeartMedia, Inc.